மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில், எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதி, சிறையில் தன் உடல் எடை அதிகரித்து விட்டதால், எடையை குறைக்க பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர், ஆத்மாராம் டெங்லே, 27. பாலியல் பலாத்கார வழக்கில், எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த ஜனவரியில், புனே, எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டது முதல், இவர் உடல் எடை அதிகரிக்கத் துவங்கியது. தற்போது, இவரின் உடல் எடை, 145 கிலோவாக உள்ளது. அதனால், சிறையில், தன் அன்றாட பணிகளை செய்ய முடியாத ஆத்மாராம், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்க, 90 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் மனுவை விசாரித்த நீதிபதி, என்.எச் பாட்டீல், "கைதி ஆத்மாராம் டெங்லேயின் உடல் நிலையை பரிசோதித்து, அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.