உலகிற்கு மரியாதை என்ற பண்பை கற்றுத் தரும் கோவை, தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் கோவைக்கு கிடைத்த பொக்கிஷம் மருதமலையாகும்.
இந்த மருதமலையில் வீற்றிருக்கும் மருதாசலமூர்த்தி எனப்படும் முருகன் கோயிலுக்கு நீண்ட காலமாக கட்டப்பட்டுவந்த ஏழு நிலை ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 18ம் தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மருதமலை புதுக்கோலம் பூண்டுள்ளது.
எப்போது, எப்போது என்று பக்தர்கள் ஏங்கித் தவித்த ராஜகோபுரம் பள,பளவென்று நிறைய சிற்பங்களுடனும், அழகிய மண்டபங்களுடனும் கம்பீரமாக எழுந்துள்ளது.
மருதமலையை ஏழாவது படைவீடாக போற்றுவதால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை ஆகிய ஆறு படைவீடுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்கு மண்டபங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. ஆக ஒரே இடத்தில் ஏழு படைவீட்டு முருகனையும் இனி இங்கு தரிசிக்கலாம் என்பது விசேஷமாகும்.
மருதமலையின் ஸ்தலவிருட்சமான மருதமரமும், வற்றாத சுனையான மருது சுனையும் இந்த பாம்பாட்டி சித்தர் குகைக் கோயிலருகே இப்போதும் உயிரோட்டத்துடன் இருந்து பக்தர்களை மகிழ்விக்கிறது.
மலை ஏறியதும் முதலில் தென்படும் பஞ்சவிருட்ச விநாயகர் கொஞ்சம் விசேஷசமானவர், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்னும் விசேஷமாக காட்சி தருகிறார். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகியவை பின்னி பினைந்து வளர்ந்த ஐந்து மரங்களுக்கு அடியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.
சுமார் 600 அடி உயரத்தில் அற்புதமாக அமையப் பெற்றுள்ள மருதமலை ராஜகோபுர கம்பீரத்தையும், மருதாசல மூர்த்தியாகிய முருகனின் அழகையும் இந்த தருணத்தில் காண்பது என்பது விசேஷமானது என்பதால் கோவை வரும்போது மருதமலைக்கு சென்று வாருங்கள், அல்லது மருதமலைக்கு செல்வதற்காகவே கோவைக்கு சென்று வாருங்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆஹா , எவ்வளவு நிறைவாக இருக்கிறது. நான் கோவையில் வசிக்கும்போது மருதமலை முருகனை படியேறி தரிசித்தேன். தனியாக போனதால் மிக மிக திருப்தியாக இருந்தது. சின்னப்பா தேவரின் துணைவன் படத்தின் அதியற்புதமான கண்ணதாசன் பாடல் டி.எம்.எஸ். பி.சுசீலா " மருதமலை மீதிலே குடிகொண்டிருப்பவனே..." ....முருகப்பெருமான் இல்லையென்றால் வாழ்வே சூன்யமன்றோ.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.