வழக்கமாக கட்டுரையின் முடிவில் வேண்டுகோள் வைப்பது வழக்கம், ஆனால் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே அந்த வேண்டுகோளை வைத்து விடுகிறேன், சரியாக சொல்வதானால் இது வேண்டுகோள் கூட கிடையாது, உருக்கமான வேண்டுதலாகும்.
இன்று காலை ஐந்து முறை ரத்த வாந்தி எடுத்து, சிறுநீரகம் செயல் இழந்து போய், பேச்சுத்திறன் அற்று கொஞ்சம், கொஞ்சமாக உணர்வுகள் மங்கி, உடல் உறுப்புகள் செயல் இழந்து வரும் நிலையிலும், மதுவிலக்கு கோரி விடாப்பிடியாக உண்ணாவிரதமும், மவுன விரதமும் இருந்து வரும் சசிபெருமாளின் உயிர் அநியாயமாக பலியாகிவிடக்கூடாது என்பதே அந்த வேண்டுதல்.
இந்த நிலையில் திடீரென ஒரு பெரியவர் காந்தி சிலைக்கு மலர்தூவிவிட்டு, அப்படியே உட்கார்ந்து மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார், விவரம் தெரிந்த போலீசார் பாய்ந்து வந்தனர். அவரை அப்புறப்படுத்த முயன்றனர், ஆனால் முடியவில்லை, பூரண மதுவிலக்கு கேட்டு தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.
காந்தி சிலைக்கு வந்தது முதல் கைதாகி சிறை சென்றது வரை, எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவர் சிறை செல்லாமல் தப்பித்துக் கொள்ள ஆயிரம் வழி இருந்தது, ஆனால் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கவே வந்தேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கவே சிறை செல்ல நேர்ந்தது.
சேலம் மாவட்டம், மேட்டுக்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்த 58 வயதாகும் சசிபெருமாள் ஒரு காந்தியவாதி. பிழைப்பிற்காக சொற்ப கட்டணத்தில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். மது ஒழிப்பில் தீவிரமாக செயல்படுபவர். இதற்காக சேலத்தில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டவர், இது இல்லாமல் ஒகேனக்கல் குடிநீர்ப்பிரச்னை உள்ளிட்ட பொது பிரச்னைகளுக்காக பல்வேறு அறப்போராட்டங்களை மேற்கொண்டவர்.
புழல் சிறையில் அடைத்ததும் மனிதர் ஜாமீன் கேட்டு வீட்டுக்கு போய்விடுவார் என்று பார்த்தால் சிறைக்குள்ளேயும் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார், நிலமை மோசமாகவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரை போலீசார் சேசர்த்தனர், அங்கும் அவர் உண்ணாவிரதத்தை தொடரவே அவரை டிஸ்சார்ஜ் செய்து வெளியே விட்டனர்.
ஊரைப்பிடித்துள்ள மது என்ற நோய்க்கு சிகிச்சை தரவேண்டும் என்று நினைப்பவருக்கு நாம் என்ன சிகிச்சை தருவது என்று குழம்பிப்போன ஆஸ்பத்திரி நிர்வாகம் அங்கு இருந்து அவரை வெளியேற்றியது, கூடவே வந்த போலீசார் பொது இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால் உங்களை கைது செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தது.
மது என்ற அரக்கன் சமூகத்தை கரையான் போல அரித்துவருவது என்னவோ உண்மைதான் ஆனால் அதனை ஒரே இரவில் ஒழித்துவிடமுடியாது என்ற யதார்த்தத்தை அவரிடம் சொன்னதும், ஐந்து அம்ச கோரிக்கையை எழுதி கொடுத்து இதனை அரசு கவனத்தில் கொள்வதாக சொன்னால் கூட தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக எழுதிக்காட்டினார்.
இதன் விளைவு கட்டுரை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் 32வது நாளான இன்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெரியவர் சசிகுமாரின் நிலமை மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காந்தியவாதி சசிபெருமாள் அவர்களுக்கு நன்றி, மற்றும் தாழ்வான வேண்டுகோள். நல்லவர்கள் வாழ வேண்டும். தேவை இலாதது வாழும் பொது உங்களுக்கென்ன. சமுதாயம் குடியினால் கேட்டு இருக்கிறது. அதை மாற்றுவது நல்ல உள்ளங்களின் கடமை. ஆனால் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளவேண்டும். உயிர் விலை மதிப்பற்றது. அதை காக்க வேண்டும். சுவரில்லாமல் சித்திரம் தீட்ட முடியாது. என்னுடைய வருத்தம் அப்படியும் மாறாத அரசாங்கம் நம்முடையது. தனிமனித ஒழுக்கம் ஓங்கினால் குடி பிரச்னையை ஒழிக்கலாம். என்னால் சிலரை குடியில் இருந்து மீட்க முடிந்தது. இப்படியே ஒவ்வொருவரும் குடிக்கு எதிராக இருந்கினால். நீங்கள் எதிர்பார்க்கும் சமுதாயம் இனிதே கிடைக்கும். அந்த சமுதாயத்தை காண நீங்கள் இருந்தே ஆகவேண்டும். மீண்டும் கூறுகிறேன் உயிர் விலை மதிப்பற்றது. குறிக்கோள் நிறைவேறாமல் இறப்பதும் கொழைதனமானதே. ஆரோக்கியமாக வாங்க. குடிக்கு எதிராக ஒரு கை பாப்போம். எங்களோடு கை சேர்வீர்கள் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
அவர் ஐந்து கோரிக்கைகள் தேவையான கோரிக்கைகள்ஆக தான் தெரிகின்றன. அவற்றின் நியாங்களை உணர்ந்து கொண்டு அவரின் உயிரை காக்க முயற்சி செய்வதோடு,நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு வாழ்வுக்கு தடைபடும் குடியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர் முயற்சிகலாமே...உடனடியாக அவரின் நிலையை உணர்ந்து அவசர வண்டியை வர செய்து குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று அவரை காப்பாற்ற முயற்சிப்பது ஒரு அரசின் கடமையும் கூட. ...அவர் யார் ?.எதற்காக..அரசை நாடுகிறார் ?...என்பதை விட ....ஒரு உயிரை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் கடமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்....மது கடைகள் இல்லாமலியே மாநில அரசுகள் செயல்பட்டு கொண்டு இருந்திருகின்றன. ...காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத் மாநிலத்தில் எப்போதும் மது விலக்கு இருந்து கொண்டுதானே இருக்கிறது. அந்த மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியையும் எட்டி இருகின்றதே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.