தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றி விடப்படுமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லோக்சபா தேர்தலில், பெரியண்ணன் போக்கில் கொடுக்கிற சீட்டுகளை பெற்றுக் கொள்ள வைப்பது அல்லது கூட்டணியிலிருந்து கழற்றி விடுவது என்ற அடிப்படையில், காங்கிரஸ் கட்சிக்கு, படிப்படியாக நெருக்கடிகளை அளிக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது என, தி.மு.க., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"டெசோ' மாநாடு, டில்லியில், இம்மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்றும், பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கும் என, தி.மு.க., தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில், காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன், இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குறித்த மாநாடு நடத்துவது, காங்கிரசுக்கு, தி.மு.க., தரும் நெருக்கடியாக கருதப்படுகிறது. "2ஜி' ஊழல் வழக்கு விவகாரத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு நடவடிக்கை விசாரணையில், தனது சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.

அவரது சாட்சியத்தை பதிவு செய்தால், அதன் அடிப்படையில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்கவே, கூட்டுக்குழு நடவடிக்கையில், ராஜாவிடம் சாட்சியம் கேட்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி உருவாகியுள்ளது.

ராஜாவை சாட்சியம் சொல்ல அழைக்கவில்லை என்றால், மத்திய அரசு மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ., திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எழுப்பவும் வாய்ப்புள்ளது. எனவே, ராஜாவின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதன் மூலம், காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், சி.பி.ஐ., விசாரணையை மையமாக வைத்து, தி.மு.க., விடம் காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளை பெற்றது. இந்த லோக்சபா தேர்தலில், பெரியண்ணன் போக்கில், காங்கிரஸ் கட்சிக்கு, 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க தி.மு.க., விரும்புகிறது. காங்கிரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம், அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணிக்கு சென்றாலும், தனது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என, தி.மு.க., தரப்பு கருதுகிறது. அதாவது, இலங்கை தமிழர்கள் பிரச்னை மற்றும் காவிரி, முல்லை பெரியாறு, விலைவாசி உயர்வு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் அடிப்படையில், மத்திய அரசை அ.தி.மு.க., கடுமையாக எதிர்த்து வருகிறது. இரு கட்சிகளும் இணைந்தால் மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க., அணிக்கு கிடைக்கும் என, தி.மு.க., கருதுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றால், அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற முடியாது. எனவே, அந்த கட்சிகள் தி.மு.க., அணிக்கு வர வேண்டிய நிலை உருவாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு இணையாக ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டுகள் சரிக்கட்டலாம் என்றும் தி.மு.க., தரப்பு கணக்கிட்டுள்ளது.தேசிய அளவில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து வருகிறது. குறிப்பாக, உ.பி.,யில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பாமல், சமாஜ்வாதி அல்லது பகுஜன்சமாஜ் கட்சியில் கூட்டணி வைக்க அஜித் சிங் முயற்சி செய்கிறார்.

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, காங்கிரசுக்கு உமர் அப்துல்லா நெருக்கடி அளிக்கிறார். ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டியும், காங்கிரசுக்கு எதிராக உள்ளார். மகாராஷ்டிராவில், சரத்பவாரும், அடுத்த பிரதமர் கனவில் இருக்கிறார். இந்த மாதிரியான எதிர்ப்பு அலை வீசும் போது, தமிழகத்தில் மட்டும், காங்கிரசை ஏன் தூக்கி பிடிக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு நினைக்க துவங்கியதால் தான், அடுத்தடுத்த நெருக்கடிகளை கொடுக்க தி.மு.க., தயாராகி வருகிறது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (111)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவஸ்ரீ. விபூதிபூஷண் - கோவை,இந்தியா
03-மார்-201317:57:24 IST Report Abuse
சிவஸ்ரீ. விபூதிபூஷண் திரு கருணாநிதி காங்கிரஸைக்கழற்றிவிடுவது நாட்டுக்கு நல்லது தான் ஆனால் அது கருணா நிதியின் குடும்பத்திற்கோ, காங்கிரஸிற்கோ நல்லதல்ல. விளைவு படுதோல்வி மட்டுமே.ஆக அது நடக்கவாய்ப்பில்லை. தேமுதிக வை திரு விஜயகாந்த்தை தனது கூட்டணிக்கு இழுத்துக்கொள்வதே அவர் செய்யக்கூடிய தந்திரமாக இருக்கும். ஆனால் அது திரு விஜயகாந்திற்கு அவரது கட்சிக்கும் நல்லதன்று. கிடைக்கும் வெற்றி பெரியதாக இருக்காது. ஊழல்வாதிகளை நியாயப்படுத்தியப் பாவம் அவப்பெயர் தேமுதிகவின் எதிர்கால ஆட்சிக்கனவுகளை பகல்கனவாக்கிவிடும். ஆக அவரும் கருணாவை ஏற்கமாட்டார். தேமுதிகவிற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாஜகவுடன் கூட்டணி சேர்வதே. திரு மோதி யின் ஆதரவாளர்களின் ஆதரவோடு மரியாதைக்குரிய ஓட்டுகளை சீட்டுகளை தேமுக பெறலாம்.
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
03-மார்-201317:54:30 IST Report Abuse
sitaramenv இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மானத்துடன் அரசியல் நடத்த முக்கியமாக செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு. மத்தியில் சோனியா குடும்ப உறுப்பினர்களையும் இங்கு மஞ்சள் துண்டு குடும்ப உறுப்பினர்களையும் மொத்தமாக கலட்டி விட்டு மீதி எந்த அரசியல் கட்சி யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூட்டு வைத்து கொள்ளட்டும். ஒன்றும் குடி முழுகி போய் விடாது. இந்த இரண்டு குடும்ப அதிகார வெறி பிடித்த கும்பலில் இருந்து அனைத்து கட்சி தலைவர்களும் மானத்தை காப்பாற்றி கொண்டு மீள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
03-மார்-201315:54:38 IST Report Abuse
K.Balasubramanian கோபுரத்தை பொம்மை தாங்குவது போன்ற கற்பனை . எத்தனை நாள் பலிக்கும் என பார்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
rajan - thane,இந்தியா
03-மார்-201315:25:38 IST Report Abuse
rajan எவனும் யவன் கூடும் சேருங்க ஆனா மக்களே காங்கிரசை ஓட ஓட விரட்டுங்க ,தமிழன் ரத்தம் குடித்த கட்சி அது
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-மார்-201314:28:33 IST Report Abuse
g.s,rajan கண்டிப்பா கழட்டிவிடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Guru - Madurai,இந்தியா
03-மார்-201313:58:57 IST Report Abuse
Guru அங்க ஒரு வயதானவர் மது விளக்காக சாக கிடக்கார், இங்க இந்த கிழவர் குடுபதிக்காக சண்டை போடுறாரு, என்ன சொல்ல கலி காலம்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
03-மார்-201313:58:26 IST Report Abuse
Ravichandran நீங்கள் காங்கிரஸ் சை கழட்டிவிடுவீர்களோ அல்லது அவார்கள் உங்களை கழட்டி விடுவார்களோ தெரியாது. தமிழக மக்கள் உங்களை கழட்டிவிட்டு ரொம்பநாள் ஆச்சு. அதை தெரிஞ்சிகொனும் கருணா அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
Ebrahim - chennai,இந்தியா
03-மார்-201313:01:35 IST Report Abuse
Ebrahim திமுக கலட்டி விடாது..
Rate this:
Share this comment
Cancel
tharan - chennai,இந்தியா
03-மார்-201312:42:24 IST Report Abuse
tharan தாதா நீங்க ஜெயா கூட கூட்டனி வையுங்க தாதா
Rate this:
Share this comment
Cancel
Makkal Manasu - Chennai,இந்தியா
03-மார்-201312:42:06 IST Report Abuse
Makkal Manasu குட்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்