சாட்சியம் அளிக்க அனுமதிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்: ராசா

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: கூட்டு குழு முன், சாட்சியம் அளிக்க, அனுமதிக்காவிட்டால், பார்லிமென்ட் முன், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, ராஜா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா கைது செய்யப்பட்டார். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, பி.சி.சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டு குழுவும் விசாரித்து வருகிறது. இந்த குழுவில், காங்., உள்ளிட்ட, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த, உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கை, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ராஜா, "இந்த விசாரணையில், என் தரப்பு வாதத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, என்னையும், சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர், மீரா குமாருக்கும், கூட்டு குழு தலைவர், சாக்கோவுக்கும், கடிதங்கள் எழுதியுள்ளார். ஆனாலும், சாட்சியம் அளிக்க வரும்படி, அவருக்கு இன்னும் அழைப்பு வரவில்லை.
இதுகுறித்து, பி.சி.சாக்கோ கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டு குழுவில் சாட்சியம் அளிக்க, ராஜாவை அழைக்க வேண்டும் என்ற, கட்டாயமில்லை. அதே நேரத்தில், சாட்சியம் அளிக்க, யார் யாரை அழைக்க வேண்டும் என்பது பற்றிய, இறுதிப் பட்டியல் இன்னும் தயாராகவில்லை. பார்லிமென்ட் கூட்டு குழுவில் உள்ள, அனைத்து உறுப்பினர்களுடனும், ஆலோசித்து, அதன் பின், சாட்சியம் அளிக்க யாரை அழைப்பது என்பது பற்றிய, இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். இவ்வாறு சாக்கோ கூறினார்.


உண்ணாவிரதம்?

இதற்கிடையே, கூட்டு குழு முன், சாட்சியம் அளிக்க, அனுமதிக்காவிட்டால், பார்லிமென்ட் முன், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, ராஜா அறிவித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
07-மார்-201319:12:04 IST Report Abuse
LAX வாராசா வா.... "தானை மாதிரி" அப்புடீங்கற வார்த்தையையும் முன்னே சேத்துக்கோ. "தானை மாதிரி உண்ணாவிரதமிருப்பேன்." எங்கே சொல்லு பாப்போம்....?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-மார்-201319:08:24 IST Report Abuse
Pugazh V ராஜா என்ன சொல்லிவிடுவாரோ என்று ஏன் கூட்டுக் குழுவும்மக்களும் இந்த அளவிற்கு பயப்படுகிறார்கள்? குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமலே முடிவிற்கு வருவது என்ன விதத்தில் நியாயம்? இது தர்மமா? சரியா? ஏன் அவர் சொல்ல விரும்புவதை கூட்டுக் குழு கேட்க மறுக்கிறது? அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலா? அநியாயமாக இல்லையா இது? ராஜாவின் கோரிக்கையினை விமர்சிக்காமல் அவரையும் அவரது கட்சியினையும் மட்டுமே விமர்சித்து எழுதினால் தான் இங்கே பதிப்பிக்கப்படுமா? இதே நேரம், கூட்டுக் குழு அவரை விசாரணைக்கு அழைத்து அவர் வர மறுத்திருந்தால் என்ன சொல்வீர்கள்? ஒரு தலைப் பட்சமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் கூட்டுக் குழுவின் அறிக்கையினை நிராகரிக்க வேண்டும். கட்சிக்கு அப்பார்ப்பட்டு சிந்திக்கவே மாட்டீர்களா? ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்று அல்லோலகல்லோலப் பட்டும், ராணுவ அமைச்சர் பற்றி யாருமே விமர்சிக்கவில்லை பார்த்தீர்களா? இது தான் நடுநிலை விமர்சனமா?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
03-மார்-201318:08:26 IST Report Abuse
K.Sugavanam யாரு உண்ணா விரதம் இருக்கிறதுன்னு வகை தொகையே இல்லாம போச்சு....அந்த ஜனநாயக ஆயுதத்தை கேவல படுத்தாதீங்கப்பா...போயி இருக்கற வரை நல்லா அனுபவி,வாக்கிங் மட்டும் தனியா போகாதே..அப்புடி போகணும்னா தலை முதல் பாதம் வரை இரும்பு கவசம் போட்டுக்கிட்டு போ..
Rate this:
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
03-மார்-201314:56:48 IST Report Abuse
T.Indran ராஜா நீங்க ஊழல் செய்யலை என்று சொல்றீங்க. அப்படினா, திகார் ஜெயிலில் ஸிபிஐ உங்களை போட்ட போது ஏன் எதிர்ப்பை காட்டி உண்ணாவிரதம் இருக்கவில்லை. உங்க கட்சியும் உங்களுக்காக பெருசா ஒண்ணும் போராட்டம் நடத்தவில்லை. இப்போது போய் உண்ணா விரத போராட்டம் நடத்த் வேண்டிய அவசியம் என்ன.
Rate this:
Share this comment
Cancel
robin - tamil nadu,இந்தியா
03-மார்-201314:56:31 IST Report Abuse
robin உங்களோட சாதனைகளை நாங்கள் தினம் தினம் எண்ணி பார்க்கிறோம் ....தமிழர்களை உலக அளவில் தலைநிமிர்ந்து பார்க்க வைத்த மாபெரும் மனிதர் நீங்கள் .......
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
03-மார்-201314:23:06 IST Report Abuse
g.s,rajan இந்தியாவுல நீதி இல்ல நிதிதான் நம்ம அரசியல்வாதிங்க கிட்ட நிறைய இருக்கு உண்ணா விரதத்தையே இழிவு படுத்தியவர்கள் நம்ம நாட்டு அரசியல்வாதிகள்தான் 1 ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-மார்-201314:08:58 IST Report Abuse
Nallavan Nallavan உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இப்படியெல்லாம் செய் என்று ராசா மிரட்டப்பட்டுள்ளார் ..... "நான் வாய் தொறந்தா பலர் உள்ளே போக வேண்டியதிருக்கும்-ன்னு முன்னாடி சொன்ன ராசா .... அதுக்கப்புறம் அந்த மாதிரி பேசாதது கவனிக்கத் தக்கது .... எல்லாம் "நிதி" ரகசியம் .... "சிதம்பர" ரகசியம் ....
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
03-மார்-201314:08:56 IST Report Abuse
Skv உண்ணாவிரதமா காலைஉனவுக்கு உப்புமா சட்னி மதியம் பிரியாணி மாலை ப்ரெட் சண்ட்விட்ச்இரவு ரோடி சப்ஜி அண்ட் ஒருக்லாஸ் பால்
Rate this:
Share this comment
Cancel
Er. S. ARJUNAN - Doha,கத்தார்
03-மார்-201313:26:58 IST Report Abuse
Er. S. ARJUNAN ம்... ம்........ என்னையும் சேதுக்குங்க இல்ல நான் அழுதிருவேன் ................
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
03-மார்-201313:22:06 IST Report Abuse
Prabhakaran Shenoy நீ உண்ணாவிரதம் இருப்பதால் காந்தியவாதி ஆகிவிடுவாயோ. உன்னால் நாட்டுக்கு பொருளாதார நட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்