ஆதரவாளர்களுடன், மத்திய அமைச்சர் வாசன் நடத்திய திடீர் ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வாசன் வீட்டில், இக்கூட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆதரவாளர்கள், வாசனை சந்திக்க வந்திருந்தனர். ஆதரவாளர்களை வரவேற்கும் வகையில், ஷாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வாசனை, வரிசையில் நின்று சந்திக்கும் வகையில், கயிறு கட்டி, தொண்டர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இதன் மூலம், ஆதரவாளர்களுடனான சந்திப்பு, திட்டமிட்டே நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், வாசன் ஆதரவாளரான, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உட்பட, மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை என, கூறப்படுகிறது. தமிழகத்தில், தனக்குள்ள செல்வாக்கை உறுதி செய்வதற்காக, ஆதாரவாளர்கள் கூட்டத்தை, வாசன் நடத்தியதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த, யுவராஜ், கடந்த வாரம், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இளைஞர் காங்கிரஸ், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளராக இருந்த, ஐஸ்வர்யா, தற்கொலை செய்து கொண்டதற்கு, யுவராஜ் தான் காரணம் என, குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தற்கொலை தொடர்பாக, எவ்வித புகாரும், தன் மீது, இல்லாத நிலையில், சஸ்பெண்ட் செய்தது முறையற்றது என, யுவராஜ் கூறினார். இதற்கிடையே, ஐஸ்வர்யா தற்கொலைக்கு, யுவராஜ் தான் காரணம் என, மத்திய அமைச்சர் சிதம்பரம் கோஷ்டியினர் கொடுத்த புகார் மீது தான், ராகுல் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும், "நடவடிக்கை எடுக்க வேண்டாம்; யுவராஜை கண்டிக்கிறேன்' என, வாசன் கூறியும், ராகுல் நடவடிக்கை எடுத்து விட்டார் என்றும், காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர். "தன் ஆதரவாளர் என்று தெரிந்தும், ராகுல் நடவடிக்கை எடுத்ததால், கோபமடைந்த வாசன், ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தினார்' என, காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகிறார். வாசனின் போக்கு, அவரது தந்தை மூப்பனார், த.மா.கா.,வை துவங்கியது போன்ற செயல் என்றும், வர்ணிக்கின்றனர். தமிழக காங்கிரஸ், வாசன் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பாததால், ராகுல் நடவடிக்கை எடுத்து வருகிறார் என, தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டம் நடப்பது தொடர்பாக, மொபைல் போன் மூலம் அழைப்பு அனுப்பியுள்ளனர். குறிப்பாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் நீக்கம் தொடர்பாக, ஏற்பட்டுள்ள கோபத்தில், கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. யுவராஜ் மீது, தலைமையிடம் புகார் கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி, விசாரணை நடத்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு, யுவராஜை கட்சி தலைமை கேட்டுக் கொண்டது. ஆனால், தலைமையின் உத்தரவை அவர் ஏற்கவில்லை. அதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த பிரச்னையில், கட்சித் தலைமைக்கு எதிராக திரள்வது என்பதை, ஏற்றுக் கொள்ளமுடியாது. வாசனும், இதை நன்கு உணர்ந்தவர். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
வாசன் வீட்டில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு சனிக்கிழமையும் சத்தியமூர்த்தி பவனில், தொண்டர்களை வாசன் சந்திப்பது வழக்கம். மாநில தலைவர் சென்னையில் இல்லாததால், தொண்டர்களை தன் வீட்டில் சந்தித்தார். யுவராஜ் மீதான, நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, பல தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். "இதுகுறித்து, கட்சி தலைமையிடம் பேசுகிறேன்' என, வாசன் உறுதியளித்தார். மூப்பனார் வழியில் தனிக் கட்சி போன்ற எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதுபோன்ற தகவல்கள் பொய்யானவை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசன் தமிழ் மாநில காங்கிரசை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்துவிட்டது மாபெரும் தவறு. வாசன் தன அரசியல் வாழ்கையின் நீண்ட நாட்களை பற்றி யோசிக்காமல் குறிகிய நலனுக்காக இணைத்துவிட்டார். காங்கரஸ் கட்சி இன்று ஒன்றும் தெரியாத ராகுல் கையில் சிக்கி விட்டது. இவர் பிரசாரம் செய்த அணைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் மண்ணை கவ்வி விட்டது. இதில் இவர் துணை தலைவர் வேறு. அதனால்தான் அணைத்து மாநிலத்திலும் உள்ள கட்சி தலைவர்கள் தன் சொல் பேச்சை கேட்க்கும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏறக்குறைய மன்னராட்சியின் வெளிபாடுதான் இது. ராகுலுடன் ஒப்பிடுகையில் வாசன் அனுபவசாலி மற்றும் திறமையானவரே. ராகுல் போன்ற குறை குடத்திற்கு பணித்து செல்வது மாநிலத்திற்கும் அவருக்கும் நல்லதல்ல. காங்கிரஸ் தமிழ் நாட்டிற்காக என்றுமே நல்லது செய்ததில்லை. காவிரி விவகாரம் ஒரு நல்ல உதாரணம். உச்ச நீதி மன்றம் மூன்று முறை கீழ்த்தரமாக விமர்சித்தபிறகே இவர்கள் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளி இட்டார்கள் என்றால் தமிழ் நாட்டின் மீது என்ன ஒரு வன்மத்தோடு இருகிறார்கள். அப்படி பட்டவர்களோடு காவிரி டெல்ட பகுதியில் இருக்கும் வாசன் இருக்க கூடாது. ராகுலை பற்றி ராம் ஜெத்மலானி கூறிய வார்த்தைகள் 100% உண்மை. என்னுடய அலுவலகத்தில் இருக்கும் கடை நிலை ஊழியருக்கு இருக்கும் தகுதி கூட ராகுலுக்கு கிடையாது என்று கூறினார். ஒரு ஆபீஸ் பாயாக இருக்க கூட தகுதி இல்லாத ஒருவரை வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தலைவர் ஆக்குவது கீழ்த்தரமான மன்னராட்சி முறையை நினிவுருதுகிறது. இதற்க்கு பிரிட்டிஷ் காரனே இந்தியாவை ஆண்டிருக்கலாம்.
அடேங்கப்பா..என்னா கூட்டம் பாருங்கள்..காங்கிரஸ் பயங்கர வளர்ச்சி கண்டுள்ளது..இதுவரை எனது கணக்குப்படி 11 பேர் இருந்த கட்சி இப்போது பாருங்கள்..ஓர் மத்திய அமைச்சர் காங்கிரசின் வளர்ச்சியை பறைசாற்ற கூட்டத்தை கூட்டி கணக்கு காட்டிவிட்டார்கள்..19 பேர் அமைச்சரை சுற்றி...இந்த பத்தொன்பது பேருக்கும் எம் பி சீட்டு கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் திமுக..சூப்பர் கூட்டணி..சூப்பர் காங்கிரஸ் கட்சி..நிஜமாகவே நம்பவே முடியவில்லை..அசுர வளர்ச்சி என்பார்களே அது இதுதானோ? சான்சே இல்லை..
தண்ணிப்பாம்பை ரெண்டா வெட்டி போட்டா அதுக்கு விஷத்தன்மை வந்து விடுமா....நெனப்பு பொழப்ப கெடுத்துடும். திமுக கைவிட்டாலும் காங்கிரசால ஜெயாவோட சேர முடியாது......அதை உடைச்சு தன் ஆதரவாளரான வாசன் கோஷ்டிய வச்சி புது அணி உண்டாக்கனும்னு ஜெயாவுக்கு தோணிருக்கலாம்........ என்ன தான் கெஜகர்ணம் போட்டாலும் ஒரு புண்ணாக்கும் தமிழகத்துல வேகப்போரதில்லே ......
Please stop supporting Yuvaraja .. One of the worst fellow and dont deserve to be leader of youth congress .. because of vasan ayya only he became the Leader of youth congress.. My humble request to Vasan ayya , pls support right and able candidate for the state level post .. Dont know why still he is still supporting him .. He didnt raise any voice in favour of the common people and nothing he did for the development of the congress in Tamil nadu ... Even Ayya , if you canvas for him for one whole month , he cant win in Erode and else where .. So i request ayya to raise his voice for the able candids ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.