Jayalalithaa's plan to win loksabha pol | லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் ஜெயலலிதா வியூகம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் ஜெ., வியூகம்

Updated : மார் 04, 2013 | Added : மார் 02, 2013 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Jayalalithaa's plan to win loksabha pol தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் ஜெ., வியூகம்

லோக்சபா தேர்தல் பணிகளில் முதல்வர் ஜெயலலிதா, தற்போதே அதிரடியாக இறங்கியுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கட்சியிலும், அமைச்சரவையிலும் இன்னும், பல மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசின் பதவிக்காலம் வரும், 2014 ஏப்ரல் மாதம் முடிவடைக்கிறது. ஆனால், அதற்கு முன்பே, எப்போது வேண்டுமானாலும் லோக்சபா தேர்தல் வரலாம் என்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. அதை மெய்ப்பிப்பது போல், மத்திய அரசின் பட்ஜெட்டும் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளான, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் லோக்சபா தேர்தலை சந்திக்க, 2012 ஆகஸ்ட் மாதம் முதலே பணிகளை துவக்கி விட்டன. தி.மு.க., கடந்த மாதம் முதல், லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. முதல்கட்டமாக நிதி வசூலிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதேசமயம் நிதியைப்பற்றி கவலைப்படாத, அ.தி.மு.க., தேர்தலில், 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக மக்களை கவரும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
சமீபத்தில் காவிரி பிரச்னையில் நடுவர் மன்ற தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது, விவசாயிகள் மத்தியில், அ.தி.மு.க.,வுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதன்மூலம் தமிழக விவசாயிகளுக்கு, பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதை முதல்படியாக வைத்து அ.தி.மு.க., தன் லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது என்று கூறும் அளவுக்கு, அக்கட்சியின் செயல்பாடுகள் உள்ளது. விவசாயிகள் பிரச்னைக்கு சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு கண்ட முதல்வர் ஜெயலலிதா, அடுத்தபடியாக, தமிழக மக்கள் மனதில் கனன்று கொண்டிருக்கும் பிரச்னையாக உள்ள, இலங்கை தமிழர் பிரச்னையை, கையில் எடுத்துள்ளார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க கூடாது என்றுகூறி, சென்னையில் நடக்கவிருந்த ஆசிய தடகள போட்டிக்கும் தடை விதித்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வசதியாக, அடுத்தபடியாக கட்சியைøயும், ஆட்சியையும் சீர் செய்ய நினைத்த ஜெயலலிதா, சில நாட்களுக்கு முன் செயல்பாடில்லாத, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய அமைச்சர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். மேலும் புகார் மற்றும் அதிருப்தி உள்ள மாவட்ட செயலாளர்களுக்கும் கல்தா கொடுத்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் அதிரடி செயல்பாடுகள், சோர்ந்து போயிருந்த அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அதிருப்தி உள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், கட்சியினரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கண்ட அதிரடி செயல்பாடுகள் மூலம், விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் லோக்சபா தேர்தலை சந்திக்க, முதல்வர் ஜெயலலிதா தயாராகி விட்டார் என்பது தெளிவாகி தெரிகிறது. கட்சியினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், இன்னும் பல மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் அதிரடியாக மாற்ற, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூறுகின்றனர். அப்போது தேர்தல் பணிகளில் அனுபவம் மிக்க, கட்சியினரை அரவனைத்துச் செல்லும் பலர், மீண்டும் பதவிக்கு வருவர் என்றும் கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devaraj - moolekaodu ,சுரிநாம்
03-மார்-201319:28:13 IST Report Abuse
Devaraj 2014 நடை பெற உள்ள தேர்தலில் கண்டிப்பாக காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் தோல்வியை தழுவும். ஏனென்றால் அணைத்து துறைகலில் ஊழல் ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை, பாகிஸ்தான் இடம் தையிரியமாக இல்லலாது, குட்டி சிங்கள நாட்டிடம் மண்டியிடுவது, விலை வாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற காரணம். தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறையை தீர்த்தல், நல்ல நிர்வாகம் போன்ற அம்சங்கள் அதிமுக விற்கு சாதகமாக அமையும். திமுக பௌருதவரை காங்கிரஸ் கூட்டணி அதை பள்ளத்தில் தள்ளி சமாதி கட்டிவிடும். காங்கிரஸ் யை கழட்டி விட்டால் சில இடங்கள் கிடைக்கும். கேப்டன் கூட்டணி திமுகவிற்கு சாதகமாக இருக்காது. மர வேட்டிகள் கட்சி ஒன்றும் இல்லாமல் போய் விடும்..
Rate this:
Share this comment
Cancel
panneerselvam - thajore,இந்தியா
03-மார்-201316:13:45 IST Report Abuse
panneerselvam ஊழலுக்கு எதிராக பேசும் ஒரே தலைவன் அர்விந்த் கேஜ்ரிவால்...ஆம் ஆத்மி கட்சி ஊழல் இல்லாத கட்சி..
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
03-மார்-201314:36:19 IST Report Abuse
p.saravanan இந்திய தேசிய அரசியலில் இரு மபெரும் சக்தி ஆட்சியில் அமரபோகிறவர்கள் குஜராத் முதல்வரும் , தமிழக முதல்வரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.
Rate this:
Share this comment
krishna - cbe,இந்தியா
03-மார்-201319:39:35 IST Report Abuse
krishnaநல்ல நகைச்சுவை ...
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
03-மார்-201314:30:54 IST Report Abuse
GUNAVENDHAN இன்று அல்ல என்றைக்குமே , இதுவரை நாம் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் மற்ற மற்ற கட்சிகள் எல்லாம் , முதலில் யாராவது அறிவிக்கட்டும் , எந்த தொகுதிக்கு யாரை வேட்பாளராக அறிவிக்கின்றார்கள் என்பதை பார்த்து அதற்க்கு தகுந்தாற்போல நாம் நம் கட்சி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று இருக்கும் தருணத்தில் எல்லாம் , நீங்கள் யாரை வேட்ப்பாளராக அறிவித்தாலும் எனக்கு கவலையில்லை, என்னுடைய வேட்பாளர் இவர் தான் என்று முதலில் துணிந்து தன் கட்சி வேட்பாளர்களை அறிவிப்பவர், ஒவ்வொரு தேர்தலிலும் அறிவித்துகொண்டிருப்பவர் ஜெயலலிதா தான் என்பது அனைவரும் அறிந்ததே. தேர்தல் பிரச்சாரத்துக்கும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைப்பவரும் ஜெயலலிதா தான். தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கிகொண்டுள்ள ஜெயலலிதா மற்றவர்களின் வியுகத்தைபற்றிஎல்லாம் எண்ணி குழம்பிக்கொண்டிருப்பவரும் அல்ல, மற்றவர்களை பார்த்து காப்பியடிப்பவரும் அல்ல. ஜெயலலிதாவின் வியுகத்தை பார்த்துதான் மற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிகொள்ளத்தக்க விதமாக அவரது என்ன ஓட்டம், திட்டமிடுதல், செயல்பாடு எல்லாமும் அமைந்துள்ளன. ஜெயலலிதா எடுக்கும் எந்த முடிவிலாவது, அந்த முடிவினை செயல்படுத்தும் விதத்திலாவது குழப்பம் இருக்கின்றதா என்று பாருங்கள் . தாங்களும் குழம்பி தன்னை சுற்றியுள்ளவர்களையும் குழப்பிகொண்டிருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் இதில் இப்படித்தான் முடிவெடுக்கவேண்டும், இதை இப்படித்தான் செயல்படுத்தவேண்டும் என்கிற விஷயத்தில் எவ்வித குளறுபடிக்கும் இடமில்லாத நிலையில் செய்யவேண்டியதை தீர ஆலோசித்து, தொலைநோக்கு பார்வையுடன் முடிவினை மேற்கொண்டு, செயல்படுத்துவதில் ஜெயலலிதாவை மிஞ்ச தமிழகத்தில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இப்படியெல்லாம் சொல்லும் போது, மானாட மயிலாட பார்த்துகொண்டு காலத்தை ஒட்டியவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும், என்ன செய்வது பாராட்டக்கூடிய விதமாக ஜெயலலிதா செயல்பட்டு, தமிழக மக்களின் நலன்களை காத்து , பாராட்டுமழையில் நனைகின்றார். இன்று வெம்பிக்கொண்டிருப்பவர்களும் , அன்று வெட்டி பேச்சு பேசி காலத்தை விரயம் செய்யாமல் , திட்டமிட்டு பணியாற்றியிருந்தால் , மக்களின் நலனை காத்திருந்தால் அவர்களையும் பாராட்டியிருப்பார்கள். தி.மு.க கட்சி நிர்வாகிகள் கருணாநிதியை மிகவும் விரும்புவதற்கு முக்கியமான காரணம், தாங்கள் என்ன செய்தாலும், எவ்வளவு அடாவடி செயல்களில் ஈடுபட்டாலும் , யார் சொத்தை அபகரித்தாலும், எவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட்டாலும், தன் கீழுள்ள கட்சிகாரனை எவ்வளவு போட்டு நசுக்கினாலும், ஒரு கட்டத்தில் கட்சிகாரனையே போட்டு தள்ளினாலும் கூட ஒன்றுமே தெரியாதவர் போல - எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பது, தப்பித்தவறி எதிர் கட்சியினர் விமர்சனம் செய்யத்தொடங்கினால் தங்களை காப்பற்றிவிடுவதால், தங்களுக்கு சாதகமாக அறிக்கையெல்லாம் விடுவதால், ஊழல் செய்து ஜெயிலுக்கு போய்வந்தாலும் தியாகிக்கு கொடுப்பது போல தங்களுக்கு மரியாதை கொடுப்பது போன்ற செயல்களை செய்வதால் தான். அண்ணா தி.மு.க.வில் இதையெல்லாம் எதிர்பார்க்கமுடியாது , எதிர்பார்க்கவும் கூடாது என்பதை கட்சியில் உள்ள எல்லா மட்ட தலைவர்களுக்கும் நன்கு புரியவைத்துள்ளார் ஜெயலலிதா . தி.மு.க வினர் செய்கின்ற அளவுக்கு பெரிய பெரிய தவறுகளை, குற்றங்களை செய்யவேண்டும் என்பதில்லை, சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அண்ணா.தி.மு.கவில் தண்டனை உடனடியாக உண்டு. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தன் கட்சி நிர்வாகிகளை கட்டுப்பாடாக வைத்திருப்பது அமுலில் இருந்தாலும், ஜெயலலிதா தலைமையின் கீழ் கட்சி வந்தபின் அதில் கடுமை இன்னமும் அதிகரித்துவிட்டது. அண்ணா தி.மு.கவில் தான்தோன்றித்தனமாக யாரும் நடக்கமுடியாது, அடிமட்ட தொண்டனை உருட்டி மிரட்டி அடியாளை போல நடத்த முடியாது, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முடியாது, அடுத்தவர் சொத்தை அபகரிக்க முடியாது , ஊழல் திமிங்கிலமாக வாழ முடியாது என்பதெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். அப்படி தப்பித்தவறி யாராவது தவறாக நடந்தால் தலைமை அவர்களை பாதுகாக்காது , பாதுகாக்காதது மட்டுமல்ல கட்சியைவிட்டே கூட நீக்கப்படுவார்கள். கருணாநிதி எல்லாவிஷயங்களிலும் வாய் சவடால் அடித்துக்கொண்டு இருக்கின்றாரே, இத்தகைய விஷயங்களில் அவரது அணுகுமுறை சரியா?. இது போன்ற தருணங்களில் அவர் மக்கள் அடையும் பாதிப்பை கொஞ்சமாவது உணர்ந்தாரா?. தன் கட்சிகாறரால் சராசரி பொதுஜனம் பாதிப்படையும் போது மக்களுக்காக , மக்களை பாதிப்பிலிருந்து காக்க நடவடிக்கை எடுத்ததுண்டா?. மக்கள் எக்கேடு கேட்டால் எனக்கென்ன , என் கட்சிக்காரன் செய்த அடாவடி செயல்களுக்குத்தான் நான் துணை நிற்ப்பேன் என்று துனைநின்றாரே , அதெல்லாம் ஒரு யோக்கியமான முதல்வர் செய்கிற காரியமா?. சுருக்கமாக சொல்லவேண்டுமானால் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் தானும் , தன் குடும்பத்தாரும், தன் கட்சி நிர்வாகிகளும் செய்ய உடந்தையாக இருந்தார் கருணாநிதி அதன் பலனை இப்போது அனுபவிக்கின்றார். ஜெயலலிதாவின் எண்ணம், முடிவு, அதையொட்டிய செயல்பாடு எல்லாமே தமிழக மக்களின் நலனையொட்டியெ தொடர்ந்து இருந்து வருகின்றது எனவே அவர் இப்போது அறுவடை செய்யும் காலம், அறுவடை செய்கிறார். ஆத்திரப்பட்டு, விசனப்பட்டு, கோபப்பட்டு, கிண்டலடித்து , செய்த தவறுகளை நியாயப்படுத்தி பேசி காலத்தை ஓட்டுவதை விட்டு விட்டு , கடந்த காலத்தில் செய்த தவறுகளை உணர்ந்து , வரும் காலத்திலாவது யோக்கியமானவர்களாக , மக்கள் நலனுக்காக - மக்கள் நலனையோட்டி முடிவுகளை எடுப்பவராக கருணாநிதி மாறினால் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்தது போலவாவது இருக்கும்.
Rate this:
Share this comment
Rajalakshmi - Kuwait City,குவைத்
04-மார்-201301:15:23 IST Report Abuse
RajalakshmiGUNAVHAN , உங்களை மனமார போற்றுகிறேன் மாண்புமிகு சௌ.ஜெயலலிதா அவர்களைப்பற்றி தாங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உண்மையே என்றுமே ஜெயலலிதா அவர்கள் பண்பு மிக்கவர். "சங்கு சுட்டாலும் வெண்மை தரும் " "அடினும் ஆவின் பால் சுவை குன்றாது " என்பதற்கேற்ப மற்ற கட்சிகள் மிக மிக கயமை, கீழ்த்தரமாக போயும் இப்படி இருந்தால்தான் இன்றைய கலிகாலத்தில் பிழைக்க முடியும் என்றெல்லாம் அசட்டு வாதம் செய்யாமல் நல்ல மறுமலர்ச்சியுடன் தமிழ் நாட்டிற்கு ஒரு உயிர்த்தளிர்ப்பு கொண்டு வந்திருக்கிறார். தி.மு.க. காங்கிரஸ் எல்லாம் உருப்படாத சமாசாரம். மீண்டும் உண்டியல் நீட்டி காசு வசூல் பண்ணுகிறார்களே ? அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களை நம்பினபேரின் கதி அதோகதிதான்....
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
03-மார்-201314:18:41 IST Report Abuse
Ravichandran அம்மா, பி ஜே பி மற்றும் வை கோ இணைந்தால் தி மு க வின் அத்தனை தந்திரத்தையும் முறியடிக்கலாம். நரேந்திர மோடி பிரதம வேட்பாளர் ஆனால், தமிழகத்திலும் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் விழும் என்பதை கணிக்க நீங்கள் தவறினால் அத்தகு தவறு சரித்திர தவறாகும். அ தி மு க 26 ம தி மு க 5 பி ஜே பி 5 மற்றவர் 4 அடிப்படையில் கூட்டணி வைத்தால் நாற்பதும் உங்களுக்கே. எப்படி நம்ம கணக்கு.
Rate this:
Share this comment
Cancel
kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-மார்-201312:38:14 IST Report Abuse
kavikaavya ஜெயலலிதாவின் பொறுப்பற்ற ஆட்சிக்கு இந்தமுறை மக்கள் சரியான பதிலடி தர தயாராக இருக்கிறார்கள்.ஜெயா முட்டை வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை,அதே சமயம் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் முடிவு அப்படியே தலைகீழ்.
Rate this:
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
03-மார்-201312:29:25 IST Report Abuse
Kuwait Tamilan தமிழ் நாட்டில் மின்சாரமும் தண்ணீர் பிரச்சனையும் தீரும் வரை 40 சீட்டுகளும் கண்டிப்பாக ஆதிமுக வெல்வது முடியவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
03-மார்-201311:50:52 IST Report Abuse
Ambaiyaar@raja ஜெயா அவர்கள் இப்போது உள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து தான் நிற்பார் அப்படி நிற்கும் போது மற்ற எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் நாம் எளிதா வென்று விடலாம் என்று நினைகின்றார். ஒரு வேளை கருணா காங், dmdk cpm cpi என்று கூட்டணி அமைத்தால் தான் ஜெயா MDMK பிஜேபி என்று அவர்களை தன்னுடன் கூட்டணி சேர்த்து கொள்வார். இல்லாவிட்டால் mdmk பிஜேபி இருவரும் தான் கூட்டணி சேர வாய்ப்பு அவர்களுடன் dmdk சேர்ந்தால் தமிழா, தமிழ் நாட்டுக்கு மட்டும் இல்லை எல்லாருக்குமே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-மார்-201311:08:17 IST Report Abuse
S. ரெகுநாதன் அதிமுக தலைமையில் கம்யூனிஸ்ட்கள், மதிமுக, பாமக, மற்ற கட்சிகள் கூட்டணி 2014 பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெரும்...அத்துடன், திமுக, தேமுதிக, காங் போன்ற கட்சிகள் தமிழ்நாட்டை விட்டே ஓட ஓட விரட்டபடும்... நரேந்திர மோதி தலைமையிலான NDA அரசில் ஜெயலலிதா அவர்கள் துணை பிரதமர் ஆக வாய்ப்புள்ளது...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-மார்-201312:50:40 IST Report Abuse
சு கனகராஜ் துணை பிரதமர் ஆகி தமிழகத்திற்கு பல நன்மைகளை செய்யட்டும்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
03-மார்-201314:23:49 IST Report Abuse
Pannadai Pandianநாகராஜ்....துணை பிரதமரானால் சண்டை வரும். அம்மா தமிழ்நாட்டிலேயே இருக்கட்டும். இங்கிருந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்தால் போதும். அப்புறம் அந்த மேனன்களை கூண்டில் ஏற்ற வேண்டும்....
Rate this:
Share this comment
krishna - cbe,இந்தியா
03-மார்-201315:25:37 IST Report Abuse
krishnaஎன்ன நன்மைகள் அய்யா ...
Rate this:
Share this comment
krishna - cbe,இந்தியா
03-மார்-201315:50:17 IST Report Abuse
krishnaபிரதமர் பதவி வெறும் கனவு ...
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
03-மார்-201309:57:41 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் மக்கள் மத்தியில் சமீப காலமாய் ஜெயாவுக்கு நல்ல இமேஜ் இருக்கு. மின்சாரப் பிரச்சினையை தீர்த்து விட்டால், மக்களை சந்திப்பதில் சங்கடம் இருக்காது. கூட்டணி அமைப்பதை பொருத்து, அது வெற்றியா, அல்லது மிகப்பெரிய வெற்றியா என்பது தீர்மானம் ஆகும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை