Only assets recoganise our values | "சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்'

Added : மார் 02, 2013 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Only assets recoganise our values "சொத்து இருந்தால் தான் சொந்தமும்'

சென்னை: "சொத்துகளுடன் இருந்தால் சோறு, இல்லையேல், வீட்டை விட்டு வெளியேறு' என்பதாக தான், இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் வசிக்கும் முதியோரின் நிலை உள்ளது.
எழும்பூர் ஹால்ஸ் சாலை சந்திப்பில், ஒரு தம்பதியர், வாழ்வதற்கு பணம் மற்றும் வசதி இல்லாமல், நடைபாதையில் காலத்தை கடத்தி வருகின்றனர். அவரது பெயர் ராமதாஸ், 85. அவரது மனைவி கஸ்தூரி, 78. இவர்களின் ஒரே மகள் திருமணமாகி, பொழிச்சலூரில் வசிப்பதாக கூறப்படுகிறது. தச்சராக வேலை பார்த்து வந்த ராமதாஸ், செய்ய வேண்டிய கடமையான, மகளின் திருமணத்தை முடித்துவிட்டார். தனக்கென, எந்த சொத்தும் சேர்க்கவில்லை. தற்போதைய ஒரே சொத்து, மனைவியும், முதுகு வலியும் தான். மனைவிக்கு காது கேட்காது. மனைவியின் பேச்சு கணவருக்கு மட்டுமே புரிகிறது. கணவரின் செய்கை, மனைவிக்கு மட்டுமே புரிகிறது. மகளுக்கு தொந்தரவு தர கூடாது என்ற நினைப்போடு, முன் வேலை பார்த்த எழும்பூர் பகுதியில், தனக்கென யாராவது உதவுவர் என்ற நம்பிக்கையில், எழும்பூர் ஹால்ஸ் சாலை நடைபாதையில், ஒரு பாய், சில துணிமணிகளோடு வசித்து வருகின்றனர். பரிதாபப்பட்டு யாராவது தரும் உணவை சாப்பிட்டு விட்டு, வாழ்ந்து வரும் இவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் இருப்பது தான்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-மார்-201302:04:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி //"சொத்து இருந்தால் தான் சொந்தமும், பந்தமும்' // சொத்து வழக்கு இருந்தா ?? வாய்தாவும், வக்கீலும் தான்..
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
05-மார்-201311:08:40 IST Report Abuse
R.Saminathan நம்ம குடும்பத்துல சோகத்த வச்சிக்கிட்டு அரசியல குறை சொல்லுவது தவறு.,இந்த காலத்துல உண்மையாக முதியோர்கள் வாழனுமுனா அவர்களுக்கு கிடைப்பது இந்த மாறி தெருவுதான்..,திரு.ராமதாஸ் திருமதி.கஸ்தூரி இவர்களுக்கு அமைதியான வாழ்க்கை அமையும் எனக்கு நம்பிக்கை உண்டு.., கடவுளை நான் வணங்குகிறேன்,,.
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
05-மார்-201310:32:53 IST Report Abuse
Venkatesan Jayaraman அன்புள்ள தினமலர் ஆசிரியரே தாங்கள் மனது வைத்து அந்த வயதான தம்பதியரை நல்ல விடுதியல் சேருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-மார்-201317:30:35 IST Report Abuse
Swaminathan Nath அங்கு இருக்கும் நண்பர்கள் இவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடலாம், பிள்ளை கள் இருந்தாலும் தனக்கு என கொஞ்சம் பணம் வைத்து கொள்ள வேண்டும், இது தான் இன்றைய நிலை,.
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
03-மார்-201316:01:57 IST Report Abuse
Prabhakaran Shenoy சட்டம் தன கடமையை செய்யவில்லை என்பதையே இக்காட்சி கூறுகிறது.
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
03-மார்-201314:58:45 IST Report Abuse
vasan பாவம் இவருடைய மகளின் நிலை என்னவோ தெரியவில்லை......இல்லையென்றால் கண்டிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு கண்டிப்பாக மிகுந்த பாசமும், அக்கறையும் உள்ளது.............மனசு வலிக்குது...... ஏன் எந்த உலகத்தில் பிறந்தோம் என்று ........மனிதன் பணத்திற்காக என்ன கேவலமான வேலையையும் செய்ய துணிகிறான்...........
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
03-மார்-201314:39:43 IST Report Abuse
arabuthamilan கருணாநிதி இப்போது முதல்வராக இருந்திருந்தால் இப்படி இந்த முதியோர்களுக்கு இந்த கதி வந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Anban - Coimbatore,இந்தியா
03-மார்-201313:48:30 IST Report Abuse
Anban என்னதான் மக்கள் நல திட்டங்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சுரண்டினாலும் அத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு உதாரணம். இவர்களுக்கு அரசின் விலையில்லா பொருட்கள் கிடைக்க ஈரமுள்ள அதிகாரிகள் உதவ வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
03-மார்-201313:46:01 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar இளமை..,இளமை மாற..., முதுமை வரும் நேரம்...,உறவுகளுக்கு பாரம்..,பணம்.., சொத்துக்கள் இருந்தால் தான் நேசம்..,ஒரு சிலருக்கு முதுமை இல்லம் வாசம்.., ஒரு சிலருக்கு இவர்களை போல் தெருவோரம்..,மனித உறவுகள் பிரதிபலன் பார்த்து வளர்வதால் ஒவ்வொரும் இன்றைய இளமையும் நாளைய முதுமையில் சந்திக்கும் போகும் இடர்கள்..,உறவுகள் சரியாக பராமரிக்க மனிதன் கற்றுக்கொள்ளவேண்டும் முதுமையும் இளமையும் அன்போடு ஒன்றாக வாழ வழிபிறக்கும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
neelakantan s - mumbai,இந்தியா
03-மார்-201313:39:10 IST Report Abuse
neelakantan s படிக்கும்போதே நெஞ்சு கனக்கிறது இந்த முதியவர்களை எதாவது ஒரு NGO பராமரிக்க கூடாதா மகனை விட மகள் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கோம் இந்த போட்டோவை பார்த்த பிறகாவது இவர்கள் மகள் தன்னுடன் கூட்டி செல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை