சென்னை: ""அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணிவிழா மலரை, கருணாநிதி நேற்று வெளியிட்டார். அவரது பேட்டி:இலங்கைப் பிரச்னையில், தி.மு.க.,வின் கோரிக்கையை பலமுறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, மத்திய அரசு செயல்படும் என, நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.டில்லியில் 7ம் தேதி நடைபெறும், "டெசோ' கருத்தரங்கத்தில், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கிறோம்.இலங்கை செயலைக் கண்டிக்கும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென, நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்.இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத் தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொலிப்பதாக அமையும். இந்தத் தீர்மானத்தின் மீது, இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை, தமிழக மக்கள் அக்கறையோடு கவனிக்கின்றனர்; நாங்களும் தான்.மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதற்கு, பல சான்றுகளையே ஏற்கனவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக, நல்ல காரியங்களை விட்டு விட முடியாது. அளவுக்கு மீறி மது பழக்கத்தையும், அதைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டுமா? என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இங்கே ஈழத் தமிழர்களைப் பற்றி பேசுபவர்களுக்கு இன்னொன்றையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன் நண்பர்களே. இங்கே தமிழ்நாட்டில் தினம் தினம் இலங்கை கடற்ப்படை நடத்தும் தாக்குதல்களைப் பற்றியே இந்த மாநில அரசும், மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை. ஏன் நமது தமிழகத்தில் கடலோர காவல் படை இல்லையா? அவர்களால் தங்கள் கண் முன்னே நடக்கும் இலங்கையின் தாக்குதல்களை கட்டுப்படுத்த இயலவில்லை. இங்கே நீங்களும் நானும் எழுதும் எழுத்துக்கள் எப்படி அவர்களைக் காப்பாற்றும். இத்தனைக்கும் இங்கே இலங்கைக் கடற்ப்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் "இந்தியாவில் வாழும் தமிழர்களுக்காக" நினைவில் கொள்ளுங்கள் "இந்தியாவில் வாழும் தமிழர்களுக்காக" இந்தத் தமிழ் நாட்டில் ஒருவரும் குரல் கொடுக்க இல்லாத போது இந்த அரசுகளால் ஈழத் தமிழர்களை எப்படி காப்பாற்ற முடியும். இதை எப்போது அரசியலாக்காமல் ஒரு மனித உணர்வோடு பார்க்கிறார்களோ அந்த நாள் தமிழ் ஈழம் நிச்சயம் விடியும். அது வரை நீங்களும் நானும் இப்படி எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.