நவம்பரில் அனைத்து பெண்கள் வங்கி : சிதம்பரம் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ""அனைத்து பெண்கள் வங்கி, இந்த ஆண்டு, நவம்பர் முதல் செயல்படும்; இதில், ஆண், பெண் என, இரு பாலரும் கணக்கு துவக்கி கொள்ளலாம்,'' என, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் கூறினார்.
பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள, சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:முழுவதும் பெண்களால் மட்டுமே இயக்கப்படும், பெண்களுக்கு மட்டுமே கடனுதவி வழங்கும், பெண்கள் வங்கி துவக்கப்பட வேண்டும் என்பது, என் நீண்ட கால எண்ணம். சமீபத்தில் நிறைவடைந்த, ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, "ஜெய்ப்பூர் பிரகடனத்தில்' அதுகுறித்த அம்சம் இடம் பெற்றது.அதற்கு உடனே செயல் வடிவம் கொடுக்க முடிவு செய்தோம்; அதற்கான அறிவிப்பை, பட்ஜெட்டில் வெளியிட்டேன். வங்கியின் அமைப்பு, செயல் முறைகள் போன்ற, "ப்ளூ - பிரின்ட்' தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இம்மாத இறுதியில், அப்பணிகள் நிறைவு பெறும்; இதற்காக, இரண்டு பெரிய வங்கிகளின் தலைவர்கள் மற்றும் சிலரால், பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. எப்படி பார்த்தாலும், இவ்வாண்டு நவம்பரில், அனைத்து பெண்கள் வங்கி செயல்படும்.முதற்கட்டமாக, ஆறு இடங்களில் இந்த வங்கி துவக்கப்படும். நாட்டின், ஆறு முக்கிய பகுதிகளான, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்தி மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என, ஆறு வங்கிகள் துவக்கப்படும்.பணியாளர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பர்; பெண்களுக்குத் தான் கடன் வழங்கப்படும்.
பெண்களால் செயல்படுத்தப்படும், சுயஉதவி குழுவினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். எனினும், ஆண், பெண் என இருபாலரும், கணக்கு துவக்கி, டெபாசிட் செய்து கொள்ளலாம்.இந்த வங்கிக்கு, முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், உரிமம் பெறுவதில், எந்த சிக்கலும் இருக்காது.வங்கியின் செயல்பாடு இன்னும், முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. அதற்கு பிறகு தான் பிற அம்சங்கள் தெரிய வரும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான, சுங்க வரி, உற்பத்தி வரி, சேவை வரி, காப்பீடு மற்றும் வங்கிகள் குறித்த, பல முக்கிய முடிவுகள், அறிவிப்புகள், பார்லிமென்டில் அறிவிக்கப்படும்.
பட்ஜெட் தயாரிப்பில், என் கைகள் கட்டப்படவில்லை; பொருளாதார சூழ்நிலை தான், கைகள் கட்டப்பட்டது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நேரடி வரி நெறிமுறைகள், நடப்பு பார்லிமென்ட் தொடரின், கடைசி நாளுக்கு முன் அறிமுகம் செய்யப்படும். மத்திய விற்பனை வரி அமல், மாநில நிதியமைச்சர்களின் கையில் உள்ளது.காப்பீடு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான மசோதாக்கள், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, நம்புகிறேன்.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manidhan - India,இந்தியா
04-மார்-201321:18:50 IST Report Abuse
Manidhan ஒரு ஆணுக்கு வருமானம் என்பது குடும்ப வருமானம். ஒரு பெண்ணின் வருமானம் விலை வாசி உயர்வுக்கு அஸ்திவாரம். அவர்களுக்கு இது உபரி வருமானம் என்பதே காரணம். அவர்களின் ஊதாரி செலவும் விலை உயர்வுக்கு காரணம். சாப்ட்வேர் வந்த பிறகு அதிக பெண்களுக்கும் வேலை கிடைத்தது அதே சமயம் அதிக சம்பளமும் (இரு பாலருக்கும்) கிடைத்தது. இவை இரண்டும் விலை வாசி உயர்வுக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மார்-201317:25:47 IST Report Abuse
g.s,rajan பெண்களுக்கு பாராளுமன்றத்தில் பதவிகளில் 33 சதவீத இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-மார்-201314:13:21 IST Report Abuse
Pugazh V எத்தனைப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று கூட யோசிக்காமல் //மகளிர் வங்கிகள் தேவையில்லை// என்று உளறுவதா? ஆண்களும் வங்கிக் கணக்கு துவங்கலாம் என்பதைப் படிக்காமலே காந்தி படம் போட்ட நோட்டுகள் செல்லாது என்று உளறுவதா? இதிலிருந்து ஒரு நிஜம் அப்பட்டமாக தெரிகிறது. செய்தியை முழுதாகப் படிக்காமலே, சிதம்பரம் என்றதுமே எதிர்க் கருத்து எழுதுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-மார்-201313:13:40 IST Report Abuse
சு கனகராஜ் பெண்கள் ஒட்டு உங்களுக்கு விழுமா என்பது சந்தேகம் தான். காஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை குறைத்து நாட்டில் 6 வங்கி கிளைகள் தொடங்கி விட்டால் அடுப்பு எரியுமா ?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மார்-201313:12:32 IST Report Abuse
g.s,rajan இது ஒரு பொருளாதார மேதை செய்யும் வேலையா என்ன ?
Rate this:
Share this comment
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-மார்-201310:58:38 IST Report Abuse
VENKATASUBRAMANIAN All women bank was running 15 years back in Bangalore by Syndicate bank, Seshadripuram Branch. Now PC is telling that it is first time.Totally false statement....
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
04-மார்-201310:51:01 IST Report Abuse
Mohandhas "என்னய்யா இது சின்னபுள்ள தனமா இருக்கு,,,ரூமு போட்டு யோசிப்பாங்களோ"
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
04-மார்-201310:45:16 IST Report Abuse
மும்பை தமிழன் வேலை இல்லாதவன் பூனையை பிடித்து சிரச்சானாம்
Rate this:
Share this comment
Cancel
Syedamar Khan - Dammam,சவுதி அரேபியா
04-மார்-201310:27:47 IST Report Abuse
Syedamar Khan முதல்ல இருக்கிற வங்கிக்கு ஆள நியமிங்க .. உங்க ஆட்சியில ஒன்னும் உருபடறதா தெரியல ...
Rate this:
Share this comment
Cancel
Francis Raymond - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-201310:18:18 IST Report Abuse
Francis Raymond உமது குடும்ப நலத்துக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட், எண்ணெய் வளத்தை விலை கூட்டி நாட்டை/மக்களை பொருளாதார சீரழிவுக்கு கொண்டு சென்று மக்களை படுகுழியில் தள்ளி விட்டீர், உம்மை போன்றோருக்கு என்ன கவலை உங்களை போன்றோர் குடும்பங்கள் பபம்பரை பரம்பரைக்கும் சொத்துக்களை சேர்த்தாகி விட்டது. இதோடு உமக்கு மக்கள் ஓய்வு கொடுத்து விட்டனர், நேராக வீட்டில் சென்று வக்கீல் தொழிலை பார்த்து நீர் கொள்ளை அடித்த பணத்தையும் உமக்கு வருங்கால முதல்வரான உமது மகனையும் பாதுகாக்க முயற்சி எடுக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்