தொகுதியை தக்கவைக்க கறி விருந்து: பெண் எம்.எல்.ஏ., அசத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி: தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் நேரு பாணியில், தொகுதியை தக்க வைக்க, துறையூர், அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., தொகுதியில், கட்சியினருக்கும், மக்களுக்கும் அசைவ விருந்தளித்து அசத்தி உள்ளார்.கடந்த, தி.மு.க., ஆட்சியில், பத்துக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் நடந்தது. அதிலும் திருமங்கலம் இடைத்தேர்தல் இந்திய அளவில் பேசப்படும் வகையில் மிக பிரமாண்டமான முறையில் நடந்தது. திருமங்கலம் உட்பட, தி.மு.க., ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில், வாக்காளர்களை கவரும் வகையில் புதிய முறையை, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு கொண்டு வந்தார். அது தான் கறி விருந்து.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த நேரு, இடைத்தேர்தல்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, மட்டன், சிக்கன், முட்டை, மீன் என்று, தாரளமாக அசைவ விருந்தளித்து, அவர்களை, தி.மு.க., பக்கம் நேசமாக இருக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.நேருவின் இந்த விருந்து பிரசார முறைக்கு அமோக வரவேற்பு முன்பு இருந்ததால், தி.மு.க., கட்சி தலைமையே அவரது, விருந்து வியூகம் குறித்து பாராட்டியது. அசைவ விருந்துக்கு கடிவாளம் போட முடியாமல் தேர்தல் கமிஷன் பெரும்பாடு பட்டது. தற்போது அத்தகைய விருந்தோம்பல் முறை, அ.தி.மு.க.,வினராலும் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் தேர்தல் நேரத்தில் செய்யும் அசைவ விருந்து வைபவத்தை, தொகுதியை தக்கவைக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துறையூர் தனித்தொகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி செயல்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, கட்சியினருக்கு அசைவ விருந்தளித்தார்.கடந்த மாதம், 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி துறையூர் தொகுதி கட்சியினருக்கும், மக்களுக்கும், துறையூர் நகரில் உள்ள மூன்று திருமண மண்டபங்களில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இந்திராகாந்தி சார்பில், 5,000 பேருக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இதில் மட்டன், சிக்கன், முட்டை ஆகியவை இடம் பெற்றிருந்தது. அன்றே தொகுதியில், 2,000ம் பேருக்கு வேட்டி, சேலைகளை இந்திராகாந்தி வழங்கினார்.தி.மு.க., பாணியில், தொகுதியை தக்கவைக்க, அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., இந்திராகாந்தி அசைவ விருந்தளித்து அசத்தியதே, இப்போது துறையூர் தொகுதி மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி திருச்சி மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகளும் இவ்விஷயத்தை பேசி அசைபோட்டு வருகின்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ammasi Vadivel - Singapore,சிங்கப்பூர்
04-மார்-201306:09:32 IST Report Abuse
Ammasi Vadivel அதிமுகவில் உள்ள அவலங்களை சொல்லுங்கள் ஏன் தேவை இல்லாமல் திமுகவையும் ,முன்னால் அமைச்சர் நேருவை வம்புக்கு அலைகிறார்கள்.நேரு தம்பி கொலையை இன்னும் கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை அமைச்சர் யார்? யார்? யார்?
Rate this:
Share this comment
Cancel
Korangu Kannayiram - Coimbatore,இந்தியா
04-மார்-201304:27:49 IST Report Abuse
Korangu Kannayiram உண்மைய சொன்னா உடம்பு கூசுதோ
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மார்-201303:21:09 IST Report Abuse
தமிழ்வேல் ஒரு அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ., தொகுதியில், கட்சியினருக்கும், மக்களுக்கும் அசைவ விருந்தளித்து உள்ளார்.... இது பேசப்பட வேண்டிய செய்திதான்.. ஆனால் ஒரு பழைய திமுக பிரமுகர் பாணியில் செய்தார் என்று எழுதவேண்டிய காரணம் எனக்குப் புரியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
04-மார்-201302:48:37 IST Report Abuse
Vettri வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் அ.தி.மு.க வில் சாதாரண தொண்டர்கள் கூட MLA க்கள் ஆகலாம், MP ஆகலாம், மந்திரி ஆகலாம். ஆனால் யார்க்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது. இந்தியாவிலேயே ஒரு வித்தியாசமான கட்சி என்றால் மிகை ஆகாது.
Rate this:
Share this comment
Cancel
kavikaavya - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-201302:06:38 IST Report Abuse
kavikaavya அதிமுக mla கறிவிருந்து வைத்து அசத்தியுள்ளார் என்றால் அது நியாயமான செய்தி,அதை விட்டுவிட்டு திமுகவை போல் ஐவரும் செய்துள்ளார் என்பது செய்த காரியத்தை neutralise செய்வது,எப்படியென்றால் ஜெயலலிதா ஊழல் செய்தார் என்ற செய்தியை ஜெயலலிதா திமுக செய்ததைப்போல ஊழல் செய்துள்ளார் என்பதுபோல.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
04-மார்-201300:39:36 IST Report Abuse
Thangairaja இடைத்தேர்தல் ஏதும் வரப்போகிறதா.....? பார்ட்டி உஷாராகிறதே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்