Continue "Dolly 'travel | பெயரோ அரசன்கொடை!பயணமோ ஒத்தையடிப்பாதையில்... தொடரும் "டோலி' பயணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெயரோ அரசன்கொடை!பயணமோ ஒத்தையடிப்பாதையில்... தொடரும் "டோலி' பயணம்

Added : மார் 04, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பெயரோ அரசன்கொடை!பயணமோ ஒத்தையடிப்பாதையில்... தொடரும் "டோலி' பயணம்

தாண்டிக்குடி: திண்டுக்கல், தாண்டிக்குடி மலைப்பகுதி அரசன்கொடைக்கு, ரோடு அமைக்கும் திட்டம், வனத்துறையின் அனுமதிக்காக, 16 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மலை கிராமத்தில், நோயாளிகளை, "டோலி' கட்டி தூக்கி வரும் அவலம் நீடிக்கிறது.தாண்டிக்குடி அருகே வடகவுஞ்சி ஊராட்சியை சேர்ந்தது அரசன்கொடை. இங்கு எலுமிச்சை, மலை வாழை, காபி, அவக்கடா, ஆரஞ்சு உள்ளிட்டவை விளைகின்றன. கதவுமலைநாதன் சிவன் குகைக்கோவில் இங்கு உள்ளது.இந்த கிராமத்திற்கு ரோடு வசதியில்லை; தாண்டிக்குடி-அரசன்கொடை இடையே வனப்பகுதியில், 7 கி.மீ., ஒத்தையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அத்தியாவசிய தேவை, மருத்துவ வசதிக்கு, தாண்டிக்குடிக்கு வரவேண்டும். விளைப்பொருட்களை குதிரைகள் மூலம் கொண்டு வருகின்றனர். உடல் நலம் இல்லாதவர்களை, "டோலி' கட்டி தூக்கி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த, 16 ஆண்டுகளாக, ரோடு வசதிக்காக கிராமத்தினர் போராடியும், அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது:வைகுண்டம்: இப்பகுதியில், 60 ஆண்டுகளாக வசிக்கிறோம். தொடர்ந்து, 16 ஆண்டுகளாக, ரோடு வசதிக்காக, அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்தும் பலன் இல்லை. வனத்துறை நிலம் போக எஞ்சியுள்ள இடத்தில், ஊராட்சி ஒன்றியம் மூலம் ரோடு அமைக்க திட்டம் வகுத்துள்ளனர். அரசு மனது வைத்தால், எங்கள் கிராமத்திற்கு விடியல் பிறக்கும்.தங்கத்துரை: ரோடு வசதி ஏற்படுத்தினால், அருகிலுள்ள பெரும்பள்ளம், கருவேலம்பட்டி, பட்டியக்காடு, செம்பிரான்குளம் மலை கிராமங்களும் பயன்பெறும்.முருகம்மாள்: நடந்தே எங்களது கால்கள் ஓய்ந்து விட்டன. ரோடு அமையும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. அரசு மனது வைக்க வேண்டும்.மாவட்ட வன அலுவலர் சம்பத் கூறுகையில், ""தாண்டிக்குடி-அரசன்கொடை பாதைக்கான ஆவணங்களை பரிசீலித்து வருகிறோம். சாத்தியகூறு இருந்தால், ரோடு அமைக்க அரசுக்கு பரிந்துரைப்போம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kavi arasu - Chennai,இந்தியா
06-மார்-201317:29:28 IST Report Abuse
kavi arasu அட முட்டாள் மக்களா குகை கோவில பொக்கிஷம் இருக்றதா ஒரு புரளி கெளப்பி விட்டால் ....அப்புறம் ரோடு வீடு எல்லாத்தையும் அந்த சிவன் பாத்துப்பார்..எல்லாம் சிவமயம்
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
06-மார்-201314:59:55 IST Report Abuse
ksv இந்தியன் ஒவொரு கடைசி குடிமகனுக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் இன்னும் பரிசிலிப்போம் என கிடப்பில் போடுவது சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் நமது அரசு இயந்திரம் செயல் படும் லட்சணத்தை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
04-மார்-201312:09:31 IST Report Abuse
chinnamanibalan அரசன் கொடைக்கு சாலை அமைப்பதற்கு ஆவணங்களை பரிசீலிப்பதிலேயே அரசு அதிகாரிகள் தங்கள் காலத்தை செலவிடுவது வேடிக்கையாக உள்ளது.நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு காலம் ஆகியும் , பாமர மக்களின் அடிப்படை கோரிக்கைக்கையை கூட அரசு நிறைவேற்றாதது வெட்கக்கேடானது ...
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
04-மார்-201311:45:45 IST Report Abuse
LAX இப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தேர்தல்களைத் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
04-மார்-201309:13:40 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் சாலை வசதியில்லை....ஒரு புறம் நான்கு வழி மற்றும் ஆறுவழிப்பதை அமைப்பு...மறுபுறம் இது போன்ற அவலம்..இந்தியா ஒளிர இன்னும் எத்தனை ஆண்டுகாலம் பிடிக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
04-மார்-201308:08:46 IST Report Abuse
Raj மலைப்பகுதியில் மட்டுமா நகரங்களில் கூட பல இடங்களில் ரோடு இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை