Advertisement
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013,01:04 IST
கருத்துகள்  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்களும், தமிழகத்தில் உள்ள, 18 மாவட்டங்களில், மேற்கொண்ட ஆய்வில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைகள் நடந்ததாக, 42.15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் 20 பேர், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரகத்தோடு இணைந்து, பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கடந்த மாதம், 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை, விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.
மொத்தம், 16 நாட்கள் நடந்த இப்பயணத்தில், வேலூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட, 22 மாவட்டங்களில், 3,160 கி.மீ., தூரம் பயணித்து, 1.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் துண்டு பிரசுரம் மற்றும்

வீதி நாடகங்கள் மூலம், பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்தும், அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.விழிப்புணர்வு பிரசார பயணத்தில், 18 மாவட்ட பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதா?கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வது குற்றம் என்பது மக்களுக்கு தெரியுமா? பிறக்கும் முதல் குழந்தை பெண் என்றால் விரும்புகிறார்களா? உள்ளிட்ட, 11 கேள்விகள் மூலம், 7 ஆயிரத்து 641 பேரிடம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வறிக்கை நேற்று டி.ஜி.வைஷ்ணவ்கல்லூரியில் வெளியிடப்பட்டது. ஆய்வில் தெரியவந்துள்ளவை:
18 மாவட்டங்களிலும் 18.41 சதவீதம் பேர், தங்கள் பகுதிகளில், பெண் கருக்கொலை மற்றும் சிசு கொலை நடந்துள்ளதாக, தெரிவித்துள்ளனர். இதில், அதிகளவாக 42.15 சதவீதம் பேர்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

Advertisement

பெண்களுக்கு இருக்கும் சட்ட உரிமைகள் பற்றி, 62.72 சதவீதம் பேர் அறிந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், 47 சதவீதம் பேர், அம்மாவட்டத்தில் கருவில்இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை, மருத்துவர்கள் கூறுவதாகதெரிவித்துள்ளனர்.ஸ்கேன் மையங்களில், கருவின் பாலினம் குறித்து தெரிவிக்கப்படுவதாக, திருப்பூர் மாவட்டத்தில் 82.63 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி, அறிந்து கொள்வது குற்றம் என்பதை, நாமக்கல் மாவட்டத் தில் 8 சதவீதத்தினர் மட்டுமே அறிந்து உள்ளனர்.பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதை 78.47 சதவீதத்தினர் அறிந்துள்ளனர். - நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.