மேல் குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட மேல் குந்தா, அட்டுமண் கிராமங்களில் 120க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. "அடிப்படை வசதிகள் அறவே இல்லை' என்பது இப்பகுதி மக்களின் குமுறல்.
இப்பகுதி மக்கள் கூறுகையில்,"ஊராட்சி தலைவர் வனிதாபிரகாஷ், தான் தலைவராக பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் மேல்குந்தா, அட்டுமண் கிராமத்திற்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், புறக்கணித்து வருகிறார். சீரான நீர் வினியோகம் இல்லை; நடைப்பாதை, கழிவுநீர் கால்வாய் ஆகியவை ஆங்காங்கே உடைந்து கிடப்பதால், வீடுகளின் இடையே ஓடும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மாதந்தோறும் நடக்கும் ஊராட்சி மன்ற கூட்டம், கிராம சபை கூட்டங்களில், வார்டு கவுன்சிலர், கிராம மக்கள் அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்து குரல் கொடுக்கின்றனர். ஆனால், எவ்வித பலனும் இல்லை. எங்கள் பகுதி மீது தலைவர் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் கிராமத்தின் முக்கிய விழாவான "பாறைக்கல் திருவிழா' நடக்கவுள்ள நிலையில், சுகாதார சீர்கேடு அதிகமாக உள்ளது. எங்கள் பிரச்னை குறித்து மாவட்ட கலெக்டர், முதல்வருக்கு மனு வழங்கியுள்ளோம்' என்றனர்.
---
புறக்கணிக்கப்படுகிறோம்
கவுன்சிலர் ஆதங்கம்:
==
வார்டு கவுன்சிலரும், மேல் குந்தா ஊராட்சி துணை தலைவருமான நாராயணமூர்த்தி கூறுகையில், ""ஊராட்சி தலைவராக உள்ள வனிதாபிரகாஷ், என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, மேல் குந்தா கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். மக்கள் பிரச்னைக்கு போதிய அக்கறை காட்டாமல், கட்டடங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி, பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார். மாவட்ட கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.