கூடலூர்:கூடலூர் காமராஜ்நகர் அருகே, ஜீப்-ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
கூடலூர் சூண்டியை சேர்ந்தவர் தினேஷ்ராஜ், 20. இவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் தன் ஆட்டோவில் (டிஎன்-43, இசட்1866) பயணிகளை ஏற்றி கொண்டு, சூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காமராஜ் நகர் அருகே, ஜீப் (டிஎன்-40, 0867) ஒன்று ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், ஆட்டோ டிரைவர் தினேஷ்ராஜ், அதில் பயணம் செய்த சூண்டியை சேர்ந்த வரதராஜன்,13, ரங்கசாமி,40, ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூண்டியை சேர்ந்த ஜீப் டிரைவர் யோகராஜ், 29, என்பவரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.