சென்னை: இலங்கை தூதகரத்தை முற்றுகையிட முயன்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ உட்பட, 700 பேரை, போலீசார் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நல வாழ்வு இயக்கம் சார்பில், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம், நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின், போது ராஜபக்ஷே உருவபொம்மையை ம.தி.மு.க.,வினர் தீவைத்து கொளுத்தினர். பின்னர், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட சென்ற வைகோ உட்பட, 700 பேரை, போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தால், குளக்கரை சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
700 பேரும் உணர்வுபூர்ணமான உணர்ச்சியுடன் கலந்து கொண்டவர்கள். டெசோ தலைவன் கருணாநிதிக்கு தமிழ் இன உணர்வே கிடையாது. குடும்ப விசயத்தில் மட்டும் நல்ல உணர்வுள்ள மனிதன் எனலாம். திமுகாவில் தலிவன் முதல் தொண்டன் வரை எவனுக்குமே தமிழ் இன உணர்வு கிடயாது. குவாட்டருக்கும் கோழி புரியாணிக்கும் கூக்குரலிடும் கோசம் போடும் இதுவல்ல."தமிழக மக்களின் இலங்கை எதிர்ப்பு இவ்வளவுதானா? என ராஜபக்ஷே நினைத்து மகிழ்ந்திருப்பார்" அப்படியென்றால் திமுகாவில் எவனும் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்பதை திமுக அடிவருடியான நீங்களே ஒத்து கொள்கின்றீர்கள். உணர்வு பூரணமான இந்த போராட்டம் திருச்சி சேலம் கோவை என பல இடங்களில் நடந்தது. அது மட்டுமன்றி கடலூரில் ஒருவர் உயிர் தியாகமே செய்து உள்ளார்....
இலங்கையில் போர் நடைபெற்றுக்கொண்டு இருந்த பொது உண்ணாவிரதம் நாடகம் ஆடியது யார்? கனிமொழியை ராஜபக்ஷவிடம் அனுப்பியது யார்? பரிசு கொடுத்தது யார்? ராஜபக்ஷவுடன் உறவு கொண்டாடி மகிழ்ந்து விட்டு இப்போ தேர்தல் வரவும் முகமுடியை மாற்றி வேஷம் போடும் வேச காரன் யார்? இன்று எவனாவது ஒரே ஒரு ஈழத் தமிழனாவது இந்த கருணாநிதியை வந்து எனக்காக போராடு என்று அழைத்தானா? அழையா விருந்தாளியாக இப்போது ஈழத் தமிழர்கள் விடயத்தில் மூக்கை நுழைத்து குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கின்றான். இவனின் 60 வருட அரசியல் வாழ்வில் எதையாவது ஒன்றே ஒன்றை உருப்படியாக ஈழத் தமிழனுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழனுக்கு செய்துள்ளானா? திருட்டு ரயில் ஏறி வந்து இன்று ஆசியாவின் பணக்காரன் பட்டியலில் இடம் பிடித்து மனைவி துணைவி இணைவி அணைவி என்றும் தன் குடும்பத்தை முன்னேற்றி உள்ளான். இந்திய வரலாற்றில் ஊழலில் அதி உச்ச 176 லட்சம் கோடிக்கு உரித்தானவன். இவனை பற்றி எழுதி கொண்டு போனால் பக்கம் பக்கமாக எழுதலாம். வைகோ...பழ,நெடுமாறன் பற்றி பேச கருணாநிதிக்கு எந்த அருகடியும் இல்லை. அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கைகளில் உள்ளார்கள். இவர்களின் கால் தூசுக்கு கூட தகுதியற்றவன் உன் தலைவன் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகின்றேன். ...
காந்தி உப்பு சத்தியாக்ரஹ நடைபயணம் தொடங்கியபோது அவரோடு நடைபயணத்தைத் தொடங்கியவர்கள் 71 பேர்கள் மட்டுமே. அனால் அவர் தண்டியை அடையும் பொது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அவர் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தது. எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணங்கள்தான் முக்கியம். கூட்டம் கூட்டுவது முக்கியமல்ல குறிக்கோள்தான் முக்கியம். உண்மைக்கு ஆதரவாக நிற்கும்போது ஒவ்வொருவனும் இந்த உலகத்துக்குச் சமம். அதெல்லாம் கொள்கை கொண்டவர்களுக்கு உரிய விஷயம்...... நமக்கெதற்கு? ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.