சசி பெருமாள் சுய விருப்பத்தின்படி "டிஸ்சார்ஜ்' : மது ஒழிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சசி பெருமாள் சுய விருப்பத்தின்படி "டிஸ்சார்ஜ்' : மது ஒழிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

Added : மார் 04, 2013 | கருத்துகள் (4)
Advertisement
சசி பெருமாள் சுய விருப்பத்தின்படி "டிஸ்சார்ஜ்' : மது ஒழிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்

சென்னை: காந்தியவாதி சசி பெருமாள், சுய விருப்பத்தின்படி, மருத்துவமனையில் இருந்து நேற்று, "டிஸ்சார்ஜ்' ஆனார். மது ஒழிப்பு போராட்டம், மாநில அளவில் தீவிரப்படுத்தப்படும் என, அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில், பூரண மதுவிலக்கு கோரி, காந்தியவாதி சசிபெருமாள், 33 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை கைவிட மறுத்ததால், நேற்று முன்தினம் மாலை, போலீசார், வலுக்கட்டாயமாக அவரை, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சசி பெருமாள், நேற்று எழுத்து மூலமாக தெரிவித்த வேண்டுகோளில், "மாலை, 5:00 மணிக்கு,மெரீனாவில், காந்தி சிலை முன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்; சுய விருப்பத்தின்படி, என்னை "டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். இதையடுத்து நேற்று அவர், "டிஸ்சார்ஜ்' ஆனார்.

இதுகுறித்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆர்.எம்.ஓ., ஆனந்த் பிரதாப் கூறியதாவது:
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவரை, பொது வார்டிற்கு மாற்றி, சில நாட்களுக்கு பின், "டிஸ்சார்ஜ்' செய்வது தான் நடைமுறை. இதற்கு மாறாக, சசி பெருமாள், சுய விருப்பத்தின்படி, நேற்று, "டிஸ்சார்ஜ்' ஆனதால், அவருக்கு, "டிஸ்சார்ஜ் அறிக்கை' தரப்படவில்லை. சிகிச்சையின் போது, அவரின், நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாக இருந்தன. உடலின் நீர் சத்தை பராமரிக்க, தொடர்ந்து, "குளுக்கோஸ்' செலுத்தினோம். தொடர் உண்ணாவிரதத்தால், அவரின் வயிற்றில் புண் ஏற்பட்டிருக்கலாம். இதை உறுதிச் செய்யவதற்கான, "என்டோஸ்கோபி' பரிசோதனை மேற்கொள்ள அவர் மறுத்துவிட்டார். இவ்வாறு ஆனந்த் பிரதாப் கூறினார்.

மக்கள் மதுஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது:
மது ஒழிப்பு குறித்து, மக்கள் மத்தியில் பொதுவான கருத்தை ஏற்படுத்துவது தான், சசிபெருமாள் உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம். இந்நோக்கம் நிறைவேறி உள்ளது. உண்ணாவிரதத்தின் போது, சசி பெருமாளை, தமிழக அரசின் சார்பில் யாரேனும் சந்தித்திருந்தால் கவுரவமாக இருந்திருக்கும். அடுத்தக்கட்டமாக, மாநில அளவில், மது ஒழிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-201318:32:37 IST Report Abuse
samy சசி பெருமாள் ஒன்றும் முழுமையான மது விலக்கை அமுல் படுத்த சொல்லி அரசாங்கத்திடம் சொல்ல வில்லை. சில நிபந்தனகளை நடைமுறையில் கடைபடித்தால் ஓரளவாது வருங்கால சந்ததியை மதுவின் கோர பிடியில் இருந்து காப்பற்றாலம் என்ற ஒரு ஆதங்கமே. இதையும் பல அன்பர்கள் கொச்சை படுத்துகின்றனர். முடியாது என்று இவ் உலகத்தில் ஒன்றுமே இல்லை. ஏன் பக்கத்துக்கு மாநிலமான கேரளவில் கூட 21 வயதுக்கு குறைவான உள்ளவர்களுக்கு மது விற்க கூடாது என்ற சட்டம் நடை முறை சாத்தியம் ஆகும் போது தமிழக அரசு ஏன் இதை பின் பற்ற கூடாது.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
05-மார்-201318:31:33 IST Report Abuse
K.Sugavanam பாவம் இந்த அரசுகள்,திமுகவோ,அதிமுகவோ தன்னுடைய இந்த உன்னதமான ஒரு பொருளுடைய போராட்டத்துக்கு செவி சாய்க்காது என்பதை தெரிந்திருந்தும் 34 நாட்கள் போராடி நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் இந்த பெரியவருக்கு இவரின் அடுத்தகட்ட போராட்ட முறைகள் மக்களின் உள்மனதை தாக்கி குடியிலிருந்து அவர்களே விலக வைக்கும் என நம்புவோம்..ஒன்று செய்தாலும் நன்று செய்தீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
05-மார்-201305:36:20 IST Report Abuse
ராம.ராசு மது குடிப்பதால் ஏற்படும் தீமைகளை மக்கள் உணரச் செய்ய இது போன்ற உண்ணா விரதங்கள் பயன்படுமே தவிர மது ஒழிப்பு, மதுவிலக்கு என்பதெல்லாம் இன்றையக் காலக்கட்டத்தில் சாத்தியப்படாத ஒன்று. வெட்டி விட்டு கட்டிக்கொண்டு அழுவது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது, குடி குடியைக் கெடுக்கும் என்கின்ற பழமொழிகளை நன்றாகத் தெரிந்து இருந்தும், அரசுகளின் நடவடிக்கை அதற்க்கு மாறாக இருக்கும்போது எத்தனை காந்தியவாதிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. புகைப்பிடித்தால் உடல் நலத்திற்க்குக் கெடுதல், மது வீட்டிற்கு, நாட்டிற்கு மற்றும் உடல் நலத்திற்க்குக் கேடு என்று போன்ற விளம்பரங்களை அரசே செய்கிறது. எரிவதைப் பிடிங்கினால் கொதிப்பது தானாக அடங்கிவிடும் அரசை நடத்துபுவர்களுக்குத் தெரியாதா...? புகை விளைச்சலை, விற்பனைப் பொருட்களை தங்கு தடையில்லாமல் அனுமத்தித்து விட்டு, மது தயாரிப்பு நிறுவனங்களை தாராளமாக அனுமதித்து விட்டு, அதை அரசே முழு லாபத்துடன் கூடிய வருமான இலக்கு வைத்து விற்பனையும் செய்யும்போது இது போன்ற உண்ணாவிரதங்கள் அர்த்தமற்றவைகளே.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-மார்-201305:23:24 IST Report Abuse
villupuram jeevithan ஏற்கனவே சொன்னபடி தமிழ் சினிமாவில் மது குடிக்கும் காட்சிகளை அடியோடு நீக்க முயற்சியுங்கள் முதல் படியாக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை