கணவன் மீது சந்தேகம்: பெற்ற குழந்தையை கொன்ற தாய்| Dinamalar

கணவன் மீது சந்தேகம்: பெற்ற குழந்தையை கொன்ற தாய்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கணவன் மீது சந்தேகம்: பெற்ற குழந்தையை கொன்ற தாய்

சென்னை: கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், தன் ஒரு மாத பெண் குழந்தையை கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம், மூக்காத்தாள் தெரு, டைமண்ட் அடுக்குமாடி குடியிருப்பில், வெங்கல்ராவ் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, காவலாளியாக பணிபுரிகிறார். இவர், ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர்.

சந்தேகம் என்ற நோய் : இவரது மகள் ரம்யாவுக்கும், 19, வாரங்கல்லை சேர்ந்த உறவினர் பாபுவுக்கும், 24, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும், டைமண்ட் குடியிருப்பு பகுதியில், காவலாளிக்கான அறையிலேயே வசித்து வந்தனர். பாபு பெயின்டர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு, வர்ஷா என்ற, ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாபு அடிக்கடி, அலைபேசியில் யாருடனோ பேசி உள்ளார். இது, ரம்யாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பாபுவுக்கும், ரம்யா மீது சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தம்பதிகளுக்கிடையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பாபு, ரம்யாவின் தந்தை வெங்கல்ராவ் உள்ளிட்ட சிலர், வாரங்கல்லில் நடந்த திருவிழாவுக்கு சென்றனர். ரம்யா கைக்குழந்தையுடன் இருப்பதால், அவருக்கு துணையாக, பாக்யா என்ற உறவுக்கார பெண்ணை விட்டுச் சென்றனர்.

குழந்தையை கொன்றார் : நேற்று அதிகாலை, குழந்தையை காணவில்லை என, ரம்யா கூறினார். பின், குடியிருப்பு வளாகத்தில் கிடந்த பழுதடைந்த துணி துவைக்கும் இயந்திரத்தில், துணியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து கிடப்பதாக சொல்லி கதறி அழுதார்.
தகவல் அறிந்த வேப்பேரி போலீசார், விசாரணை நடத்தினர். வெளி ஆட்கள் யாரும் இதை செய்திருக்க முடியாத நிலையில், ரம்யாவை விசாரித்தபோது, குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். கணவரை பிரிந்து, தனக்கென வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள, ரம்யா நினைத்துள்ளார். பாபு ஊருக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குழந்தையை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
06-மார்-201305:37:06 IST Report Abuse
காயத்ரி பெற்ற குழந்தையை அதுவும் ஒரு மாதமான குழந்தையைக் கொன்ற இவள் தாயா? பெண்ணினத்திற்கே அவமானத்தைத் தந்து விட்டாள், இவர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்..அந்தப் பிஞ்சு என்ன பாவம் செய்தது.. இல்லையோர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க..சீ.. உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறதோ?
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
05-மார்-201313:35:08 IST Report Abuse
PRAKASH இந்த பெண்ணை பார்த்தல் மன நலம் பாதிக்க பட்டவர் போல் தெரிகிறது...
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
05-மார்-201313:01:44 IST Report Abuse
பி.டி.முருகன்    1947 க்கு பிறகு இப்போது ஒரு பராசக்தி கிளமபியிருக்கிறாள்.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
05-மார்-201310:51:38 IST Report Abuse
Divaharan எப்படியோ வேறொரு வாழ்கை கிடைத்துவிட்டது ஜெயிலில்
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
05-மார்-201310:51:30 IST Report Abuse
BLACK CAT இந்திய வல்லரசு ஆகி விட்டது ...
Rate this:
Share this comment
Cancel
KRISHNADOSS P - Gilbert,யூ.எஸ்.ஏ
05-மார்-201309:49:54 IST Report Abuse
KRISHNADOSS P கடவுள் ஏன் கல்லனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே.......
Rate this:
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
05-மார்-201308:05:11 IST Report Abuse
Manidhan தாய் உள்ளம் மாறி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற பெண்ணுக்கு மரண தண்டனை தந்தால் அதை எதிர்க்க மனிதாபி மனமற்ற சில மனித உரிமைகள் அமைப்புகள்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
05-மார்-201305:18:46 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எப்போவ் என்ன கிராதகி இந்த ரம்யா?
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
05-மார்-201302:44:17 IST Report Abuse
sulochana kannan நல்ல மனநில்லையில் எந்த பெண்ணும் இப்படி செய்ய மாட்டாள் இதற்கும் மேல் இதில் எதுவோ இருக்கிறது.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
05-மார்-201310:11:04 IST Report Abuse
Karam chand Gandhi கள்ள தொடர்பா இருக்கும் இதுக்கு என்ன ஆராய்ச்சி ?...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
05-மார்-201300:20:26 IST Report Abuse
GOWSALYA அடி பாவி,வேறு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றால் அந்தப் பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் செய்தது?..அவரவர் குழந்தை இல்லையென்று கவலைப்படுகிறார்கள்,நீ பத்துமாதம் சுமந்து பெற்றுவிட்டுக் கொன்றிருக்காயே?...அதைவிட கருவிலேயே கலைத்திருக்கலாம்.....சட்டம் தண்டிக்காமல் விட்டாலும்,கடவுள் நிச்சயம் தண்டிப்பார்......கலிகாலம்.....
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
05-மார்-201310:12:19 IST Report Abuse
Karam chand Gandhi பெண்களுக்கு குற்ற விலக்கு உண்டு. வழக்கு போடுவார்கள். நீதிபதி விடுதலை செய்து விடுவார் பாருங்கள் ...
Rate this:
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
05-மார்-201314:12:09 IST Report Abuse
Prabu.KTKஎல்லாம் கள்ளக் காதல் படுத்தும் பாடு ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.