ஸ்டாலின் முன்னிலையில் இன்று, "டெசோ' போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, "டெசோ' சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன் முற்றுகையிடும் போராட்டம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கையை கண்டித்து, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அந்த தீர்மானத்தை அமெரிக்காவை முந்திக் கொண்டு, இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ராஜபக்ஷேவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, பிப்ரவரி மாதம் 25ம்தேதி அறிவாலயத்தில் நடந்த, "டெசோ' அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி, இன்று டெசோ சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்ட அறிக்கை: சர்வதேச போர்க் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டித்து, இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Freethinker - Chennai,இந்தியா
05-மார்-201311:57:10 IST Report Abuse
Freethinker மணி விழா என்ற பெயரில் இங்கே 65 கிலோ கேக், அந்தமானில் 65 கிலோ கேக் என்று கொண்டாட்டமும் குதுக்கலாமுமாக இருந்துவிட்டு அடுத்த நாளே நானும் போராடுகிறேன் என்று வந்து நிற்பதற்கு எப்படித்தான் மனசாட்சி இடம் கொடுக்கிறதோ தெரியவில்லை. மனசால் வருத்தபடுகிறவர் நடத்தும் போராட்டங்களை மட்டுமே என்னால் ஏற்றுகொள்ள முடியும். இவனை போன்றவர்கள் போராட்டம் நடத்துவது ஒரு கணக்குகுதான் .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-மார்-201305:18:32 IST Report Abuse
villupuram jeevithan தினமும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அதையும் சேர்த்துக் கொள்ளூங்கள் உங்கள் அஜெண்டாவில்.
Rate this:
Share this comment
Ramesh - Chennai,இந்தியா
05-மார்-201313:20:50 IST Report Abuse
Rameshஅவனுகளே... அரசியல் பண்றானுங்க, இதுல நீங்க வேற.. தி மு க. தனக்கு இருந்த அருமையான வாய்ப்புகளை எல்லாம் வீணடித்து விட்டார்கள். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்