22,532 சங்கங்கள்: இதையடுத்து, முதல்முறையாக, கூட்டுறவு தேர்தலை நடத்த, தனி தேர்தல் ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது. இயங்காத கூட்டுறவு சங்கங்களை நீக்கி, தேர்தல் நடத்தப்படுகிறது. கூட்டுறவு தேர்தல் குறித்து, ஆணையர் மோகன் அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், பால் வளம், மீன் வளம், தொழில் வணிகம், கதர், கிராம தொழில்துறை ஆணையர்கள், கைத்தறி, கால்நடை பராமரிப்பு, சர்க்கரை, வீட்டுவதி, சமூக நலம், வேளாண் துறை இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, 22 ,532 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குகின்றன. இவற்றுக்கான தேர்தல், ஐந்து கட்டங்களாக நடக்கின்றன. முதல் கட்டமாக, கூட்டுறவு விற்பனை சங்கங்களை தவிர, இதர தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
கட்டுப்பாட்டு அறை: தேர்தல் குறித்த விவரங்களை பெறவும், புகார்களை தெரிவிக்கவும், தேர்தல் ஆணைய அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. 044 -
24351403 என்ற தொலைபேசி எண்ணில், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என,
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படி எல்லாம் இல்லைங்க அல்போன்ஸ் .... சம்பத் அங்க இருக்காருள்ள அந்த விசுவாசத்துள சொல்லுறாரு செந்தமிழ் கார்த்திக் ... யாராரு எந்தந்த கூட்டுறவுக்குன்னு முடிவு பண்ணுன பிறகு தானே THERTHAL தேதியே அறிவிச்சிருகங்கா.... இது ஒன்னும் முன்னோட்டமும் இல்ல பின்னோட்டமும் இல்ல ... காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மாதிரி நான் தான் என்று பெருமை பட்டுகெலாம்....
எதுக்கு இந்த தேர்தல் சடங்கு எல்லாம் ஏற்கனவே ஆளும் கட்சி காரங்க ,விவசாயிகள் இல்லாத பிறந்த குழந்த முதல் பழம் கிழம்வரை சங்க உறுபினரா சேர்த்து அவர்களுக்கு தேவையான போலி ஆவணத்த ரெடி பண்ணியாச்சு அதற்கு பின்னாடிதான் இந்த தேர்தல் அறிவிப்பே வருது எதிர் ,எதிரி கட்சியெல்லாம் எப்படியும் காணாம போயிரும் அதனால் ஆளும் கட்சியே தனக்கு வேண்டியவர்களை சங்க பிரநிதிகளாக நியமித்து ,தேர்தலுக்கு ஆகும் செலவை மிச்ச படுத்தலாம்
கூட்டுறவு சங்கங்கள் சரியாக செயல்பட்டால் அது விதிமீறல் வணிகவளாகங்கள் கட்டி கொள்ளையடிக்கும் வணிகர்களுக்கு வேட்டு வைக்கும் மொத்த விற்பனையாளர்கள் இந்த சங்கங்கள் உயிரோடு இருப்பதையே விரும்புவதில்லை விலைவாசி குறைந்துவிடுமே கலப்பட வணிகம் அழிந்துவிடுமே.அந்நிய சில்லறை வணிகம் எடுபடாமல் போய்விடுமே . எனவே அவர்கள் கூட்டுறவு இயக்கங்களை அழிக்கவே முயற்சிப்பர். மக்கள்தான் அரசியல்வாதிகளை இந்தத் தேர்தலில் நிற்கவிடாமல் /வெல்லமுடியாமல் விரட்டி அடிக்கவேண்டும் .
பெரும்பாலான கூட்டுறவு சங்களில் அதிமுகவினர் மட்டுமே உறுப்பினர்கள் ஆக முடிகிறது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு கூட்டுறவுத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சி முனைகிறது. ஏற்கனவே ஊழல் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலையில் கூட்டுறவுச்சங்களிலும் தங்கள் திருவிளையாடலை ஆரம்பிக்க உள்ளனர் அதிமுகவினர். மந்திரிகளின் மகா ஊழல் காரணமாக உளவுத்துறையின் எச்சரிக்கையின் விளைவாக அடிக்கடி டிஸ்மிஸ் செய்யப்படுவது வழியாக ஊழல் பணம் ஒழுங்காக செட்டில் செய்யப்படாதையும் காட்டுகிறது. மொத்தத்தில் கூட்டுறவுத் தேர்தல் தேவையற்ற ஒருகூத்து இப்போது
இம்மாதிரி கூட்டுறவு சங்க தேர்தல்கள் நேர்மையாகவோ, சுதந்திரமாகவோ நடை பெறவில்லை திமுகவின் கடந்த கால ஆட்சியிகளில். திமுக ஆட்சியில் சென்னை மாநகர தேர்தல் நடந்தவிதம் டிவியில் தான் பார்த்தோமே? உயர்நீதிமன்றமும் இடித்துரைத்ததே? இப்போது அந்த அளவு முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தேவ்ர்தல்கள் மூலம் பலப்பரிட்ச்சை என்று சொல்லுவதெல்லாம் அபத்தம் தான்.
கறவை மாடு இல்லாதவன் பால் உற்பத்தியாளர் கூட்டுரவு சங்க உறுப்பினர், விவசாய நிலம் இல்லாதவன் விவசாய கூட்டுரவு சங்க உறுப்பினர். இதில் என்ன கொடுமை என்றால் உறுப்பினர் படிவத்தை மொத்தமாக அதிமுக தொண்டர்கள் தான் விநியோகிக்கிறார்கள் அதனால் என்னை போன்ற உண்மையான விவசசாயிகளுக்கு உறுப்பினர் படிவம் கண்டிப்பாக கொடுக்கமாட்டார்கலாம். இதையெல்லாம் எங்கள் பகுதி விவசாய கூட்டுறவு சங்க செயலாளரிடம் கேட்டால் பதில் மௌனம். இதையெல்லாம் பார்க்கும்போது விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கி உதவும் கூட்டுறவு வங்கி மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூடுவிழா காணும்நாள் தொலைவில் இல்லை என்று மட்டும் தெரிகிறது.
ம்ஹூம்.....பலப்பரீட்சை.......? அதுவும் அதிமுக ஆட்சியில்? கோடிகளையும் அடிப்பொடிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு நடத்த இப்போது தான் காலம் கணிந்தா .....மிரட்டி பெறப்போகும் இந்த வெற்றியை சாதனையாக காண்பித்து லோக்சபா தேர்தலில் கில்லி அடிக்கலாம் என்ற கனவு. எல்லா கனவுகளும் பலித்து விடுவதில்லை...அதிலும் இது பகற்கனவு.
யார்தான் வைகோவை சரியாக நடத்தினார்கள்? விடுதலைப்புலிகளோடு சேர்ந்துகொண்டு என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார் என்று கொலைப்பழி சுமத்தினார்கள்.... கொலைப் பழியைவிட, போராளி என்று நிரூபித்த சிறைவாசம் மேலானதுதான். இலங்கைப் பிரச்சனையைப் பற்றிப் பேசுவது மக்களை உசுப்பேற்றவா? உங்கள் சக தமிழன் கொல்லப்படுவது உங்களை பாதிக்கவில்லையா? தமிழனாகவே இருக்க வேண்டாம், எந்த இனத்தைச் சார்ந்த அப்பாவிப் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கதில்லையா? உங்கள் வார்த்தையிலிருந்து இலங்கைக்காகப் போராடுவது தேவையற்றது, கால விரயம் என்று நீங்கள் கருதுவது புரிகிறது. இதுதான் ஒட்டுமொத்த தி.மு.க வினரின் கருத்தா? அதனால்தான் உங்கள் தலைவர் ஆட்சியில் இருந்தபோது கண்டனம் கூடத் தெரிவிக்காமல் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்தாரா? அப்படியென்றால் உங்கள் தலைவர் இப்போது டெசோ நடத்துவதும் வெறும் உசுப்பேற்றத்தானா? தேர்தலுக்காகத்தானா? நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளத்தானா? போராட இல்லையா? அட தட்சிணாமூர்த்தி.........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.