கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த நிலையில், என் மனதில் திடீரென பீட்டர் நுழைந்துவிட்டார். இருவரையும் மறக்க முடியாமல் தவித்த நான், ஒரு கட்டத்தில், பீட்டருடன் சென்றுவிட்டேன். ஓராண்டு வரை, அவர் வீட்டில் நாங்கள் வசித்தோம். தினமும் எனக்கு, என் கணவர் பால் மற்றும் குழந்தைகள் நினைவு வாட்டி எடுத்தது. குழந்தைகளும் என்னை காணாமல் அழுதன. இதனால், கணவர் மற்றும் குழந்தைகளை சந்திக்க அவ்வப்போது வந்து சென்றேன்.இப்படியே, அங்கும், இங்குமாக ஓராண்டு நகர்ந்தது. அதற்கு பிறகு, மூன்று பேரும் ஒரு நாள் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். முதல் சந்திப்பிலேயே, பீட்டரும், பாலும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இது எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என, விவாதித்தோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது என, பேசி முடிவு செய்தோம். அதை, குழந்தைகளும் ஏற்றுக்கொண்டன. ஓராண்டாக கணவர் பால், காதலர் பீட்டர், குழந்தைகளுடன் நான் ஒரே வீட்டில் உள்ளேன்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இதுவரை இல்லை. படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதில்லை. பீட்டர் இருக்கும் போது, பால் வருவதில்லை; பால் இருக்கும் போது பீட்டர் வருவதில்லை.பிறருக்கு வினோதமாக தெரியும் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூகத்தையும், புரிதலையும் கொடுத்துள்ளது. பால், பீட்டர் இருவரும், என் குழந்தைகளை கண் போல பார்த்து கொள்கின்றனர். என்னையும், அவர்கள் இருவரும் தரையில் விடுவதில்லை. இது போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வாய்க்காது. இவ்வாறு, மரியா கூறியுள்ளார்.

Advertisement


மேலும் உலகம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (153)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
youkrolik - மதுரை ,இந்தியா
12-மார்-201303:28:10 IST Report Abuse
youkrolik இது ஒன்னும் அவ்ள்லோ பெரிய காமெடி இல்ல....
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
08-மார்-201320:07:18 IST Report Abuse
சொல்லின் செல்வன் சாரே.. நிங்கள் காதலி எண்டே மனைவியாயிட்டு வரலாம். பட்சே நிங்கள் மனைவி எண்டே காதலியாயிட்டு வர முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
08-மார்-201320:00:54 IST Report Abuse
சொல்லின் செல்வன் சாரே.. உன் பொண்ணை அவன் மடியில உக்கார வெச்சா உன் பொண்ணுக்கு அவன் மாமா. பட்சே உன் பொண்டாட்டிய அவன் மடில உக்கார வெச்சா நீ அவனுக்கு மாமா.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
07-மார்-201322:30:42 IST Report Abuse
Venkatesh R Venkatesh நாம எதிபார்த்ததைவிட சீக்கிரமா இந்த உலகம் நாசமா போய்டும்போல இருக்கே
Rate this:
Share this comment
mkr - cni,இந்தியா
08-மார்-201323:14:19 IST Report Abuse
mkrசத்தியமான உண்மை......
Rate this:
Share this comment
mkr - cni,இந்தியா
08-மார்-201323:19:45 IST Report Abuse
mkrநல்ல குடும்பம்டா .... ஏர்ல பூட்டுன எரும மாதிரி.... கருமம் - கன்றாவி.... இது ஒரு மானம் கெட்ட பொழப்பு.. இதுல நல்ல புரிதல் வேற இருக்காம்... த்தூ.............
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
06-மார்-201321:35:51 IST Report Abuse
Mahendra Babu R மிக மிக பழமையான வாழ்க்கை முறை. முன்னொரு காலத்தில் பெண் தலைமையிலான குழுக்களாக வாழ்ந்த வாழ்க்கை முறையில் இவ்வாறு நடந்ததாக மனோதத்துவ நிபுணர் Dr.Shalini எழுதிய கட்டுரையில் படித்திருக்கிறேன். இந்த முறையில் ஒரு குழுவில் உள்ள ஆண்கள் வாழிடம், உணவு / பொருள் ஈட்டல், எதிரிகளை வேட்டையாடல் போன்றவற்றுக்கு அந்த குழுவின் தலைவியின் வழிகாட்டுதலின் பெயரிலேயே செயல்பட்டார்கள். பொதுவாக தன் அடுத்த சந்ததி எந்த ஆண் / ஆண்கள் மூலமாக என்பதை அந்த பெண்தான் முடிவு செய்வாள்.
Rate this:
Share this comment
Cancel
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
06-மார்-201321:10:02 IST Report Abuse
M.Srinivasan இதப்படிங்க முதல்ல என்ற தலைப்பின் கீழ் இந்த செய்தியை வெளியிட்ட தினமலரே சற்றே குனிந்து என் குட்டை வாங்கிக்கொள்
Rate this:
Share this comment
Cancel
Jana - Chennai,இந்தியா
06-மார்-201312:28:18 IST Report Abuse
Jana இங்கு சில அறிவு ஜீவிகள் நம் நாட்டில் குழந்தை திருமணம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது போல் பேசுகிறது ... மைனர் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும்..சில நாட்டில் பெண்ணின் திருமண வயது 15.. இன்னும் சில நாட்டில் பெற்றோர் சம்மதித்தால் 13.. வயதை நிர்ணயிப்பது யார்..Majority 17-18
Rate this:
Share this comment
Cancel
mohamed ansary - jeddah,சவுதி அரேபியா
06-மார்-201312:08:39 IST Report Abuse
mohamed ansary இன்டர்நேஷனல் வேசிக்கு பெயர் புதுமை பெண்ணா, இவள் பஞ்சபாண்டவர்கள் கதையை கேட்டு இருப்பாளோ , ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதி மாறி பலருக்கு ஒருத்தி என்ற நிலை , காலம் கெட்டுவிட்டது .
Rate this:
Share this comment
Cancel
Muthurasu - Singapore ,சிங்கப்பூர்
05-மார்-201319:45:20 IST Report Abuse
Muthurasu அருமை. இப்படி இந்தியாவை மாற்ற ஒரு சிலபேர் உழைக்கிர்ரர்கள்.
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
05-மார்-201317:52:15 IST Report Abuse
sitaramenv இந்தியாவில் பாரதத்தின் புனித ஆன்மீக கல்வியை குருகுல ஆஸ்ரம முறையை அறிமுகப்படுத்தினால் இளைஞர சமுதாயம் ஓரளவு மீதும் உருப்பட வழி உண்டு. ......இன்னும் கொஞ்ச நாளில் விவாஹம் எதற்கு.......ஹை ஹை ஹாய் ஹாய் ......என்ற உறவோடு கணவன் மனைவி என்ற அர்த்தமுள்ள பந்தம் விரைவில் கொச்சையாக்கப்பட்டு .........எழுதுவதற்கே மனம் கூசுகிறது ....
Rate this:
Share this comment
NV.MURALITHAREN - udumalaipettai,இந்தியா
05-மார்-201318:23:39 IST Report Abuse
NV.MURALITHARENகூடிய சீக்கிரம் இந்த மாதிரி இங்கும் வரலாம் ஏனனில் இப்போவே MALE - FEMALE RATIO 1000 : 850 கூடிய சீக்கிரம் எல்லா பெண் குழந்தைகைளை கொன்றால், 1000: 500, அப்புறம் இப்படி தான் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்