புதுடில்லி: "" அமெரிக்க வர்த்தக பள்ளியில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, சிறிய விஷயம் தான். அதை, பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
அமெரிக்காவின், பிலடெல்பியாவில், புகழ் பெற்ற, "வர்டன் வர்த்தக பள்ளி' உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களிடையே, உரையாற்றுவது, பெருமைக்குரிய விஷயம். இங்குள்ள மாணவர்களிடையே, வீடியோ கான்பரன்சிங் மூலமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில், உரை நிகழ்த்த, வர்த்தக பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியை, அந்த கல்வி நிறுவனம் ரத்து செய்தது.
இந்தியாவில், இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான, பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: "வர்டன் வர்த்தக பள்ளி'யில், நரேந்திர மோடியின் நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டது, சிறிய விஷயம் தான்; அதை, நாங்கள் பெரிது படுத்த விரும்பவில்லை. அங்குள்ள மாணவர்கள், நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள, திட்டங்களையும், நிர்வாக பணிகளையும், அறிந்து கொள்ள விரும்பினர். அதனால் தான், அந்த கல்வி நிறுவனம், நரேந்திர மோடி பேசுவதற்கு அனுமதித்தது. தற்போது, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்; இது, சாதாரண விஷயமே. இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.
மோடிக்கு தகுதியில்லை:
இதற்கிடையே, பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர்களை, நரேந்திர மோடி, கடுமையாக விமர்சித்து பேசியதற்கு, காங்., தரப்பில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக விவகாரத் துறை அமைச்சர், நாராயணசாமி கூறியதாவது: காங்., தலைவர்களை, மிக தரக் குறைவான வார்த்தைகளால், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தலைவருக்குரிய தகுதி, அவருக்கு இல்லை. அவருக்கு, அரசியல் நாகரிகமும் தெரியவில்லை. நரேந்திர மோடி, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். தேசிய தலைவராகும் தகுதி, அவரிடம் இல்லை. பா.ஜ.,வில், தலைவர்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. இதனால் தான், மோடியை முன் நிறுத்துகின்றனர். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
பா.ஜ., பதிலடி:
இதுகுறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: பா.ஜ.,வில், தலைவர்களுக்கு பஞ்சமில்லை; காங்கிரசில் தான், அந்த பிரச்னை உள்ளது. மத்திய அமைச்சர், நாராயணசாமி, முதலில், தன் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசை பொறுத்தவரை, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, தலைவராக முடியும். ஆனால், பா.ஜ.,வில், கடுமையாக உழைக்கும் அனைவரும், ஜனநாயக முறைப்படி, தலைவராக முடியும். நரேந்திர மோடியை விமர்சிக்கும் காங்., கட்சியினர், இதை உணர வேண்டும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மோடி எதிர்கால பிரதமர்...அவரிடம் நிர்வாகத்திறமை அதிகமாக இருக்கிறது அதனால்தான் அவர் குஜராத்ல மூன்றாவதுமுறையாக முதல்வராக பதவி ஏற்க முடிந்தது இந்த காங்கிரஸ் ஆட்சில எல்லாத்துலயும் ஊழல் ஊழல் ஊழல்...ராகுல் போய் அமெரிக்கால என்னாத்த பேச போறாரு? ஒரு விசயமும் கிடையாது அவங்க பாட்டி இந்திராகாந்தி அவங்க அப்பா ராஜிவ்காந்தி மாதிரி இவருகிட்ட என்ன திறமை இருக்கு சொல்லுங்க? வேணும்னா யாராவது ஒரு விவசாய் வீட்டுக்கு போய் கூழு வாங்கி குடிக்கத்தான் முடியும் ராம்ஜெத்மலானி சொன்ன மாதிரி ராகுல் என்னோட ஆபீஸ் பாயா இருக்கக்கூட தகுதி கிடையாது. எல்லா மனுசனும் ஒரு நேரத்துல தப்பு செஞ்சிருப்போம் அதுமாதிரிதான் மோடியும் அதற்காக அவரை குற்றம் சொல்லுறது எந்த விதத்துல நியாயம்? அரசியல்ல யாருதான் நல்லவனா இருக்கிறான் வட்டத்துல ஆரம்பிச்சு எம் எல் ஏ, எம் பி, சீ எம், பி எம் வரைக்கும் எல்லாரும் மக்களோட வரிப்பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் அடுத்தவன் சொத்தை எப்படி ஆக்கிரமிக்கலாம் சொந்த பேங்க் பேலன்சை எப்படி ஏத்தலாம், நம்ம கட்சில பல வருசமா கடுமையா உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காம நம்ம குடும்ப வாரிசை எப்படி கட்சிக்குள் கொண்டுவரலாம் என்றுதான் எல்லாரும் யோசிக்கிறாங்கலேதவிர நாட்டு மக்களுக்கு என்ன செய்யலாம்னு ஒருத்தனும் யோசிக்க மாட்டேன்குறான். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தில மோடி எவ்வளவோ தேறலாம் ஒரு இந்தியனின் நிர்வாகத்திறமையை உலகமே போற்றும்போது இந்தியனாய் பிறந்த நாமும் அவருடைய திறமைகளை போற்றுவோமாக...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.