Govt., plan to give solar power generators to delta farmers | சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்': டெல்டா விவசாயிகளுக்கு தர திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்': டெல்டா விவசாயிகளுக்கு தர திட்டம்

Updated : மார் 06, 2013 | Added : மார் 04, 2013 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Govt., plan to give solar power generators to delta farmers டெல்டா விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் "பம்ப்'

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, சூரிய சக்தியில் இயங்கும், "பம்ப்'களை, தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்காக, 530, "சோலார் பி.வி., பம்ப்'களை கொள்முதல் செய்ய, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீர் கிடைக்காததாலும், நிலத்தடி நீரை நம்பியே, தமிழக விவசாயிகள் உள்ளனர். ஆனால், தொடரும் மின்வெட்டால், பல மாவட்டங்களில், மின் மோட்டார்களை இயக்க முடியாததால், குடிநீர்த் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலவுகிறது. தமிழக அரசு மின்வெட்டை சீர்செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, உடனடி நிவாரணமாக, சூரிய சக்தியில் இயங்கும், பம்ப்களை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்புகள் வழங்கப்பட உள்ளன.


அரசாணை:

இதுகுறித்து, வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, டிச., 26ம் தேதி இது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சோலார் பி.வி., பம்ப்கள் வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 530 பம்புகளை கொள்முதல் செய்ய, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஏப்., 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதில், தேர்வாகும் நிறுவனம், 180 நாட்களுக்குள், சோலார் பம்புகளை வழங்கி, விவசாயிகளுக்கு அவற்றை பொருத்திக் கொடுக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு, பராமரிக்கும் பணியையும், அந்நிறுவனமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kanijohn - Nagercoil,இந்தியா
08-மார்-201322:22:32 IST Report Abuse
kanijohn John Kani, Please give full details of the pump. What square meter of Solar panal used. How may hours it will work continously.
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - erode,இந்தியா
05-மார்-201319:50:05 IST Report Abuse
Siva Kumar டெல்டா மாவட்ட விவசாய்கள்தான் விவசாயம் பண்ண வேண்டுமா மற்ற மாவட்ட விவசாய்கள் கரண்ட் இல்லாம தண்ணி இல்லாம சாக வேண்டுமா
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
05-மார்-201318:32:42 IST Report Abuse
Yoga Kannan ஒரு வழி சாலையிலேயே ஒழுங்கா போவத்தெரியில.... நான்கு வழி சாலை மாதிரி நதியா இணைக்கப்போறாங்கலாம் ....காவேரி தண்ணிஒழுங்கா கொடுத்தான்னவே முப்போகம் சாவடி செய்வானைய்யா நம்மாளு... நடக்குற காரியத்தை சிந்திகைய்யா ....
Rate this:
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
05-மார்-201317:07:24 IST Report Abuse
Anantharaman முதலில் மழை நீரை சேமிக்க குளம், குட்டை, வாய்க்கால், கால்வாய் இவற்றை துர்வாரி நிலத்தடி நீரை சேமித்துக்கொண்டு இத்திட்டத்தை செயல் படுத்தினால் நன்றக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
05-மார்-201315:41:13 IST Report Abuse
NavaMayam ஏன் சார் ஏழு வருசத்தில் செலவை எடுத்து விடலாம் என்கிறீர்கள் ... எத்தன மூலம் என்று சொல்ல வில்லை ... பயிர் செய்தா , அல்லாது மின்சார கட்டணம் இல்லாததாலா ....ஏற்கனவே இலவச மின்சாரம் உள்ளதால் மின்சார கட்டணத்தின் மூலம் இருக்காது .... இலவச மின்சாரம் இருக்கும் போது ஏன் இதை உபயோகிக்க வேண்டும்... இதுவும் இரவு ,மாலை , காலை என்று 18 மணி நேரம் வேலை செய்யாது ... பின் ஏன் லட்சகணக்கில் செலவழித்து இதை நிறுவ வேண்டும்... மழை அதிகம் பெய்து காவேரி நீர் உபரியாக வந்துவிட்டால் இது தேவையில்லாத முதலீடாகிவிடும்... அரசிடம் இவ்வளவு செலவுசெய்து எல்லோருக்கும் வழங்க அவ்வளவு நிதி இருக்காது.... முதலில் இலவச மின்சாரத்தை நிறுத்தினால் தான் மாற்று திட்டங்கள் பயன் உள்ளதாக மாறும் , மின்சார பிரச்சனையும் தீரும்....
Rate this:
Share this comment
Cancel
alphino - tirunelveli,alavanthankulam,இந்தியா
05-மார்-201315:21:07 IST Report Abuse
alphino நான்கு வழிச்சாலை மாதிரி தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் செயல் படுத்தினாலே போதும் , இந்தியா பசுமையாக மாறி விடும் .
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy Caa - madruai,இந்தியா
05-மார்-201314:52:26 IST Report Abuse
Krishnamoorthy Caa நல்ல விஷயம் தான். அணைத்து விவசாயிகளுக்கும் கொடுக்க பட வேண்டும். விவசாய நிலங்களுக்கு இடையே கணக்கு வழக்கு இல்லாமல் செல்லும் மின்சார கம்பங்கள் அகற்ற பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
05-மார்-201311:43:09 IST Report Abuse
Yoga Kannan எந்த திட்டம் இந்த அம்மா அறிவிச்சாலும் உடனே ஜால்ராக்கள் கருணாகிட்ட போயிடுறாங்க.... உண்மைதானே நன்றாக காய்கின்ற மரம் தானே சிறுவர்களிடம் கல்லடி படும்... அது சாத்தியமா அல்லது சாத்தியமில்லையா.என்பதையெல்லாம் சிந்திப்பது கிடையாது...திரு வெங்கட் ஐயரை (நாகை) பாருங்கள்...ஒரு புள்ளி விபரமே கொடுத்துள்ளார்....இது தான் பயனுள்ள தகவல்....அதை விட்டுவிட்டு இந்த அம்மையார் மறந்தாலும் ஜால்ராக்கள் விட மறுக்கிறது.... 530 பேருக்கு முதல் கட்டமாக பயிற்சித்து பார்கிறார்கள்..அது பலன் கொடுத்தால்.... அணைத்து விவசாயிகளும் பயன்படுவார்கள் இது தான் அரசுனுடைய கோட்பாடு.... இதை புரிந்துகொள்ளத ஜடங்களை என்ன சொல்லுவது...ஜால்ரா மட்டும் தட்டுனா போதாது... எது நல்ல திட்டம் என்பதை புரிந்து தட்டனும்... இப்படி ஒரு சூரிய சக்தி நீர் இறைப்பானை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுவிட்டால் ....தமிழக அரசை மனதார பாராட்டலாம் .....
Rate this:
Share this comment
Cancel
Jayaanand - Chennai,இந்தியா
05-மார்-201311:06:49 IST Report Abuse
Jayaanand முதலில் எல்லா ஏரி குளங்களையும் தூர் வாரட்டும். அதுவே நிலதடி நீரை அதிகரிக்கும் நிறைய டாம் கட்டனும்
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
05-மார்-201311:05:11 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வரவேற்புக்குரியவை..,இனிய பாராட்டுகள் இத் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கு விரிவு படுத்த படவேண்டும் விவசாய நிலங்கள் வீடுமனையவது தடுக்க படும் விவசாயிகளுக்கு விவசாய பணிகள் மீது புதிய நம்பிக்கை ஏற்படுத்த கூடியவை..,அரசு உள்ளாட்சி பகுதி உட்பட்ட நிலங்களில் கண்டிப்பாக அடுக்குமாடி கட்டிடங்கள் omr பகுதியை போல் கட்ட கூடாது பொதுமக்கள் வாழ்க்கை குடும்பபொருளாதாரம் கண்டிப்பாக பாதிக்கபடும் 1+1 அல்லது 2 என்ற வகையில் கட்டடங்கள் மட்டும் அந்த பகுதி மக்கள் தொகைக்கு தேவைக்கு ஏற்ப கட்டப்படவேண்டும். உள்ளாட்சி பகுதிகள் மிக பெரிய அடுக்குமாடி கட்டிடங்களால்.., குடியுருப்பு வாடகையும்.., நிலங்கள் விலையும்.., உணவு பொருள்கள் விலையும்..., அதிகமாக கூட காரணம்..,அரசியல்வாதிகளும்..., சினிமாகாரர்களும்..., மற்றும் IT ஊழியர்களும் மட்டும் இவர்களின் சொகுசு வாழ்கைக்காக பல அடுக்கு மாடி கட்டிடங்கள் பயன் படுகிறது இவற்றை மேலும்கட்ட அரசு தடை செய்யவேண்டும். விவசாய மக்கள் குடும்ப பொருளாதார உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் உணவுயின்றி மனிதன் பசியால் சாக கூடாது விவாசய பூமிகள் OMR அதனை சுற்றி வாழ்ந்த மக்கள் நிலை போல் மாறிவிடக்கூடாது பூபதியார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை