புதுடில்லி: பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு வைத்திருந்ததாக, உள்துறை அமைச்சக அதிகாரியிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலம், போக்ரானை சேர்ந்த, சமர் கான் என்பவரை, அம்மாநில போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். இந்திய விமானப் படையின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை, பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு, சமர் தெரிவித்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.விசாரணையில், சமர் கான், பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யைச் சேர்ந்தவர் என்றும், தெரியவந்தது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, சமர்கானுக்கு தெரிவித்ததாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின், வெளிநாடுகள் விவகாரங்களுக்கான பிரிவில் பணியாற்றி வரும், அதிகாரியை, போலீசார் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து, அவரிடம், தீவிர விசாரணை நடந்து வருகிறது. அந்த அதிகாரிரியின் பெயர் உள்ளிட்ட, மற்ற விவரங்களை வெளியிட, போலீசார் மறுத்து விட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.