Congress discuss about TESO meet | டில்லியில் "டெசோ' கருத்தரங்கு: காங்., முடிவு என்ன?| Dinamalar

டில்லியில் "டெசோ' கருத்தரங்கு: காங்., முடிவு என்ன?

Updated : மார் 06, 2013 | Added : மார் 04, 2013 | கருத்துகள் (149)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Congress discuss about TESO meet டில்லியில் "டெசோ' கருத்தரங்கு: காங்., முடிவு என்ன?

டில்லியில், தி.மு.க., நடத்தும், "டெசோ' கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை, டில்லியில் நேற்று, தமிழக காங்கிரஸ், எம்.பி.,க்கள், சந்தித்தனர். பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழக காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழக, காங்., மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர். அரை மணி நேரம் நீடித்த, இந்தச் சந்திப்பில், இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்பின், சந்திப்பு தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ராகுலை, தமிழக, காங்., - எம்.பி.,க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சந்தித்த போது, தமிழகத்தில், இலங்கை விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு, காங்கிரஸ் எவ்வளவோ நன்மைகளை செய்தாலும், அவற்றுக்கு எதிர்மாறான பிரச்சாரம், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து, தேர்தல் வியூகங்களை வகுக்கின்றன. இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் மீது அதிருப்தி உண்டாகும் அளவுக்கு மற்றும் தனிமைப்படுத்தப்படும் அளவுக்கு, நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. இதை முறியடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், காங்கிரஸ் பல நடவடிக்கைகளை, எடுக்க வேண்டியது அவசியம். இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில், முன்னர் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதை ஆதரித்து, இந்தியா ஓட்டுப் போடப்பட்டது. இப்போது மறுபடியும் தீர்மானம் வரப்போகிறது. அமெரிக்கா கொண்டு வரவுள்ள அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலைப்பாட்டை, மத்திய அரசு எடுக்க வேண்டும்.
டில்லியில், தி.மு.க., சார்பில் டெசோ கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை, தெளிவுபடுத்த வேண்டும். ஈழம் என்ற வார்த்தையில் உடன்பாடு இல்லை என்றாலும், டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை விஷயத்தில், காங்கிரசுக்கு உள்ள அக்கறையை எடுத்துக் கூறுவதே, சரியானதாக இருக்கும் என, ராகுலிடம் தமிழக காங்., - எம்.பி.,க்கள் கூறினர். அனைத்தையும் கேட்ட ராகுல், "இது விஷயமாக கட்சித் தலைவர் சோனியாவுடன், குலாம்நபி ஆசாத் ஆலோசனை நடத்துவார். டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து, அதன்பின் முடிவெடுக்கப்படும். இன்று இரவுக்குள் முடிவு வெளியாகி விடும்' என்றார். இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
இந்நிலையில், நாளை மறுநாள், டில்லி, கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவுள்ள, டெசோ கருத்தரங்கிற்கு தி.மு.க., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. உள்ளரங்கு கூட்டமாக, மாலை, 4:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடைபெறும் கருத்தரங்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பங்கேற்கவில்லை. மாறாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பங்கேற்கிறார். இந்த கருத்தரங்கிற்கு, 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களை அழைத்து, இலங்கை பிரச்னை குறித்து, விரிவாக விளக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
06-மார்-201300:54:42 IST Report Abuse
Yoga Kannan நாமக்கல் செந்தில் கார்த்திக் ..... 1984 to 1987.... கல்லூரியில் படித்த நேரம்.... தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது... மறைந்த தமிழக முதல்வர் எம் ஜி ஆர் ...அன்னை இந்திரா இவர்கள் எல்லாம் அதரவு கரம் ....எங்கள் பங்கிற்கு நிதி வசூல்... போராளிகள் நேரடியாக அழைத்து வந்து நிதியை -கல்லூரி விரிவுரையாளர்கள் ஒரு மாத சம்பளம் .....கொடுத்து உதவி செய்தோம்.... பல அதரவு போராட்டங்கள் ..... காலங்கள் உருண்டோடின ... மாற்றங்கள் நிகழ்ந்தன....சரியான விதத்தில் புலிகளின் தலைவர் பயன் படுதிகொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்...பல பேச்சு வார்த்தைகள் முறிவு பெற்றன...அமைதிக்கு சென்ற படை அத்துமீறியதாக ஊடகங்களில் பரப்பப்பட்டன... இருவருக்கும் உக்கர போர் நடை பெற்றது.... அப்போதே மக்கள் மத்தியில் அவர்கள் மீது உள்ள ஆதரவு குறைய ஆரம்பித்தது... இந்திய பல இந்திய வீரர்களை இழந்தது.... அந்த சமயங்களில் DMK ..பல ஆதரவு போராட்டங்களை செய்து கொண்டு இருந்தது ... நள்ளிரவு நேரம் தேர்தல் சமயம் மயிலாடுதுறையில் போஸ்டர் வாங்க சென்ற எங்களுக்கு ...அந்த செய்தி பேரிடியாக இருந்தது... கடிகள் நொறுக்கப்பட்டன...பாவம் ஒரு பக்கம் பலி ஒரு பக்கம் என்பது போல ....அன்றைய தமிழக ஆளும் கட்சியும் ...மீடியாக்களும் விசமத்தனமான பரப்புரையை கையாண்டது...ஒரு கட்சியை குறிவைத்தே செய்திகள் வெளியாயின... சென்னையில் நடந்த குருர படுகொலை பல தலைவர்களுக்கு தெரிந்து ஒதுங்கி கொண்டனர்...தமிழகம் அவருக்கு பாதுகாப்பு மாநிலம் என்பதால் கட்டுக்காவலை மீறி மக்களை சந்திக்க வந்தவரை ரத்த வெள்ளமாக்கியத்தை என்போன்ற தமிழன் ஏற்றுக்கொள்ளமாட்டான்... என்னுடைய தொப்புள் கொடி உறவுகள் நிராதராவக்கப்பட்டனர்...எந்த இந்திய அரசும் அக்கறை கட்டவில்லை என்பது...உண்மை ....திரு ராஜ் நாத் சிங் பேசியதாக கூறியிருக்கிறீர்கள் அவர்களும் 5 ஆண்டுகள் பூர்த்தி செய்து இருக்கிறார்கள்... இப்போது தமிழக தலைவர்கள் உண்மைக்கு புறம்பாக தகல்களை தங்கள் சுய லாபத்திற்காக பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்...எந்த உலக நாடாக இருந்தாலும் நம் தேசம் மட்டுமே செவி சாய்த்தால் தான் நடக்கும்... அது தான் டெசொவின் ராஜா தந்திரம்... அது நிச்சயமாக நடக்கும்... நித்தம் ஒரு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு இப்போது தேர்தலை சந்திக்காது ...அவர்களிடத்தில் மாற்றம் வரும்...இலங்கை தமிழனுக்கு விடிவு கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-மார்-201317:53:29 IST Report Abuse
Nallavan Nallavan இலங்கைப் பிரச்னை குறித்து நதிநீர் இணைப்பே தேவையில்லை என்று உளறிய ராகுலிடம் முறையிட்டார்களா ????? காமெடிக்கு மேல் காமெடி .... போதுமடா ..... சாமீய் .....
Rate this:
Share this comment
Cancel
Kaja Mydeen - Chennai,இந்தியா
05-மார்-201317:47:52 IST Report Abuse
Kaja Mydeen ஆகா... வருது... வருது தேர்தல் வருது... தமிழனின் அன்பை எதிர் பார்த்து காங்கிரஸ் இறங்கி வருது, இது எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும்னு தெரியலையே.
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
05-மார்-201317:18:17 IST Report Abuse
maravan என்னதான் தன்னையே தோலுரித்து நான் நல்லவன் என்று கருணாநிதி நிருபித்தலும்...துரோகம் துரோகமே...ஈழ மக்கள் எதிரி ராஜபக்சேயை நம்பினாலும் துரோகி கருணாவை நம்ப மாட்டார்கள்...டெசோ என்று இவர் நடத்தும் நாடகம் மக்கள் மனதை மாற்றாது மாறாக வெறுப்பை இருமடன்கான்கும்...தன் சொந்தங்களுக்கும் தனக்கும் மட்டும் வாழும் நீங்கள் எப்படி தமிழின தலைவர்...தமிழின துரோகி என்ற பட்டம் பல தலைமுறை உங்கள் துரோகத்தை எடுத்து செல்லும்...மறவன்
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
05-மார்-201313:30:52 IST Report Abuse
NavaMayam மணி என்ற சமுக ஆவலர் ஸ்ரீலங்கா போருக்காக இன்று தீ குளித்து இறந்துள்ளார் ... அவரின் வீடியோ வை பார்த்தால் கண் கலங்குகிறது ... திருநெல்வேலியில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் குண்டடிபட்டு உயிருக்கு போராடியதுபோல் இவரும் துடிக்கிறார் ... சுற்றி உள்ளவர்கள் எல்லாம் வேடிக்கை பார்கிறார்களே தவிர அவரை தூக்கி செல்ல முயற்சிக்க வில்லை ... இப்படியெல்லாம் செய்தால் ராஜபக்சே மசிந்து விடுவாரா ...இங்குள்ள தலைவர்களின் ஆவேச , துவேச பேச்சுதான் இந்த மாதிரி அப்பாவி மக்களை இந்த செயலுக்கு இழுத்து செல்கிறது.... குஞ்சுமணி சொல்வது போல இதுவரை , கனடா ஐரோப்பா , அமெரிக்க ஆஸ்ட்ரேலியா . இவைகளில் சொகுசாக வாழும் இலங்கை தமிழர்கள் யாராவது தீக்குளித்துள்லார்களா,,, இல்லையே ...தமிழக தலைவர்களே இலங்கை தமிழனை வைத்து ஒட்டு அரசியல் பாண்ணாதீர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
05-மார்-201313:17:58 IST Report Abuse
Kankatharan  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். தாத்தாவின் கட்சி திமுக, தாத்தா வசனம் எழுதி அஞ்சு தரம் முதலமைச்சராவும் இருந்து சட்டவிரோதமான காரியமெல்லாம் செய்தது திமுக வை பாவித்து, இப்போவும் செய்துகொண்டிருக்கிறார். இப்போ திமுக வுக்கு இணையாக டெசோவை பாவிக்கிறார்..அதுக்கும் தாத்தாதான் தலைவர். இதுக்கும் தாத்தாதான் தலைவர். தாத்தாவின் அறிக்கை பேச்சு அனைத்திலும் இப்போ டெசோதான் மேலெழுந்து நின்று குரல் கொடுத்து வருகிறது. அப்போ திமுக தேர்தலில் நிற்க ஆட்சி அமைக்க ஊழல் தயாரிக்க மட்டும்தான் முன்னுக்கு வருமோ. பொதுத்தேர்தலுக்கும் டெசோதான் ஆளுமை நடத்தும்போல் தெரிகிறது. மரியா அண்ணன் பதில் சொன்னா பரவாயில்லை.
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
05-மார்-201313:04:45 IST Report Abuse
Shaikh Miyakkhan செந்தில் கார்த்திக் உங்களது கருத்து உண்மையானதும் மற்றும் நடந்ததும் அது தானே கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரசு இழுத்த இல்லுப்புக்கு அவர்கள் கேட்ட 65 தொகுதியை ஒதுக்கி கொடுத்த வீராதிவீர சூரர் கட்சி தான். மத்திய அமைச்சர்கள் ராசினாமா கடிதத்துடன் டெல்லி சென்று கடிதத்தை கொடுக்காமல் வந்த வீரர்கள் உள்ள வீணாப்போன வீணர்கள் உள்ள குழுமம். உண்மையில் இலங்கை பிரட்சனை இல் உண்மையான அக்கறை இருக்குமானால் மத்திய அரசில் அங்கம் வகிப்பது ஏன்? இன்று வரைகூட மத்திய கூட்டணி அரசில் இருந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்காக டெசோ என்ற பெயரில் போராட்டம் நடத்துவது என்பது நாடகமே. இதில் காங்கிரசை தனிமை படுத்த நினைத்தாலும் இலங்கை தமிழர்களுக்காக இழைத்த கொடுமைகளுக்கு திமுக வுக்கும் பங்கு உண்டு என்பது மறுபதற்கு இல்லை முற்றிலும் உண்மை. அப்படி இருக்கயில் திமுக போராட்டம் என்பது நாடக வேஷமே இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் மீது அதிருப்தி உண்டாகும் அளவுக்கு மற்றும் தனிமைப்படுத்தப்படும் போது அதில் திமுகவையும் சேர்த்து கொள்ள வேண்டும் ஏன்? என்றால் இன்று வரை மத்திய கூட்டணி அரசில் இன்று வரை அங்கம் வகிக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
desadasan - mumbai,இந்தியா
05-மார்-201312:00:43 IST Report Abuse
desadasan அன்று சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தவே இந்தப் பிரச்னையில் தலையிட்டோம் என்று யாரோ சொன்னார்கள்..ஞாபகத்திற்கு வருகிறது, என்றோ. இன்று அமெரிக்கா தலையிட்டு தனது தளமாக்கத் துடிக்கிறது இலங்கையில் ..எது எப்படியோ...தமிழ் பேசும் ஒரு இனம் தாக்கப் படும் போதும் நமது அரசியல் வாதிகளும் ஒன்று பட மறுக்கிறார்கள்..இன்றாவது கூடிக் குரல் கொடுங்கள் அய்யா..அண்டை நாட்டுத்தமிழர்களும் தங்கள் நாடுகளை இந்த தீர்மானம் நிறைவேறப் பாடு படவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
05-மார்-201310:39:52 IST Report Abuse
சகுனி இது என்ன கேள்வி ...... காங்கிரஸ் முடிவு தான் ஏற்கெனவே நாரவாய்சாமி மூலமா ரெண்டு நாளைக்கு முன்னாடியே "பங்கேற்க மாட்டோம்"னு அறிக்கையா வந்துடுச்சே ....... அப்புறம் என்ன சந்தேகம் ???
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
05-மார்-201310:33:14 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் நன்றாக கேளுங்கள்.. இன்று மத்திய அரசை கண்டித்து மத்திய அரசுடன் கூட்டணியில் இன்றும் இருக்கும் திமுகவின் டெசோ நாடகம் அரங்கேற்றம், நாளை காங்கிரஸ் கட்சியை கண்டித்து ராகுல் காந்தி உண்ணாவிரதம் , நாளை மறுநாள் இலங்கையை கண்டித்து ராஜபக்சே தீக்குளிப்பு... \ எப்படி எப்படி எல்லாம் மக்களை முட்டாள் ஆக்கி அரசியல் செய்கிறார்கள் பாருங்கள் இளைஞர்களே... / நம்பாதே நம்பாதே இந்த காங்கிரஸ் மற்றும் திமுக திருடர்களை ஒருபோதும் நம்பாதே... பட்டதெல்லாம் போதும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை