தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும், "லோக் அதாலத்' எனும் மக்கள் நீதிமன்றம் அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக, கடந்த ஆண்டு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, சட்டசபையில், பட்ஜெட் அறிவிப்பில், நீதி நிர்வாகத்தைப் பொருத்தவரை, சென்னையில், மாற்று முறை தீர்வு மைய கட்டடம் கட்டுவதற்கு, தமிழக அரசு, கூடுதலாக தொகை வழங்கியது, சிவில் நீதிபதிகள் நியமனம், விரைவு கோர்ட்டுகள், நிரந்தர கோர்ட்டுகளாக மாற்றம் செய்தது பற்றி குறிப்பிடப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு, அனைத்து மாவட்டங்களிலும், லோக் அதாலத் அமைக்க, ஒப்புதல் அளித்திருப்பதாகவும், நிதியமைச்சர் தன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். சட்டத்துறை மான்ய கோரிக்கையின் மீது, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம், பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில், சில அறிவிப்புகள் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; சிலவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில், 44.70 லட்சம் ரூபாய் செலவில், மோட்டார் வாகன விபத்து
இழப்பீடு தீர்ப்பாயம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள்
முடிக்கப்பட்டு, கடந்த மாதம், 23ம் தேதி முதல், தீர்ப்பாயம் செயல்பட
துவங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில், சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என,
அறிவிக்கப்பட்டது; அதன்படி, சார்பு நீதிமன்றம் இயங்கி கொண்டிருக்கிறது.
திருச்சி மாவட்டம், லால்குடியில், குற்றவியல் நீதிமன்றம் அமைக்கும் பணி
நடைபெறவில்லை. தமிழகத்தில், 40, பு திய மாலை நேர நீதிமன்றங்கள் மற்றும்
விடுமுறை கால நீதிமன்றங்கள் அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதில், 31,
புதிய மாலை நேர நீதிமன்றங்கள் துவங்குவதற்கான திட்டம், அரசிடம் நிலுவையில் உள்ளது; உத்தரவு வரவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி; விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை; வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில்; கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உட்பட, பல நீதி மன்றங்கள் இன்னமும் அமையவில்லை . நீதிமன்ற மேலாளர்களுக்கு உதவியாக, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பைப் பொறுத்தவரை, அரசிடம் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை. அனைத்து மாவட்டங்களிலும், சட்ட
Advertisement
விழிப்புணர்வு முகாம்கள் நடத்த, 82.56 லட்சம், மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் மெகா நீதிமன்றங்கள் நடத்த, 2.96 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்குகள் தீர்வு:
அனைத்து
மாவட்டங்களிலும், நிரந்தர லோக் அதாலத் இயங்க வேண்டும் என்பது, தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில், மாவட்ட அளவில், லோக் அதாலத்
இயங்கி வருகிறது. ஆந்திர மாநிலத்தில், மாவட்ட அளவில், லோக் அதாலத் தொடங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், அவ்வப்போது நடத்தப்படும் லோக் அதாலத் மற்றும் "மெகா' லோக் அதாலத் மூலம், லட்சக்கணக்கான வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளன. மாவட்டங்களில் தினசரி, நிரந்தரமாக லோக் அதாலத் இயங்கினால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, கணிசமாக குறையும். நிரந்தர லோக் அதாலத்களுக்கு, உள்கட்டமைப்பு மற்றும் போதிய ஊழியர்கள் நியமனம் போன்ற வசதிகளை, அரசு செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிரந்தர லோக் அதாலத் அமைக்க, அரசுக்கு, நீதித்துறை சார்பில், பல முறை கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -