"ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை, தற்போது செயல்படுத்தும் திட்டமில்லை' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், இம்முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
ஜனவரி மாதம், டீசல் விலையை மத்திய அரசு, லிட்டருக்கு, 55 பைசா உயர்த்தியது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, நஷ்டத்தை சரி செய்வதற்கு, மாதந்தோறும் டீசல் விலையை, லிட்டருக்கு, 50 பைசா வரை, உயர்த்திக் கொள்ளவும், மத்திய அரசு அனுமதி தந்தது. மொத்த கொள்முதல் விலையை உயர்த்தியதன் மூலம், அரசு போக்குவரத்து கழகங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், டீசல் விலை உயர்வால், தனியார் போக்குவரத்து கழகங்களும், பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. இந்த செலவை சமாளிப்பதற்கு, ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்தும், பிப்ரவரி மாதத்தில், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்தனர். குறிப்பாக, 400 கி.மீ.,க்குள் சென்று வரும் பஸ்களில், கட்டணத்தை, 10 ரூபாயும், 400 கி.மீ.,க்கு மேல் சென்று வரும் பஸ்களின் கட்டணத்தை, 20 ரூபாய் வரை உயர்த்துவது என, முடிவு எடுத்தனர். மேலும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கட்டணத்தில் மாற்றம் இருக்கும் எனவும் கூறினர். இந்த கட்டண உயர்வு, மார்ச் மாதம் முதல் அமலாகும் என, அறிவித்தனர். பயணிகளின் நலன் கருதி, இம்மாதம் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று, தற்போது கூறப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியதாவது: தற்போது, மாணவர்களுக்கு தேர்வுகள் துவங்கியுள்ளதால், சென்னை மற்றும் முக்கிய மாநகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது. இந்த தருணத்தில் கட்டணத்தை உயர்த்தினால், பயணிகளின் வருகை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் தான் கட்டண உயர்வு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.