புதுடில்லி: ""டில்லி மாநில அரசின், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வுக்கு எதிராக, வரும், 23ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன், '' என, ஏழை மக்கள் கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்து, ஏழை மக்கள் கட்சி என்ற பெயரில், புதிதாக, அரசியல் கட்சி துவக்கியுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில், ஷீலா தீட்ஷித் தலைமையிலான, காங்கிரஸ் அரசு, மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை, கடுமையாக உயர்த்தி, மக்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. டில்லி மாநில அரசின், இந்த போக்கை எதிர்த்து, வரும், 23ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராடம் நடத்த முடிவு செய்துள்ளேன். இது, தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கான போராட்டம்.டில்லி அரசுக்கு எதிராக, மக்கள் ஒன்று திரள வேண்டும். அதிகப்படியான கட்டணத்தை, மக்கள் செலுத்தக் கூடாது. தண்ணீர் மற்றும் மின்சார கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளில் அமர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவேன்.இவ்வாறு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.