E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தமிழக சிறைகளில் கஞ்சா விற்பனை கனஜோர்: அதிகாரிகள் பாக்கெட்டில் பண மழை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 மார்
2013
23:21

தமிழக சிறைகளில், ஊழியர்ள் ஆதரவுடன் கஞ்சா விற்பனை கனஜோராக நடக்கிறது. சிறைத்துறை அதிகாரிகள் பணமழையில் நனைவதால், கஞ்சா விற்பனையை கண்டு கொள்வது இல்லை.
தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 12 சீர்திருத்த பள்ளிகள், ஐந்து சிறப்பு கிளை சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளை சிறைகள், இரண்டு திறந்த வெளி சிறைகள் என, மொத்தம், 134 சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் சராசரியாக, 6,250 தண்டணைக் கைதிகளும், 4,750 குற்றக் கைதிகள், 1,801 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக் கைதிகளில், 60 சதவீத கைதிகள் ரவுடிகள். இவர்கள், சிறைகளில் கஞ்சா, பீடி, சிகரெட், பான்பராக், ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றனர். இது பற்றிய தகவலை, உளவுத்துறை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது. அதை அடுத்து சிறைகளில் ஆய்வு மேற் கொண்ட சிறைத்துறை, ஏ.டி.ஜி.பி., திரிபாதி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, சென்னை புழல் சிறை அதிகாரிகளை கடந்த மாதம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த மாற்றத்துக்கு பின்னரும், சிறைகளில் கஞ்சா விற்பனை கனஜோராக நடக்கிறது. விற்பனைக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருப்பதால், கடத்துபவர்கள், விற்பவர்கள் எவ்வித தங்கு தடையின்றி, சிறைகளில் கடை விரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
தமிழக சிறைத்துறை அதிகாரிகளின் அறிக்கையின் படி, தமிழகத்தில், 2012ல், 5,250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் மற்ற சிறைகளை விட, சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி, வேலூர், சேலம் சிறைகளில் அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறைகளில் கஞ்சா விற்பனை தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், சிறைகளில் கஞ்சா விற்பவர், கடத்துபவர் சிறை ஊழியர்களிடம் சிக்கும் பட்சத்தில் அவர்களை போலீஸில் தான் ஒப்படைப்பர். தற்போது சிறை அதிகாரிகளே அவற்றை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யாமல், அறைகள், பிளாக்குகளுக்குகளில் கைதிகளை மட்டும் மாற்றம் செய்து, தவறை அப்படியே மறைத்து விடுகின்றனர். இதன் காரணமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கைதிகள் தொடர்ந்து, அதை செய்து வருகின்றனர். கைதிகளுக்கு தேவையான கஞ்சா பொட்டலங்களை, வார்டன்களே கடத்துவதும், மூன்று சிப்டாக பணிக்கு வரும் வார்டன்கள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளே கொண்டு வந்து, கைதிகளிடம் விற்பனை செய்வதும் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இன்றைய நிலவரப்படி சிறைகளில் வெளியில் இருந்து உள்ளே கொண்டு வரப்படும், 250 கிராம் கஞ்சா, 10 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ கஞ்சா ,40 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. இந்த விலையில், அதிகாரிகளின் பங்கு, கடத்தல் கும்பலுக்கான கூலி, உள்ளூர் போலீஸாருக்கு மாமூல் ஆகிய அனைத்தும் அடங்கி விடுகிறது. இதை பிரித்து சிட்டிகை கணக்கில், பொட்டலமாக தயார் செய்து, 10 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம், 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை கணக்கின் படி, கைதிகளிடம் விற்பனை செய்யும் போது, விற்பனையில் ஈடுபடுவர்களுக்கு கிலோவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. அது மட்டுமின்றி பீடி கட்டுக்கள், சிகரெட், ஹான்ஸ் புகையிலை, பான்பராக் ஆகியன வெளியில் விற்பனை செய்யப்படும் விலையை விட மூன்று முதல், பத்து மடங்கு வரை அதிகரிப்பு செய்து விற்கின்றனர். இந்த விற்பனைக்கு, சிறை வார்டன் உட்பட அனைவருமே ஒத்துழைப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறைகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அதிரடி வேட்டை நடத்த சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிறைகளில் கஞ்சா சிக்கும் பட்சத்தில், அதை வைத்திருந்த கைதி மீது மட்டுமின்றி, அந்த சிறை அறையை கண்காணித்து வந்த அலுவலகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறைகளில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள், ஊழியர்களே சப்ளை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்தி வர மறுக்கும், அதிகாரிகள் பணிக்கு வரும் நிலையில், அவர்களின் வீடுகளுக்கு ரவுடிகளை அனுப்பி, பெண்கள், குழந்தைகளிடம், சிறையில் உள்ளவர்களின் ஆட்கள் மிரட்டுகின்றனர். இது போன்று பாதிப்புக்கு உள்ளான அதிகாரிகளிடம் ரகசிய வாக்குமூலம் வாங்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளோம். அதன் படி, இது போன்ற மிரட்டலில் ஈடுபடும் ரவுடிகளை விரைவில் வேறு சிறைக்கு மாற்ற உள்ளோம். வெளியில் தெரிவிக்க முடியாத நடவடிக்கையும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லண்டன் லபக்கு தாஸ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
05-மார்-201316:27:29 IST Report Abuse
 லண்டன் லபக்கு தாஸ் திமுகவின் சில கைகூலிகள் செய்யும் வேலை இது....அம்மாவின் ஆட்சியில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை...கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார்...(அண்ணன் லார்டு லபக்கு தாஸ் லீவில் இருப்பதால், அவர் சார்பாக எழுதப்பட்ட பதிவு இது...)
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
05-மார்-201313:33:59 IST Report Abuse
PRAKASH குத்தாட்டம் மட்டும் தான் பாக்கி .. அரசியல்வாதிகள் சிறை செல்ல அஞ்சாமைக்கு காரணம் இது தானோ ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
05-மார்-201310:25:51 IST Report Abuse
Divaharan சிறையில் உள்ளவர்களை திருத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழைய ஜெயில் மாதிரி இல்லை. ஆனால் இந்த அதிகாரிகள் திருந்த விடமாட்டார்கள் . ஏனென்டால் அவர்கள் வருமானம் போய்விடும்?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
05-மார்-201310:02:18 IST Report Abuse
Mohandhas "நல்லா செக் பண்ணுங்க,, கஞ்சா செடிய சிறை தோட்டத்துல பயிரிட்டுருக்க போறாங்க"... சிறைசாலை ஒரு சொர்க்கலோகம் ஆவிட்டது.....
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
05-மார்-201307:00:31 IST Report Abuse
naagai jagathratchagan என்ன கிடைக்கவில்லை இந்த சிறை சாலையில் ....ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி உலகில் ..இதை சொன்னாலும் துக்கமடா சொல்லாவிட்டால் வெட்கமடா துக்கமில்லாமல் ...தூக்கமில்லாமல் வாழுவோம் ஒரு பக்கமடா
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-மார்-201305:38:28 IST Report Abuse
g.s,rajan Sagala vasathigaludan Jail, ithu Indiavil mattume Saathiyam. g.s.rajan,chennai.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
05-மார்-201305:27:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அதிகாரிகள் மட்டும் பண பேய்க்கு அடிமையாக மாட்டார்களா என்ன?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Paris EZHILAN - Paris,பிரான்ஸ்
05-மார்-201305:00:31 IST Report Abuse
Paris EZHILAN அப்ப ஜெயிலர் அத்தான் வீட்டில் பெண் எடுத்தால், நிறைய வரி கிடைக்கும்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
05-மார்-201304:40:45 IST Report Abuse
villupuram jeevithan வெளியே கஞ்சா விற்றதற்காக உள்ளே? உள்ளேயும் வர்த்தகம் தொடர்கிறது?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-மார்-201300:52:10 IST Report Abuse
தமிழவேல் உள்ளே டாச்மாகுன்னு எதுவும் கிடையாதா ? இல்லேன்னா ஜெயிலுக்குப் போகவேண்டிய ஆசையே உட்டுபோயிடும்..
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.