மினி லாரியை இழுத்துச் சென்ற டிராக்டர் விபத்து : டிரைவருக்கு நஷ்டஈடு வழங்க, ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மினி லாரியை இழுத்துச் சென்ற டிராக்டர் விபத்து : டிரைவருக்கு நஷ்டஈடு வழங்க, ஐகோர்ட் உத்தரவு

Added : மார் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: பழுதடைந்த மினி லாரியை இழுத்துச் சென்ற டிராக்டர் விபத்துக்கு உள்ளானதில், டிரைவருக்கு நஷ்டஈடு வழங்கும்படி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டி-சிவகாசி சாலையில், மணல் ஏற்றி வந்த மினி லாரி பழுதானது. இந்த லாரியை இழுத்துச் செல்ல, ஒரு டிராக்டர் வந்தது. மினி லாரியை இழுத்துச் செல்லும் போது, திடீரென லாரியின் "இன்ஜின்' இயங்கி, முன் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது மோதியது. இதில், டிராக்டரை ஓட்டிச் சென்ற சுந்தரபிரசாத் என்பவர், படுகாயம் அடைந்தார்.
தனக்கு, ஆறு லட்சம் ரூபாய், நஷ்டஈடு வழங்க, ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல்லில் உள்ள, தொழிலாளர் இழப்பீடுக்கான துணை கமிஷனரிடம், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை, துணை கமிஷனர் நிராகரித்து விட்டார். அவரது உத்தரவில், "டிராக்டர் உரிமையாளர் குலசேகர ஆழ்வார் என்பவரின் மகன், சுந்தரபிரசாத். விவசாயப் பணிகளுக்காக, டிராக்டரை பயன்படுத்த வேண்டும்; ஆனால், மணல் லாரியை இழுத்துச் செல்ல, டிராக்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில், சுந்தரபிரசாத் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு: வணிக ஆதாயத்துக்கு, டிராக்டரை பயன்படுத்தவில்லை. நின்று போன, மினி லாரியை இயக்குவதற்காக, டிராக்டரை பயன்படுத்தியுள்ளனர். அதை, சட்டவிரோதமானது என, கூற முடியாது. நடுவழியில் ஒரு வாகனம் நின்றால், மற்றொரு வாகனம் மூலம், அதை இழுத்துச் சென்று, பழுது பார்ப்பது வழக்கமான ஒன்று தான். அதன்படி, மனுதாரரும், டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார்.
கிராமங்களில், உணவு தான்யங்கள், உரங்கள், விவசாய சாதனங்களை ஏற்றிச் செல்ல, டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர். மற்றபடி, பழுதடைந்த வாகனங்களை இழுத்துச் செல்லவும் பயன்படுத்துகின்றனர். சட்டவிரோத செயல்களில் தான், ஈடுபடுத்தக் கூடாது. வணிக காரணத்துக்காக, டிராக்டர் பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கைப் பொருத்தவரை, முதலாளி- தொழிலாளி உறவு முறையை, நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. பழுதான மினி லாரியை இழுத்துச் செல்ல, டிராக்டரை மனுதாரர் இயக்கியுள்ளார். ஒரு டிரைவராக அவர் செயல்பட்டுள்ளார். தந்தை- மகன் உறவு என இருந்தாலும், அதற்காக, அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாது. நஷ்டஈடு பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. மருத்துவ சான்றிதழ், வருமான ஆதாரம், இவற்றை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே, 40 ஆயிரம் ரூபாய், நஷ்டஈட்டை, ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை