மதுரை: தஞ்சாவூரில் கூட்டுறவு விற்பனையாளர்கள் பணி நியமன அறிவிப்பிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. தஞ்சாவூர் அரியச்சேரி லெனின், கும்பகோணம் செல்வி உட்பட 21 பேர் தாக்கல் செய்த மனு: நாங்கள் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில், பல ஆண்டுகளாக தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் விற்பனையாளர்களாக பணிபுரிகிறோம். தஞ்சாவூர் மாவட்ட
ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில், இணைப்பதிவாளர் 2012 நவ.,1 ல் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதில்,"கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு ரேஷன்கடைகளுக்கு விற்பனையாளர், கட்டுனர் பணிக்கு 278 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க விதிகள்படி, ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும். ஆனால், நேர்முகத்தேர்வு மூலம் 278 பேரையும் தேர்வு செய்வது, விதிகளுக்கு புறம்பானது. இணைப் பதிவாளரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். இணைப்பதிவாளரின் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, மார்ச் 15 க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.