"அனாதையாக' திரிபவர்களை கண்டுபிடிக்க "யு டியூப்' புறநகர் போலீஸ் அசத்தல்| Dinamalar

தமிழ்நாடு

"அனாதையாக' திரிபவர்களை கண்டுபிடிக்க "யு டியூப்' புறநகர் போலீஸ் அசத்தல்

Added : மார் 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை புறநகரில், மூளை வளர்ச்சி குன்றியும், மனநலம் பாதித்தும் "அனாதைகளாக' சுற்றித் திரிபவர்களை, "யு டியூப்' மூலம் உறவினர்கள் கண்டுபிடிக்க, போலீசார் வழிகாட்டுகின்றனர்.மதுரைக்கு வரும் வடமாநிலத்தவர்களில் சிலர், வழித்தவறி, உறவினர்களிடம் இருந்து பிரிந்து, ரோட்டில் சுற்றித் திரிகின்றனர். இதில், சிலரை "சித்தராக' கருதி, மக்கள் குறைகளை அவர்களிடம் கொட்டுகின்றனர். "சித்தரும்' ஏதாவது "உளற', அது எதிர்பாராவிதமாக பலித்துவிட, "எல்லாம் சித்தர்மயம்' எனக்கருதி, மக்கள் பணத்தை கொட்டுகின்றனர். இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி, சிலர் பணவசூலிலும் ஈடுபடுகின்றனர். இருநாட்களுக்கு முன், பழங்காநத்தம் பகுதயில் "பாபா' என்பவரும் கதையும் இதுதான். இவரை நேற்று பிடித்த புறநகர் போலீசார், டாக்டர் சான்று பெற்று, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்க முயற்சி எடுத்துள்ளனர்.பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது:புறநகரில் இப்படி திரிபவர்களை "யு டியூப்' மூலம், உறவினர்கள் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "மதுரை மிஸ்சிங் வெர்சன்' என்று "சர்ச்' செய்தால், வீடியோ மற்றும் போட்டோக்கள் "யு டியூப்பில்' இடம்பெற்றுள்ளன, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை