மும்பை: தந்தையின் இறுதி சடங்கில்பங்கேற்க ,அனுமதி கோரி மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி,சாத்விபிரக்யா சிங் தற்காலிக ஜாமின் கேட்டு மனு செய்துள்ளார்.. கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர்பலியாயினர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மகாராஷ்டிரா பயங்கரவாத குற்ற தடுப்பு போலீசார் விசாரித்து, பெண் சாமியார் சாத்விபிரக்யாசிங் தாகூர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். வழக்கு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியான பிரக்யாசிங்கின் தந்தை சந்திரபால்சிங் கடந்த சனியன்று மத்திய பிரதேச மாநிலத்தில் காலமானார்.இதையடுத்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்க தற்காலிக ஜாமின் வழங்குமாறு பிரக்யாசிங் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.