புதுடில்லி: ரயில் விபத்துக்களில் யானைகள் பலியாவதை தடுத்து நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, 10 மாநில அரசுகள் மற்றும் ரயில்வேதுறை ஆகியவற்றிற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷக்திபிரசாத் நாயக் , சுப்ரீம் கோர்டில் வழக்கு ஒன்றினை தொடுத்தார். அதில், நாட்டில் ரயில் மோதிய விபத்தில் யானைகள் பலியாவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பல்வேறு மாநிலங்களில் இது போன்ற ரயில்விபத்துக்களால் ஆண்டுக்கு 8 முதல் 10 யானைகள் வீதம், கடந்த 1987-ம் ஆண்டில் இருந்து இதுவரை 110-க்கும் மேற்பட்ட யானைகள் பலியாகியுள்ளன.இவற்றினை தடுத்து நிறுத்தவும், விபத்துக்களில் இருந்து யானைகள் பலியாவதை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ரயில்வே நிர்வாகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் 11 மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கினைவிசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், யானைகள் பலியாவதை தடுக்க போதிய ஏற்பாடுகளையும், வழிகாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு அசாம், ஒடிசா, கேரளா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் , உத்தர்க்காண்ட், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய 10 மாநில அரசுகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ரயில்வே நிர்வாகம், ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.