நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், இரு மாதங்களில், எட்டு குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும், இரு மாதத்தில், அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு எஸ்.ஐ., நான்கு போலீஸார், அப்பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். வேலைக்காக, வெளிமாநிலங்களுக்கு ஆள் கடத்தல், குழந்தை தொழிலாளர் மீட்பு மற்றும் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்துதல் போன்ற பணிகளை, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 2009ம் ஆண்டு முதல், அனைத்து மாவட்டங்களிலும், இப்பிரிவு செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இப்பிரிவு துவங்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட பணிகளை செய்து வரும் போலீஸார், இந்தாண்டு ஜனவரி, ஃபிப்ரவரி ஆகிய இரு மாதங்களில், எட்டு குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
"குழந்தை திருமணம் குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தால், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், நாமக்கல் மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது' என, அப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.