நாமக்கல்: மாவட்ட வருவாய் அலுவலரை, "கலெக்டராக' பதவி உயர்வு அளித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், மோகனூர் பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்த மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில், தனி அலுவலராக (டி.ஆர்.ஓ.,) மலர்விழி என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், மார்ச், 10ம் தேதி, சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், ஆலைக்கு சொந்தமான மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. அதற்காக, மோகனூர், மணப்பள்ளி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "முன்னிலை: மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர்' என, அச்சடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் எப்போது, "ஆட்சியர்' (கலெக்டர்) ஆனார், என்பது தெரியவில்லை. இந்த போஸ்டரை பார்க்கும் மோகனூர் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "போஸ்டரில் உள்ள பிழையை சரியாக பார்க்காமல் நிர்வாகத்தினர் அசட்டையாக இருந்துள்ளதை, அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது' என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.