வாஷிங்டன்: கடந்த நவம்பர் மாதம் டில்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு வீரமங்கை விருதை அமெரிக்ககா வழங்குகிறது. வரும் சர்வேதச பெண்கள் தினமான 8ம் தேதியன்று வாஷிங்டனில் நடக்கும் விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிக்சேல் ஒபாமா வழங்குகிறார்.
ஆண்டுதோறும் பெண்கள் தினத்தன்று பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக சர்வேதச அளவில் 10 பெண்களை தேர்வு செய்யப்படுவர். இதன் படி 10 பெண்கள் பட்டியலில் டில்லி மருத்துவமாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்தனர். இந்நேரத்தில் இந்த மாணவி தனது கற்பை காப்பாற்ற கடுமையாக போராடினார். இந்த கும்பலுடன் ஏற்பட்ட தாக்குதலில் கொடுங்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதில் டில்லி நகரமே ஸ்தம்பித்து போனது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு சட்டம் கடுமையாக்கப்பட்டது.
மத்திய அரசின் உதவியுடன் சிங்கப்பூரில் வைத்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவி இறந்தார். இந்நிலையில் அவரது வீரப்போராட்டத்தை பாராட்டி வீரமங்கை விருதை அமெரிக்க அரசு வழங்குகிறது. இந்த விருதை மாணவியில் பெற்றோர்கள் சார்பில் அமெரிக்காவில் பெறுவர்.
அமெரிக்க விருதை பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான நஜ்மல் ஹெப்துல்லா வரவேற்றுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுவாக இந்திய பெண்கள் உலக தர வரிசையில் உண்மையில் வீரமங்கைதான்...,மேலைநாடுகள் நாகரிக மோகம் நிழல் சினிமா தாக்கம்.., போன்ற காரணங்களால் பெண்களுக்கு கற்பழிப்பு மரணங்கள் ஏற்படுகின்றன இந்திய பெண்கள் மன வலிமை பெற்றவர்கள்.., அமெரிக்க சுதந்திர தேவி திருகரங்களால் அமெரிக்க அரசு வழங்கும் இந்திய பெண்மைக்கு வீர கிரிடம் சூட்டி அக மகிழ்வதை..,வீர மங்கை விருதை அன்புடன் வரவேற்போம் பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.