மெலிந்து போகும் கங்காரு : மிரட்டி வரும் இந்தியாவுக்கு கிடைத்த இன்னிங்ஸ் வெற்றி !
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்: ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த புஜாரா ( இரட்டை சதம் ),முரளி விஜய் (167 ரன்கள்), ஜடேஜா ( 6 விக்கெட் ) , அஸ்வின் (6 விக்கெட்) வீழ்த்தி பெரும் துணையாக இருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தவிர, டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


ஆஸி.,க்கு மீண்டும் அடி :

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237/9 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.ஜடேஜா அசத்தல்:

நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா "சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அஷ்வின் அபாரம்:

பின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா "ரன் அவுட்'டாக்கினார். வேட் (10), மேக்ஸ்வெல் (8) ஆகியோரை அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த பட்டின்சனும் (0) அஷ்வினிடம் சரணடைய, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.இரண்டாவது சிறந்த வெற்றி:

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றது. தவிர, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தோனி "நம்பர்-1' :

இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி), பின்னுக்கு தள்ளி தோனி (45 டெஸ்ட், 22 வெற்றி) முதலிடம் பிடித்தார்.மோசமான ஸ்கோர் :

இரண்டாவது இன்னிங்சில் 131 ரன்களுக்கு "ஆல் அவுட்டான' ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக தனது, 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு "ஆல் அவுட்டானது'.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aleem Raja - kampala,உகான்டா
06-மார்-201301:18:46 IST Report Abuse
Aleem Raja இப்ப என்னப்பா சொல்றீங்க...........புண்ணியவான்களா..........ஒரு மேட்சுல தோத்தா உடனே தோணி சரி இல்லை,அவரை கேப்டன் பதவியை விட்டு தூக்கணும்ங்கறது.ஜெயிச்சுட்டா தலை மேல மேல வச்சு கொண்டாடுறது...........மாறுங்கப்பா......மாறுங்க.............தோனி எப்பவும் கிரேட்தான்.வோர்ல்ட்கப் எடுத்துதந்த தங்க தலைமகன் தோனிக்கு எனது ராயல் சல்யூட்.
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramalingam - THOOTHUKKUDI ,இந்தியா
05-மார்-201319:49:26 IST Report Abuse
Muthu Ramalingam இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த புஜாரா, விஜய், அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு எனது நல்வாழத்துக்கள், தொடரும் உங்களது வெற்றி கூட்டணி,
Rate this:
Share this comment
Cancel
V.Mohanakrishnan - Nagapattinam,இந்தியா
05-மார்-201319:48:17 IST Report Abuse
V.Mohanakrishnan வெற்றி தொடரட்டும் . வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rao - Doha,கத்தார்
05-மார்-201317:35:17 IST Report Abuse
Rao வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
RATHINAM.NN - TIRUPUR,இந்தியா
05-மார்-201317:25:23 IST Report Abuse
RATHINAM.NN இன்னும் இரண்டு டெஸ்ட் பாக்கி உள்ளது. அதையும் வென்று நாட்டின் பெருமையை நிலை நாட்டுங்கள் வாழ்க வளர்க. வாழ்த்துக்கள் டோனி அண்ட் பாய்ஸ். ரத்தினம்.ந Tirupur India
Rate this:
Share this comment
Cancel
priyadharshan - Chennai,இந்தியா
05-மார்-201316:55:04 IST Report Abuse
priyadharshan இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-மார்-201316:37:27 IST Report Abuse
Nallavan Nallavan பாராட்டுக்கள் ... பெருமையுடனும் .... வெறியுடனும் .... இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் .... தலை கொழுதுப்பெடுத்து திரிவார்கள் .... அடுத்த முறை காங்காரு மீண்டும் திமிரை அடக்கும் ... அடங்குவார்கள் .... எத்தனை முறை பார்த்தாயிற்று ....
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Bangalore,இந்தியா
05-மார்-201315:55:35 IST Report Abuse
Tamilan இந்திய அணிக்கு வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
muthuraj - chennai  ( Posted via: Dinamalar Windows App )
05-மார்-201315:49:23 IST Report Abuse
muthuraj valthukal indian team
Rate this:
Share this comment
Cancel
Ashokkumar Devaraj - Chennai,இந்தியா
05-மார்-201314:59:16 IST Report Abuse
Ashokkumar Devaraj நமக்கு கவுரவம் சேர்த்த நம் நாட்டு வீரர்களுக்கு சபாஷ் சொல்லி ஒரு சல்யுட்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்