CAG report on farm debt waiver scheme reveals irregularities | எந்த துறையை தொட்டாலும் ஊழல் இல்லாமலா ? விவசாய கடனில் 10ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., | Dinamalar
Advertisement
எந்த துறையை தொட்டாலும் ஊழல் இல்லாமலா ? விவசாய கடனில் 10ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எந்த துறையை தொட்டாலும் அதில் முறைகேடுகள் மற்றும் ஊழல் இல்லாமல் இருக்காது என்ற நிலைக்கு காங்கிரஸ் அரசு பெயர் வாங்கியிருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் தகுதி இல்லாத நபர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்து ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய கணக்காயம் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்த தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 2008 ல் 52 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த தணிக்கை துறை இன்றைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏறக்குறைய 4 ஆயிரத்து 800 கணக்குகள் தவறான பயனீட்டாளர்கள் இந்த பலனை அனுபவித்துள்ளனர். வங்கி கணக்கில் மொத்தம் 90 ஆயிரத்தில் 20 ஆயிரம் பேர் கணக்கில் முறைகேடு நடந்திருக்கிறது. மத்திய அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தின்படி 8 சத வீத விவசாயிகள் தகுதி இல்லாதவர்கள். இவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 800 கணக்குகள் வங்கி அதிகாரிகளால் திருத்தி எழுதப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி பயனாளிகளிடம் முறையான ஒப்புகை பெறப்படவில்லை. இந்த முறைகேட்டில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.,தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இது தேசத்தை ஏமாற்றும் செயல். காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ஆயுதபேரம், விமானங்கள் வாங்குதல், இந்த வரிசையில் விவசாய கடன்களும் அடங்கியிருக்கிறது. இதனை முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (37)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
06-மார்-201316:12:00 IST Report Abuse
Rajesh அட பாவிகளா சோத்து பானையில கூட கை விட்டுடிங்கள ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
News Rider - chennai,இந்தியா
06-மார்-201314:57:13 IST Report Abuse
News Rider இனிமேல் மாசம் ஒரு ஊழல் மட்டும் வர மாறி பாத்துகோங்க தலைவர்களே. தினமும் ஒரு ஊழல் நா எனக்கே போர் அடிக்குது.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
06-மார்-201313:30:01 IST Report Abuse
CHANDRA GUPTHAN ஏட்டையா , ஏட்டை...................யா என்னோட நாட்ட காணல ? கண்டுபிடிச்சுகொடுங்க கதைத்தான் . இது என்ன பிரமாதம் . பெட்ரோலியத்துறை எவ்வளவு கொள்ளையடிக்கிறது என்று அடுத்தமாதம் வரும் . மிரண்டு போய்விடுவோம் . 3 லக்ஷம் கோடிக்கு மேல் அம்பானிகளுக்கு தாரை வார்த்து ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது விலைவாசி ஏற்றம் என்ற தாரை ஊற்றிய ப.சி. , அன்டோனிய மேனியா (சோனியா ) மௌனமோகன சிம்மன், பிரனாப்பு முகர்ஜி, திருட்டு முன்னேற்ற கழகம் (மு.க.குடும்பம், கேடி மாறன் பிரதர்ஸ் & co ) ஊழல்களும் வெளிவரும் . வழக்கம் போல நாமளும் படித்துவிட்டு , நாக்கு வெளித்தள்ள குடும்ப சுமையையும் நாட்டின் சுமையையும் சுமப்போம் . இன்னும் தூங்குவோம் இந்தியனே . ஒரு நாள் நாம் விழிக்கும் போது கட்டிய கோவணமும் உருவப்பட்டிருக்கும் . எத்தனை கோடி கொள்ளையடித்தால் என்ன காலை நீட்டி படுத்துவிட்டால் ஆறடி நிலம் கூட சொந்தமில்லை இது தெரிந்தும் .................. வாழ்க இந்திய பணநாயகம் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
05-மார்-201319:54:13 IST Report Abuse
sundaram இது ஒன்னும் புதுசா அரசாங்கத்துக்கு சொல்லி தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. இதனால்தான் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் வங்கி ஊழியர்களின் கையாடல் மற்றும் களவாடல் திட்டத்துக்காகாவே தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மக்களுக்கு பயன் என்ற நோக்கம் இருந்தால் இந்த திட்டத்தை நலிந்து கொண்டிருக்கும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தி இருக்கலாம். இதன் மூலம் தபால் அலுவலகங்களும் பயன் பெறும் மக்களும் பயன் பெறுவார்கள். வங்கியின் மூலம் என்று அறிவித்ததின் நோக்கமே வங்கி ஊழியர்களையும் அதிகாரிகளையும் (உபரி வருமானத்தின் மூலம்) திருப்தி செய்யத்தான்.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Mahanidhi Anantharoopan - Frankfurt,ஜெர்மனி
05-மார்-201319:47:41 IST Report Abuse
Mahanidhi Anantharoopan பசுமை புரட்சி நடத்தி நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் நூத்தி இருபது கோடி மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய துர் பாக்கிய நிலை. அதிலும் ஊழல், லஞ்சம். அந்நிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் வந்தால் விவசாயிகள் பெரும் பலன் அடைவார்கள், என்று சொல்லப்பட்டதே அது இது தானா?. மத்திய அமைச்சர் ஒருவர் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வருவதால் மூவாயிரம் கோடிகள் முதலீடு வரும். அப்படி மூவாயிரம் கோடிகள் வந்தால் அவர்கள் குளிர் பதன கிடங்குகள் அமைப்பார்கள். அதனால் விவசாயிகளுக்கு பெரு நன்மை கிடைக்கும் என்றெல்லாம் சொன்னார்களே? அப்படி என்றால் இந்த ஐம்பத்து ரெண்டாயிரம் கோடிகளை வைத்து எவ்வளவு நன்மைகள் செய்து இருக்கலாம். இந்த கடன் தள்ளுபடி என்பதே பெரிய பித்தலாட்டம், மிக குறைந்த பட்சமாக கடனை தள்ளுபடி செய்யாமல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒரே சீராக இந்த தொகை பிரித்து கொடுக்க பட்டு இருக்க வேண்டும். ஒரு பேச்சுக்கு நான் ஐந்து ஏக்கர் வைத்து உள்ள விவசாயி, நான் எந்த கடனும் வாங்க வில்லை. எனக்கு எந்த பலனும் கிடையாது. ஆனால் என் நண்பர் அதே ஐந்து ஏக்கர் வைத்து உள்ள விவசாயி, அவர் கடன் வாங்கி உள்ளார் என்றால் அவருக்கு மட்டும் பலன் என்பது நியாயமாகுமா?. அதுவும் அரசியல் தொடர்பு உடையவர் என்றால் அவர்கள் இந்த மாதிரி திட்டம் வர போகின்றது என்று தெரிந்தால் உடனே கடனை முடிந்த அளவு வாங்கி இருப்பார்கள். இங்கே பாதிக்க படுவது எப்பொழுதுமே ஏழை விவசாயி மட்டும் தான்.
Rate this:
0 members
0 members
54 members
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
05-மார்-201319:37:11 IST Report Abuse
Raja Singh விற்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் வாங்கிகொண்டேதான் இருப்பார்கள் . விலைமதிப்பற்ற வாக்கினை அரசியல் வியாபாரிகளிடம் விற்றால் அவர்கள் வாக்கிற்கு கொடுத்த பணத்தை ஊழலாக தான் திரும்பஎடுப்பர் . அப்புறம் விவசாய கடன் ஒரு ஏக்கர் முதல் பத்து ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிடைக்காது , குறைந்தபட்சம் நூறு ஏக்கர் நிலமோ அல்லது இல்லாத பண்ணையர்களுக்கு தான் கிடைக்கும் , 95% சதவிகிதம் இதுதான் நடைபெற்று கொண்டு இருக்கிறது . ஊழல் இல்லாத தேசம் வேண்டும் என்றல் ஆசை படலாம் பேராசை படகூடாது , குறிப்பாக தேசத்தில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சி , கம்யூனிஸ்ட் உம் மக்களால் துரத்தியடிகபடனும் , அப்புறம் முக்கியமாக ஜாதி கட்சிகள் இயக்கங்கள் , மதவாத கட்சிகள் இயக்கங்கள் வேரருக்கப்படனும் , சுதந்திர காற்றை சுவாசிக்க சிந்தித்து வாக்களித்து செயல்படுவோம் மாற்றம் ஒன்றே நிலையானது இல்லையேல் ஏமாற்றமே ...
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Cancel
rengasamy chandrasekaran - chennai,இந்தியா
05-மார்-201319:11:29 IST Report Abuse
rengasamy chandrasekaran வோட்டு வங்கி அரசியல், குடும்ப அரசியல் இருக்கும்வரை இந்த மாதிரி ஊழல் இருக்கத்தான் செய்யும். தகுதி, திறமை நல்ல பண்பாடு மரியாதை இல்லாதவரை இந்தியா இப்படித்தான் இருக்கும்.
Rate this:
0 members
1 members
10 members
Share this comment
Cancel
nirmalnageswaran. - kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
05-மார்-201319:09:24 IST Report Abuse
nirmalnageswaran. இப்பவே கண்ண கட்டுதே
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
05-மார்-201319:06:22 IST Report Abuse
K.SURIYANARAYANAN எங்கும் வூழல், எல்லாம் வூழல். வாழ்க வாழ்க காங்கிரஸ் கட்சி , தொடர்க இன்னும் மேலும் மேலும் பல பல வூழல் செய்து. கொளுத்த பெருச்சாளிகள் போல வாழவேண்டும் என வாழ்த்தும் அன்பு நெஞ்சம் கொண்ட ஓர் நோஞ்சான் இந்தியன்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
05-மார்-201318:58:16 IST Report Abuse
Wilsonsam Sp kangirasu vara therthali vetri pera ore vazhi ullathu athuthaan hasare sonna lokpaal satam athai iravodu iravaha niraivetrinaal kangiras anithu idangalilum vetri perum aanal thanku thaane appu vaithu kollathu kaangirasu
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்