மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட, 500 கோடி ரூபாய் சொத்து வரியில், இதுவரை, 354.47 கோடி ரூபாய் தான் வசூலாகிஉள்ளது. 70 சதவீதமே வசூலாகியுள்ள நிலையில், இன்னும், 25 நாட்கள்
அவகாசம் உள்ளதால், வரி
வசூல் மேலும் உயரும் என, மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சென்னையில் மாநகராட்சி விரிவாக்கத்துக்கு முன், 6.9 லட்சமாக இருந்த சொத்து வரி செலுத்தும் கட்டடங்களின் எண்ணிக்கை, தற்போது, 10.71 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன்படி, நடப்பு நிதியாண்டில் (2012-13), விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து, 500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து இருந்தது.
சொத்து வரி, அரையாண்டுக்கு ஒரு முறை கட்டப்பட வேண்டும். செப்., மாத முடிவில், அரையாண்டு நிதியாக, 210 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.
நிதியாண்டு முடிய, இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், இதுவரை, பழைய மாநகராட்சி பகுதிகளில் இருந்து, 272.85 கோடி ரூபாய், விரிவாக்க பகுதி
களில், 81.62 கோடி ரூபாய் என, மொத்தம், 354.47 கோடி ரூபாய் வசூலாகிஉள்ளது. வரி வசூல், 70.8 சதவீதமாக உள்ளது.
கடந்த, 2009-10ம் ஆண்டில், 69.78 சதவீதமும், 2010-11ம் ஆண்டில், 63.08 சதவீதமும், 2011-12ம் ஆண்டில், 64.15 சதவீதமும் சொத்து வரி வசூலிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 70.8 சதவீதம் என்றாலும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் உயரும்
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பு ஆண்டில், 500 கோடி ரூபாய் இலக்கில், 354.47 கோடி ரூபாய் வரை சொத்து வரி வசூலிக்கப் பட்டுள்ளது. நிதியாண்டு முடிய இன்னும், 25 நாட்கள் உள்ளதால், வரி வசூல் மேலும் உயரும். மீதி தொகையை வசூலிக்க எல்லா முயற்சிகளும்
எடுக்கப்பட்டு வருகின்றன.
வங்கிகள் மூலம் சொத்து வரி செலுத்தும் நடைமுறைக்கு, மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இதன்மூலம், 1.2 கோடி ரூபாயும், இணைய தளம் மூலம், நான்கு கோடி ரூபாயும் வசூலிக்கப் பட்டுள்ளது. பிற வங்கிகள் மூலமும் சொத்து வரி செலுத்தும் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்
கூறினார்.
அரசு கட்டடங்கள்
அரசு துறை சார்ந்த
கட்டடங்களில் இருந்து பெரும்பாலும் சொத்து வரி, முறையாக மாநகராட்சிக்கு செலுத்தப்படுவதில்லை. அதனால், இந்த முறை, சொத்து வரி செலுத்தாத அரசு கட்டடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
அவர்களுக்கு, நினைவூட்டல் கடிதம் அனுப்பவும், துறையின் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசி, சொத்து வரி வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
தண்டோரா சரியா?
வரி செலுத்தாதவர்கள் வீடுகள் முன் தண்டோரா போடும் திட்டம், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வந்தது.
இந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த போவதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,"சொத்து வரி கட்டுங்கள் என, ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் செய்யப்படும். வீட்டின் முன் தண்டோரா போடுவது, மனதை புண்படுத்தும் செயல். அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றனர்.
தொழில் வரி ரூ.172 கோடி
சென்னை மாநகரில், தொழில் செய்வோர் அரையாண்டுக்கு ஒரு முறை தொழில் வரி செலுத்த வேண்டும்.
நடப்பு நிதியாண்டில், 210 கோடி ரூபாய் தொழில் வரி வசூலிக்க திட்டமிடப் பட்டு இருந்தது. இதுவரை, 172.27 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இது வசூலிக்க வேண்டியதில், 82 சதவீதம்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.