சென்னை:"போலியான அன்பு, பாச வலையில் இருந்து விடுபட விரும்புகிறேன்' என, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, வாய் பேச முடியாத பெண் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனி, நான்காவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் மோகன், 36; தனியார் மென்பொருள் நிறுவன பணியாளர். இவரது மனைவி கவிதா, 32; பட்டய படிப்பு முடித்தவர். இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதிக்கு தியா, 3, என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கவிதா தீக்குளித்து இறந்தார். அவரை கட்டிப் பிடித்த குழந்தையும், காயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்நிலையில், கவிதாவின் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவர் எழுதியிருந்ததாவது:
திருமணமான புதிதில் என் மீது அன்பு, பாசம் காட்டினீர்கள். போகப் போக அந்த பாசம் பொய் என்பதை தெரிந்து கொண்டேன். என்னை விட, "டிவி'யும், இன்டர்நெட்டில் ஆபாச படமும் தான் உங்களுக்கு முக்கியம் என, நினைத்து விட்டீர்கள்.
இப்போது, என் மீது அன்பு காட்டுவது இல்லை. எனக்கு உடல் மட்டும் தான் ஊனம். உங்களுக்கு உடலும், உள்ளமும் ஊனமாகி விட்டது.
நான் தனித்து விடப்பட்டது போல் உணர்கிறேன். போலியான அன்பு, பாசத்தில் இருந்து விடுதலை பெற விரும்புகிறேன். அதனால், வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.