திருப்பூர்:குறைந்தழுத்த மின்சாரம் சப்ளையாவதால், மின் மோட்டார் இயக்க முடியாமல், முத்தணம்பாளையம் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெங்காயம் சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என கவலைப்படுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தணம்பாளையம் பகுதியில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மக்காச்சோளம், சோளத்தட்டு, வாழை மற்றும் வெங்காயம் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான தோட்டங்களில் வெங்காய நாற்றுக்கள் பயிரிடப்பட்டுள்ளன. 80 நாட்களுக்கு முன், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வெங்காய நாற்றுகள், தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளன. கடந்த ஒரு வாரமாக, முத்தணம்பாளையம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மின் மோட்டார் இயக்கி, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அதனால், அறுவடை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.விவசாயி ஒருவர் கூறுகையில், "ஒரு ஏக்கரில் வெங்காயம் பயிரிட, 70 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளோம். வழக்கமாக 3,000 கிலோ வரை சாகுபடி கிடைக்கும். தற்போது ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அறுவடைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஆனால், குறைந்தழுத்த மின்சாரம் சப்ளையாவதால், மின் மோட்டார் இயக்க முடிவதில்லை. பயிர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாததால், எதிர்பார்க்கும் சாகுபடி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.