கடலூர்:கடலூர்
நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 31.44 கோடி ரூபாய் அளவிற்கு
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என கடலூர் நகராட்சி சேர்மன்
சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது அறிக்கை:காவிரி நதி
பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர்ச்சியான பணி மற்றும் விடா
முயற்சியின் காரணமாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு
மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டிருப்பது மாபெரும் வெற்றியாகும்.
இந்த
மாகந்தான வெற்றியின் மூலம் தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நிரந்தரத்
தீர்வை கண்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடலூர் நகராட்சியின் சார்பில்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.முதல்வர் ஜெ., ஆசியுடன் செயல்பட்டு வரும்
கடலூர் நகராட்சி சார்பில் கடந்த 2011-12ம் ஆண்டில் ஒருங்கிணைந்த நகர் புற
அபிவிருந்தி திட்டத்தின் மூலம் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 6 சாலை
பணிகளும், நகர்புற சாலை உள்கட்டமைப்பு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய்
செலவில் 15 சாலைப் பணிகளும், "தானே' புயல் நிதியிலிருந்து 4.40 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் 50 சாலைப் பணிகள் உள்ளிட்ட தெருவிளக்கு, குடிநீர், பொது
சுகாதாரப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, கட்டடம் பழுபார்த்தல் உள்ளிட்ட
பணிகளுக்கு மொத்தம் 22 கோடிய 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
செய்யப்பட்டுள்ளது.மேலும் 2012-13ம் ஆண்டில் மழைநீர் வடிகால் வசதிக்கென 56
லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகளும், 4.37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 27
சாலைப் பணிகளும், பிற்படுத்தப்பட்டோர் பகுதி மானிய நிதி திட்டத்தில் 1.42
கோடி ரூபாய் மதிப்பில் 10 பணிகள் உட்பட இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 31
கோடியே 44 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் நடந்துள்ளது.மேலும், முதல்வர் ஜெ.,
கடலூர் நகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு
260.44 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும்
16 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு திட்டம்
தயாரித்து அனுமதிக்காக அனுப்பட்டுள்ளது.இந்த திட்டங்களைச் செயல்படுத்த
நகராட்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தேவையான நிதி பெற்று சிறப்பாக நடந்து வரும் கடலூர் நகராட்சியில், எந்த
பணிகளும் நடக்கவில்லை என சிலர் கூறி வருவதை யாரும் நம்ப வேண்டாம் என
கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு சேர்மன் சுப்ரமணியன் தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.