காஜியாபாத் :""வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கும், எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை,'' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், உ.பி., மாநிலம், பரூக்காபாத் லோக்சபா தொகுதியின், காங்., எம்.பி.,யுமான, சல்மான் குர்ஷித், காஜியாபாத்தில் நடந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை தினவிழாவில், நேற்று பங்கேற்றார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இப்போதெல்லாம், வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாதுகாப்பு படையினரில், கணிசமான பகுதியினரை, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு, போதிய அளவில் போலீசாரை ஈடுபடுத்த முடியவில்லை. என்னை பொறுத்தவரை, வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில், உடன்பாடு இல்லை. இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க கூடாது. எனக்கும், எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை.
பாகிஸ்தான் பிரதமர், அஷ்ரப்பின் இந்திய சுற்றுப் பயணம், அரசு முறை சுற்றுப் பயணம் அல்ல; அவரின் தனிப்பட்ட பயணம். இந்தியா வந்த, பாக்., பிரதமருடன், அரசு ரீதியிலான பேச்சு எதுவும் நடத்தவில்லை.வழிபாட்டுக்காக வரும் ஒருவருக்கு, அனுமதி அளிப்பது என்பது, வழக்கமாக பின்பற்றப்படும் விஷயம். இதில், சர்ச்சையை ஏற்படுத்தக் கூடாது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில், ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது.நீண்ட காலத்துக்கு பின், இதில் முடிவு தெரியும். முதலில், இதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். அதன்பின், அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.