விருதுநகர்: மது விற்பனை, 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்ட, விற்பனையாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; "எப்படியாவது விற்க வேண்டும்' என, அதிகாரிகளும், "எப்படி விற்பது, வழி தெரியல' என, ஊழியர்களும் புலம்பி தவிக்கின்றனர்.
தமிழகத்தில், 6654 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், 2012-13 க்கான விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உயர் அதிகாரிகள், தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இலக்கு முடிய இன்னும்,19 நாட்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு பகுதியிலும், விற்பனையாளர்கள் கூட்டம் நடக்கிறது.இதில், "வழக்கத்தை விட,30 சதவீதத்திற்கு மேல் "சரக்கு' களை கொள்முதல் செய்ய வேண்டும். எப்படியாவது, இலக்கை எட்டி ஆக வேண்டும்' என, கட்டாயப்படுத்துகின்றனர். சரக்கு விற்றாலும், விற்காவிட்டாலும் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு, விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சரக்குகள் தேக்கத்தால், இருப்பு வைக்கவும் இடம் இல்லாமல் தவிக்கின்றனர். இது தொடர்பான கூட்டங்களில், எதிர்த்து குரல் கொடுக்கும் விற்பனையாளர்கள், காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளப்படுகின்றனர்.
விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது: இலக்கை எட்ட, "என்ன செய்வீர்களோ தெரியாது; கூடுதல் சரக்கு விற்றே ஆக வேண்டும்' என, அதிகாரிகள், "டார்ச்சர்' செய்கின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் விற்பனையாளர்கள் பழி வாங்கப்படுகின்றனர் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொரு மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகள் ( மகளிர் கல்லூரிகள் உட்பட ) எல்லாவற்றிலும் போய் குடிப்பதால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை பற்றி எடுத்துரைக்க வேண்டும்
அரசுக்கு வருமானம் வர அனைவரும் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்
அப்போ தான் உங்களுக்கு விலையில்லா ரப்பர் , கலர் பென்சில் முதலியவை கிடைக்கும் என்று விளக்கமளிக்க வேண்டும்
(அப்புறமா இத்திட்டத்தை உயர்நிலை பள்ளிகளுக்கும் , ஆரம்ப பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் )
தமிழ் நாட்டு மக்கள் தொகையில் ஆண்களில் 40 சதவீதம் பேரும்,பெண்களில் 95 சதவீதம் பேரும் தற்போது குடிக்காமல் உள்ளனர். இவர்களையும் குடிக்க பழக்கி விட்டால், டாஸ்மாக்கில் மது விற்பனை அமோகமாக நடக்கும்.அரசின் மது விற்பனை இலக்கையும் எளிதில் எட்டிவிடலாம். இலவசங்களையும் வாரி வாரி வழங்கி, வாக்கு வங்கி அரசியலை வலுப்படுத்தலாம். மது விற்பனை இலக்கு என்ற பெயரில், தமிழகத்திலுள்ள சின்னஞ்சிறார் அனைவரையும் குடிகாரர்கள் ஆக ஆக்கும் முயற்சியை தயவு செய்து அரசு கைவிட வேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.