செங்கல்பட்டு - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை திட்டம்: அவகாசம் கேட்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

செங்கல்பட்டு - திண்டுக்கல் இரட்டை அகல ரயில் பாதையில், பாலங்களின் கட்டுமானப் பணிகள், 60 சதவீதம் அளவில் முடித்து, இறுதிக் கட்டப் பணிகள் பரவலாக நடக்கின்றன. பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்தினர், மேலும் ஒன்றரை ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளனர்.

செங்கல்பட்டிலிருந்து, விழுப்புரம் வழியாக திண்டுக்கல் வரை (325 கி.மீ) இரட்டை அகல ரயில் பாதைப் பணிகள் நடக்கிறது.


செங்கல்பட்டு - விழுப்புரம்:

செங்கல்பட்டு - விழுப்புரம் வரை (105 கி.மீ), 2008ம் ஆண்டு பணிகள் துவங்கின. இதில், 19 பெரிய பாலங்கள், 300 சிறு பாலங்கள் கட்டும் பணிகளை, ஏ.ஆர்.எஸ்.எஸ்., கட்டுமான நிறுவனத்தினர் செய்கின்றனர். செங்கல்பட்டு அருகே, 725 மீட்டர் நீளமுள்ள பாலாற்று பாலத்தில், 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. கருங்குழியில், 300 மீட்டர் நீளமுள்ள கிளியாற்றுப் பாலத்தில், 85 சதவீதம் பணிகளும், விழுப்புரம் நெடி மொழியனூர் அருகே, 150 மீட்டர் நீளமுள்ள தொண்டியாற்றில், 75 சதவீதம் பணிகளும் முடிந்துள்ளன. பேரணி அருகே சங்கராபரணி ஆற்றில், 250 மீட்டர் நீளமுள்ள பாலத்தில், 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.


விழுப்புரம் - திண்டுக்கல்:

விழுப்புரம் - திண்டுக்கல் இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள், ஆர்.வி.என்.எல்., மேற்பார்வை யில், 2010 அக்டோபரில் துவங்கியது. இந்த மார்க்கத்தில் பணிகளை, 2013ம் ஆண்டில் முடிக்க வேண்டும். பாலம் கட்டும் பணிகளை, சிம்லக்ஸ் கட்டுமான நிறுவனமும், மண் பாதை அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகளை எல்.அன்.டி., நிறுவனமும் செய்கின்றன. விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 12 பெரிய பாலங்கள், 40 சிறு பாலங்கள் உட்பட, 52 பாலங்கள் உள்ளன.


பெண்ணையாற்று பாலம் (500 மீட்டர்):

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்று பாலத்தில், 29 பில்லர்கள் அமைத்து, 26 கருடர்கள் பொருத்தியுள்ளனர். இந்த ஆற்றில், அடிக்கடி தண்ணீர் வரும். இதனால் கூடுதல் காலம் ஆகிறது. ஒரு கர்டர் பொருத்த இரண்டு மாதம் ஆகிறது. 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிய, ஐந்து மாதங்களாகும்.


மலட்டாறு பாலம் (290 மீட்டர்):

தண்ணீர் அதிகம் வராத மலட்டாற்றில், 17 பில்லர்கள் அமைத்து, 16 கர்டர்கள் பொருத்தியுள்ளனர். இந்த பகுதி, வனத் துறை பராமரிப்பில் இருப்பதால், அனுமதி பெறுதல் உள்ளிட்ட பிரச்னைகளால் ஓராண்டு பணிகள் நடக்கவில்லை.


கெடிலம் பாலம் (200 மீட்டர்):

கெடிலம் பாலத்தில், 11 பில்லர்கள் அமைத்து கருடர்கள் பொருத்தி இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றன. இணைப்பு பணிகள் முடிய வேண்டும்.


மணிமுக்தாறு பாலம் (200 மீட்டர்):

விருத்தாசலம் மணிமுக்தாறு பாலத்தில், 11 பில்லர்கள் அமைத்து கர்டர்கள் கட்டும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. 40 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.


வெள்ளாற்று பாலம் (380 மீட்டர்):

பெண்ணாடம் வெள்ளாற்றுப் பாலத்தில், 22 பில்லர்கள் முடிக்கப்பட்டு உள்ளன. 21 கர்டர்கள் அமைக்க வேண்டும். 40 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.


மருதையாறு பாலம் (500 மீட்டர்):

அரியலூர் அடுத்த மருதையாற்றில், 32 பில்லர்களுடன் பாலம் கட்டும் பணிகள் முடித்து, லோடு டெஸ்ட் முடிந்தது. பாலத்தில் இணைப்பு வேலைகள் நடக்கின்றன. இங்கு, 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.


கொள்ளிடம் (854 மீட்டர்):

கொள்ளிடம் ஆற்றில் மிக பெரிய பாலம் அமைகிறது. 46 பில்லர்களும், 45 கர்டர்களும் அமைய உள்ளது. பில்லர்கள் முடிந்து, கர்டர்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 22 கர்டர்கள் முடிந்துள்ளன.இங்கு அடித்தள பணியின்போது தண்ணீர் சுரந்ததால், தண்ணீரை உறிஞ்சும் நவீன கட்டமைப்பை பயன்படுத்தி பில்லர்கள் அமைத்தனர். 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன.


காவிரி (500 மீட்டர்):

இங்கு, 31 பில்லர்கள் அமைத்து, 30 கர்டர்கள் பொருத்த வேண்டும். தற்போது, பில்லர்கள் முடிக்கப்பட்டு உள்ளன. கரைப்பகுதியில் தற்போது, 4 கர்டர்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்தப் பணிகள் முடிந்து ஏப்ரலில் கர்டர்கள் பொருத்தும் வேலை துவங்கும். விழுப்புரத்தில் பெண்ணையாற்றில் பணி முடிந்து, அங்கிருந்து உபகரணங்கள் கொண்டு வந்து, காவிரி ஆற்றின் கர்டர்கள் கட்டப்படும் என, தெரிவிக்கின்றனர்.


கால அவகாசம் தேவை:

விழுப்புரம் - திண்டுக்கல் இடையே உள்ள, 52 பாலங்களில், 20 பாலங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த மார்க்கத்தில், பாலம் கட்டும் பணிகள் இந்த ஆண்டில் முடிய வேண்டும். ஆனால் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்தினர், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிகிறது. ரயில்வே நிர்வாகம் அளிக்கும் அவகாசத்தின் அடிப்படையில், பணிகள் துரிதமாக நடக்கும். இரு வழிப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க, கால அவகாசம் வழங்கி, ரயில்வே நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே தென் மாவட்ட பயணிகளின்எதிர்பார்ப்பு.

- நமது நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - Chennai,இந்தியா
12-மார்-201318:54:34 IST Report Abuse
sethu கேரளா. மங்களூர் டு கொச்சின் கொங்கண் ரயில்வே அத்தனை மலைகளையும் குடைந்து ந்பாலங்கள் அமைத்து தண்டவாளங்களையும் அமைக்க மத்திய அரசு எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 3 வருடங்கள் மட்டுமே ஆனால் கரூர் திண்டுகள் சாதாரண சமதளத்தில் வெறும் 70 இலோமேடேருக்கு 12 ஆண்டுகள் நாம இதையும் நம்பித்தான் ஆகணும் ஏனெனில் மக்கள் சேவைக்கு நாம் எம் பி கலை தேர்ந்தெடுக்கவில்லை கொள்ளையடிக்கத்தான் அவர்கள் மத்திய அரசில் சேருகின்றனர் .இப்படியே எத்தனை 1.5 வருடங்கள் செல்லுமோ யார்கண்டது.
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
12-மார்-201314:47:30 IST Report Abuse
dori dori domakku dori தமிழ்நாட்டுல இவளவு ஆறுகளா ............அடேங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
12-மார்-201307:23:19 IST Report Abuse
N.Purushothaman தோராயமா இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கொடுங்க......அப்பக் கூட அவிங்க முடிக்க மாட்டாங்க....கால தாமதத்திற்கு பெனால்டி முறையை கடுமையாக செய்வது தான் இதற்கெல்லாம் தீர்வாக அமையும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்