Advertisement
மேலும் இரு தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்திக்க திட்டம்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013,23:50 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 12,2013,00:27 IST

தே.மு.தி.க.வில், ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்து அரசுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில், மேலும் இருவர், அதே பாணியை பின் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தன் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். அரசுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பேசியதாக, பல்வேறு மாவட்ட கோர்ட்களில், விஜயகாந்த் மீது, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஒவ்வொரு கோர்ட்டிலும், விஜயகாந்த் ஆஜராகி வருகிறார். இருப்பினும், அரசு மீதான தாக்குதல்களை, அவர் நிறுத்தி கொள்ள வில்லை. இந்நிலையில், விஜயகாந்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக, முதல்வரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். முதலில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜன், முதல்வரை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அவருடன் மற்றொரு, எம்.எல்.ஏ., தமிழழகன் சென்றார். இருவரும், தொகுதி பிரச்னை தொடர்பாக முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தனர்.

இதேபோல, விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோரும், முதல்வரை சந்தித்தனர். முதல்வரை சந்தித்த நான்கு பேரும், அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும், விஜயகாந்துக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.ஆனால், இவர்களை கட்சியில் இருந்தும், தே.மு.தி.க., தலைமை நீக்கவில்லை. மாறாக, சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ.,விடம் இருந்து, கட்சியின் பொருளாளர் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் செங்கம் தொகுதி, எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், முதல்வரை சந்தித்து பேசினார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி எடுத்தததற்காக, முதல்வரிடம் நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார். அவர் மீதும், கட்சி தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மேலும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தே.மு.தி.க., தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், கட்சி நிர்வாகிகள் திணறி வருகின்றனர். இருவரில் ஒருவர் பெண் எம்.எல்.ஏ.,வாக இருக்க கூடும் என்ற செய்தி கசிந்துள்ளது.கட்சி அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் விஜயகாந்த், அந்த பெண் எம்.எல்.ஏ.,வை கண்டித்துள்ளார். அதில் இருந்து அதிருப்தியில் உள்ள அந்த பெண் எம்.எல்.ஏ., முதல்வரை சந்திக்ககூடும் என கூறப்படுகிறது. ஆனால், அவரது நட்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, முதல்வரை சந்திக்கும் திட்டமில்லை என கூறப்படுகிறது. இதேபோல, தென் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., அல்லது சென்னையை ஒட்டிய மாவட்டத்தை, எம்.எல்.ஏ., ஒருவரும், முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வாக முதல்வரை சந்திக்க செல்லும் நிலையில், இதை கட்டுப்படுத்த என்ன செய்வது என தெரியாமல், தே.மு.தி.க., தலைமையும் குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், தேர்தலில் வெற்றிப் பெற்றால், அதன்பிறகு அரசு ஆதரவுடன் ஏதாவது கான்ட்ராக்ட், தொழில் செய்து சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற கண்ணோட்டத்தில் செலவு செய்தனர். ஆனால், கூட்டணியில் இருந்து, "கழற்றி' விடப்பட்டதால், அவர்கள் போட்டது பொய் கணக்கானது. இதனால், மிகுந்த பண நெருக்கடிக்கு, பல, எம்.எல்.ஏ.,க்கள் ஆளாகி உள்ளனர்.அதை புரிந்துக்கொள்ளாமல், கட்சி தலைமையும் எம்.எல்.ஏ.,க்களாக உள்ள மாவட்ட செயலர்களுக்கு பணச்செலவுகளை அதிகரித்து வருகிறது. கட்சி தலைமையாவது, எம்.எல்.ஏ.,க்களின் வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். அவ்வாறு செய்தால், மட்டுமே, அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,களை அமைதிப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர்


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (27)
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
13-மார்-201313:47:09 IST Report Abuse
T.C.MAHENDRAN கூடிய விரைவில் விஜயகாந்தும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவது நல்லது. பிழைக்கத்தெரிந்த சரத்குமாரிடம் பாலபாடம் கறக்கவேண்டும் இவர் .
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
v j antony - coimbatore,இந்தியா
12-மார்-201318:17:52 IST Report Abuse
v j antony விஜயகாந்தின் தவறான அரசியல் திட்டமிடல் தான் இதற்கு காரணம் இன்று பதவிக்கு வரும் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே .போட்ட பணத்தை எடுக்க முடியாததால் இவர்கள் அணி தாவுகின்றனர் .விஜயகாந்த் இனிமேல் கட்சியில் பண ஆசை உள்ளவர்களுக்கு இடம் கொடுக்க கூடாது .மக்கள் பணி செய்ய நினைக்கும் நல்லவர்க்காகளுக்கு இடம் கொடுக்கவேண்டும்
Rate this:
7 members
1 members
5 members
Share this comment
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
12-மார்-201317:29:21 IST Report Abuse
JALRA JAYRAMAN கேமரா இல்லாமல் நடிக்க கற்று கொள்ள வேண்டும் விஜய காந்த அவர்களே அது தான் அரசியல்
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Mohandhas - singapore,சிங்கப்பூர்
12-மார்-201317:16:36 IST Report Abuse
Mohandhas "காற்றுள்ள போதே தூற்றி கொள் ....."
Rate this:
1 members
2 members
1 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
13-மார்-201318:34:40 IST Report Abuse
KaNaGaRaJ. S... போட்ட முதலை எடுக்க தான் அனைவரும் அணி தாவுகிறார்கள் எரிகிறதை தடுத்தால் கொதிப்பது தானாக அடங்கும் ...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
12-மார்-201306:18:20 IST Report Abuse
villupuram jeevithan தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு இவர் குரல் கொடுத்து ஒரு நல்ல எதிர்கட்சியாக இருந்திருந்தால் நிலைமை இப்படி ஆயிருக்காது. தலைமை செயல்படாதது தான் காரணம். குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சி பதவி கொடுப்பதை நிறுத்தவேண்டும். ஆனால் அது இவரால் முடியாதது.
Rate this:
67 members
2 members
65 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
13-மார்-201318:35:33 IST Report Abuse
KaNaGaRaJ. S... என்னவெல்லாம் செய்துதான் பார்கிறார் கோர்ட்டுக்கும் நடையாய் நடக்கிறார் அவருக்கு அனுபவம் கம்மி ...
Rate this:
3 members
1 members
0 members
Share this comment
naagai jagathratchagan - Nagapattinam ,இந்தியா
12-மார்-201304:40:34 IST Report Abuse
naagai jagathratchagan ஆட்டம் ...ஆட்டம் ...ஆட்டம் ...ஆட்டத்திலே பல வகையுண்டு ..அதில் அரசியல் கூத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு ...துட்டு பார்க்கும் நேரத்தில் ..தொட்டு பார்க்கமுடியதுன்னா ...தாங்கமுடியாது சாமி ...."வெள்ளிப்பணம் பையிலே வேடிக்கை தேவையில்லை ரெடியா ....சக்தி எங்கள் கையிலே ..சகலமும் பையிலே ..தாமதம் தேவையில்லை ரெடியா "என்கிறார் பட்டுக்கோட்டையார்
Rate this:
2 members
1 members
25 members
Share this comment
Skv - Bangalore,இந்தியா
12-மார்-201304:05:08 IST Report Abuse
Skv ஜெயிக்கறதுக்கு ஒரு கச்சி அப்பறம் கச்சிமருவதேல்லாம் வெறும் வேஷம் கொள்கையே இல்லாம செயல்படரதைத்தான் காட்டுது. mla பதவி பூட்டால் next என்ன என்ற நிலைபாடுதான் இதுகளை சேர்க்கும் அதிமுகவும் லேசுப்பட்டது இல்லே .
Rate this:
2 members
0 members
34 members
Share this comment
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
12-மார்-201303:34:33 IST Report Abuse
Sivakumar Manikandan சும்மாவே பயந்துக்குட்டு இருக்காரு நம்ம கருப்பு MGR ..........அடுத்த MLA தேர்தல் வரைக்கும் கட்சி இருகட்டுமப்பா............சும்மா பயமுருதாதின்கா ..............அப்பறம் பறந்து பறந்து அடிப்பாரு ......ஒரு கால சுவத்துல வச்சிக்கிட்டு ஒரு காலுல பறந்து அடிப்பாரு ...........
Rate this:
45 members
2 members
49 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-மார்-201303:12:48 IST Report Abuse
தமிழவேல் எதிர்கட்சிதலைவரும் மேலும் சிலரோடு முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்று தேதி கேட்டு பலமாதங்கள் ஆகின்றனவே... அவருக்கு பின்னால் வருபவரை முதலில் கட்சியில் சேர்த்து கொள்வது சரி இல்லை...
Rate this:
11 members
2 members
66 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
13-மார்-201318:36:35 IST Report Abuse
KaNaGaRaJ. S... அடுத்த தேர்தலுக்கு சந்திப்பார் ...
Rate this:
2 members
1 members
0 members
Share this comment
Vettri - Coimbatore,இந்தியா
12-மார்-201303:01:15 IST Report Abuse
Vettri இவர்களுக்கு நன்றாகவே தெரியும் MLA ஆவது இது தான் முதலும் கடைசியும். விட்டதை சீக்கிரம் பிடிக்க வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி இதை தவிர வேறு என்ன?
Rate this:
3 members
0 members
64 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.