UP govt expense 12 crore for welfare schemes | 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு | Dinamalar
Advertisement
8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ: உ.பி.,யில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான, உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான, விழாக்களுக்காக, 12 கோடி ரூபாயை, அம்மாநில அரசு செலவிட்ட, பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, வேலை வாய்ப்போற்றோருக்கு, உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, காசோலைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு, 8 கோடி ரூபாய்.

இந்நிலையில், உதவித் தொகை வழங்குவதற்காக, கடந்தாண்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விழாக்கள் நடத்தப்பட்டன. "இந்த விழாக்களுக்காக, எவ்வளவு தொகை செலவிடப்பட்டது? அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது' என்பது பற்றிய தகவலை தெரிவிக்கும்படி, ஊர்வசி சர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:கடந்தாண்டு, லக்னோ உள்ளிட்ட பல இடங்களில், வேலை வாய்ப்போற்றோருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான விழாக்கள் நடத்தப்பட்டன. இதற்காக, 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.இவ்வாறு, அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உ.பி., மாநில காங்., மூத்த தலைவர், ரீட்டா பகுகுணா கூறியதாவது:உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் மொத்த மதிப்பீடே, 8 கோடி ரூபாய் தான். ஆனால், இந்த திட்டங்களுக்கான விழாக்களை நடத்துவதற்காக, 12 கோடி ரூபாயை, உ.பி., மாநில அரசு செலவிட்டுள்ளது.இதுபோன்ற சம்பவம், வேறு எங்கும் நடக்கவில்லை. பொதுமக்களின் வரிப் பணத்தை, சமாஜ்வாதி அரசு, எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்துகிறது என்பதற்கு, இது, சிறந்த உதாரணம். விரைவில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்காக, இதுபோன்ற வெற்று விளம்பர விழாக்களை, சமாஜ்வாதி கட்சியினர் நடத்துகின்றனர்.இவ்வாறு, ரீட்டா பகுகுணா கூறினார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
15-மார்-201314:11:16 IST Report Abuse
Uthukkaattaan செலவை பற்றியே பேசுகிறீர்களே . வருமானத்தை பற்றி யாரும் பேசவில்லையே. மொத்தத்தில் இரண்டு பக்கமும் ஊழல்தான். யார் சுண்டெலி, யார் பெருச்சாளி என்பதில்தான் சண்டை. வரி குறைவாக வசூலாகியுள்ளது என கவலைப்படும் ப.சி தில் இருந்தால் எல்லா எம்.எல்.எ , மந்திரி , எம்.பி வீடுகள், தொடர்புடையவர்கள் வீட்டிலும் உடனடியாக ரைட் செய்யட்டும். சுவிஸ்சில் பதுக்கியது போக , சிக்கும் மீதமுள்ள பணத்தில் இந்தியாவை பணக்கார நாடாக்கி விடலாம். என்ன ஆனால் ப.சி. குடும்பமும் ஏழை குடும்பமாகி விடும். அம்பானிகள் கூட தொழில் செய்து சம்பாதிகிரார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அசிங்கமாக சம்பாதிகிறார்கள். R சுவாமிநாதன் திண்டுக்கல்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
13-மார்-201311:19:10 IST Report Abuse
mirudan s
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
12-மார்-201318:44:58 IST Report Abuse
naagai jagathratchagan சுண்டைக்காய் கால் பணம்...... சுமை கூலி முக்கால் பணம் ..இதுதான் ...உழைப்பவனுக்குத் தெரியும் பணத்தின் மதிப்பு ...உட்க்கார்ந்து தின்பவனுக்கு என்ன தெரியும் ...வலியும்...வேதனையும் அதை அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் ...இது கலி காலம் ...இப்படிதான் நடக்கும் ...
Rate this:
0 members
0 members
326 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மார்-201300:07:38 IST Report Abuse
தமிழ்வேல் இவுங்களுக்கு ஜெயில்ல கலி காலம் கிடைக்கும் .....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
vedachalam.kanchipuram - kanchipuram,இந்தியா
12-மார்-201315:59:58 IST Report Abuse
vedachalam.kanchipuram இவர்களுக்கு ஒட்டு போட்டவர்கள்லுக்கு நல்லா வேண்டும் ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
12-மார்-201306:19:48 IST Report Abuse
villupuram jeevithan இது தான் கடந்த ஐந்து ஆண்டுகளாய் தமிழகத்தில் நடந்தன, டிவி வழங்கும் விழா என்று?
Rate this:
126 members
0 members
47 members
Share this comment
Pradeep Kumar - Bangalore,இந்தியா
12-மார்-201317:32:47 IST Report Abuse
Pradeep Kumarஅப்போ, கடந்த ஒரு ஆண்டு நடந்த விழாகளுக்கு ? ...
Rate this:
5 members
0 members
1 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
12-மார்-201306:04:34 IST Report Abuse
N.Purushothaman எட்டு கோடி ரூபாய் பல கட்டங்களாக பல இடங்களில் செய்யும் போது ஒவ்வொரு விழாவிற்கும் செலவு ஆகும்.....முதல்வர் என்கிற முறையில் இதை அவர் முன் கூட்டியே உணர்ந்து ஒரே விழாவாக ஒரே இடத்தில செய்து இருக்கலாம்.... என்ன செய்வது....நமக்கு கிடைதுள்ளவர்கள் அப்படி......
Rate this:
3 members
0 members
28 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
12-மார்-201305:05:30 IST Report Abuse
தமிழ் சிங்கம் சபாஷ். நல்லவேளை எட்டு கோடியை திங்க, பன்னிரண்டு கோடி செலவிடப்படவில்லை. உதவி செய்யத்தான் செலவிட்டு உள்ளார்கள். நல்ல முன்னேற்றம்.
Rate this:
6 members
0 members
12 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மார்-201300:04:55 IST Report Abuse
தமிழ்வேல் 8 கோடிய தந்துட்டு விழாவுக்கும் அவுங்க கிட்டேயே காசு வாங்கி இருப்பாங்க... இங்க ஓசி மாங்கல்யம் காசி வாங்க காசு தரணும்னு ஒரு அம்மா சொன்னேதே .....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Unmai Valavan - Choza Nadu,இந்தியா
12-மார்-201304:55:42 IST Report Abuse
Unmai Valavan அகி உனக்கு தெரிலன்ன எங்க கட்டு மரம்,பொன்னீன் செல்விட கேட்டு தெரிஞ்சுக்க - 8 கோடின்னா - 2 கோடி செலவு பண்ணனும் மீதி ஆறு கோடி பாக்கெட்ல போட்டுக்கணும் அத விட்டு இப்டி எல்லாம்...................
Rate this:
138 members
0 members
49 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
12-மார்-201302:50:11 IST Report Abuse
Sekar Sekaran அவர்களாவது ஏதோ உதவி திட்டம் என்று சொல்லி காரணம் சொல்லலாம்..ஆனால் கட்டிமுடிக்கப்படாத..ஓர் கட்டிடத்திற்கு..திறப்பு விழா என்கிற பெயரில்..இரண்டு கோடியில் தற்காலிக "டூம்" போட்டு வெட்டி செலவு செய்ததும்...நானூறு கோடியில் செம்மொழி விளம்பரதிற்க்காக செய்ததும்..அதிலே அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் முதல்வரிசையில் அமர்ந்து பந்தா செய்ததும்..நித்தமும் பாராட்டுவிழா என்று காக்கை கூட்டத்தில் கருணா அவர்கள் "திளைத்து" இருந்ததையும் பார்த்த நமக்கு இது ஓர் அதிர்ச்சி செய்தியாக தெரியவில்லை.
Rate this:
211 members
3 members
67 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மார்-201300:00:52 IST Report Abuse
தமிழ்வேல் நாம முதலாண்டு சாதனை ன்னு விளம்பரத்துக்கு மட்டும் 100 கோடி செலவு பண்ணலியா ?...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Kannan - Madurai,இந்தியா
12-மார்-201301:00:02 IST Report Abuse
Kannan இங்க மட்டும் என்ன வாழுதாம்...உழவர்களுக்கு சில ஆயிரங்களை உதவி அளித்ததற்கு 50 கோடி செலவு செய்து விழா எடுக்கிறார்கள்.
Rate this:
15 members
1 members
191 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மார்-201300:02:46 IST Report Abuse
தமிழ்வேல் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, பயிர் இல்லை, தற்கொலையால் உயிரும் இல்லை ஆனால் இந்த நிலையில் பாராட்டு தேவையானது......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்