திருப்பூர்:"டெசோ' அமைப்பு சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தும் கூட, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வந்ததால், திருப்பூரில் 90 சதவீத பனியன் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின.
திருப்பூரில் "டெசோ' அமைப்பு சார்பில், நேற்று பொது வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலான பேக்கரிகள், டீக்கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஆனால், அடிக்கடி வேலை நிறுத்தம் நடத்தப்படுவதால், அதிருப்தி அடைந்த பனியன் தொழில் துறையினர், வழக்கம்போல் பனியன் நிறுவனங்களை இயக்கினர்.ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், ஒப்புக்கொண்ட நேரத்துக்குள் பனியன் ஆடைகளை அனுப்ப வேண்டியது கட்டாயம். இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் திடீர் போராட்டங்களால், ஒட்டுமொத்த பனியன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தி வைக்கும்போது, பனியன் ஆர்டர்களுக்கான சரக்குகளை, கப்பலில் அனுப்ப முடியாமல், விமானம் மூலமாக அனுப்ப நேரிடுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளையும், ஏற்றுமதியாளர்கள் ஏற்க வேண்டியுள்ளது.
கடந்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில், தொழிலாளர்கள் அதிகம் பங்கேற்றதால், 20ம் தேதி முழு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளில், சில நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. இது போல் தொழிலாளர்கள் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருவதால், அடிக்கடி நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு குறைந்து வருகிறது.விடுமுறை நாட்கள் நீங்கலாக, மற்ற நாட்களில் உற்பத்தியை நிறுத்துவதற்கு, உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் தயாராக இல்லை. நேற்று "டெசோ' அமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தும், பனியன் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, 90 சதவீத பனியன் உற்பத்தி மற்றும் சார்பு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. சில நிறுவனங்கள் மட்டும் மூடப்பட்டிருந்தன. சில நிறுவனங்கள் மெயின் கேட்டை மட்டும் மூடியிருந்தன; நிறுவனத்துக்குள் வழக்கம்போல் பணிகள் நடந்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இத்தகைய வேலைநிறுத்தங்களையும், கடை அடைப்பு போராட்டங்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியா போன்ற பொருளாதரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளுக்கு இவை தேவை இல்லை என்றே கருதுகிறேன். இப்படிப்பட்ட போராட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. உடனடி பாதிப்பு தொழில்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தான். மேலும், இதனால் ஏற்படும் நஷ்டம் மக்கள் தலையில் தான் வரியாக விடியும். பந்த், கடை அடைப்பு, இவற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அத்துடன், இத்தைகைய போராட்டங்களால் எதிர்பார்க்கப்படும் பயனும் கிடைக்கும் என்ற உறுதியும் இல்லை. இதில் ஆளும் கட்சி நடத்தினால் ஆஹா ஓஹோ எதிர்கட்சி நடத்தினால் புஸ் என்று வர்ணிப்பது மகா கேவலம். மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?
இங்கு யாராவது விளக்கம் அளிக்கவும் . வேலை நிறுத்தத்தால் இலங்கையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது . இதனால் இங்குள்ள தினக்கூலிகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் . இவர்களின் ஒரு நாள் வருமானம் வீணாகிறது . அணைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு ஆக்கப்பூர்வமான நெருக்கடியை மத்திய அரசுக்கு கொடுத்தால் மட்டுமே எதாவது நிகழும் . முதலில் நாம் அரசியல்கட்சி தலைகள் ஒற்றுமையாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் மக்களின் ஆதரவு கிடைக்கும் . அதைவிட்டுவிட்டு தேவை இல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது வெட்டி வேலை .
உள்ளூர் பந்துகளாலும் , மாநில அரசு பந்துகளாலும் ,மத்திய அரசு பந்துகளாலும் ... அடிக்கடி பந்தாடப் படுகிற திருப்பூர், அவ்வபோது முடங்கி நாட்டிற்கு பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப் பட்டு , அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போடுகிறது என்றால் அது மிகையன்று.. இதெற்கெல்லாம் விடிவு இன்றோ நாளையோ அல்லது உண்டோ இல்லையோ யாரறிவார்?.. இந்த மாதிரி நாட்களில் கொஞ்சம் லாபம் பார்க்கிறவர்கள் யாரெனில் , தள்ளு வண்டியில் போண்டா பஜ்ஜி சுட்டு விற்பவர்கள் மட்டுமே..,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.