இலங்கை அரசை கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், "டெசோ' அமைப்பின் சார்பில், "பந்த்' போராட்டம் நேற்று நடந்தது. இதில், சாலை மறியலில் ஈடுபட்ட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உட்பட, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை. ரயில்கள், பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின; பெரும்பான்மையான கடைகள் திறந்திருந்தன.
"டெசோ' அமைப்பின் சார்பில், நேற்று தமிழகம் முழுவதும் காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, "பந்த்' போராட்டம் நடந்தது.இந்த போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால், "பந்த்' பேராட்டத்தை பற்றி பொதுமக்கள் கண்டு கொள்ளாமல், வழக்கம் போல, தங்களது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ரயில்கள், அரசு போக்குவரத்து பஸ்கள், ஆட்டோக்கள் அனைத்தும் வழக்கம் போல ஓடின. அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான, தி.நகர், பாண்டிபஜார், பாரிமுனை, பெரம்பூர், புரசைவாக்கம் போன்ற பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
விடுதலை:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா ? இலங்கையில் அத்தனை மனித உயிர்கள் பலியானபோது நீங்கள் தானே ஆட்ச்யில் மத்திய மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்திர்கள். பாராளமன்ற தேர்தல் நெருங்குவதால் தான் தமிழன் ஞபாகம் வருதோ ? உங்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார். வருகின்ற தேர்தலுடன் காணமல் போய் விடுவீர்கள். வைகோ போன்ற உண்மையான, நேர்மையானவர்களை தான் மக்கள் ஆதரிக்க போகிறார்கள். வைகோவின் மதிமுக தான் உண்மையான திமுக
திருச்சியில் நடந்த டெசோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், கையில் வைத்திருந்த பேனர்களில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பெயர், பாலகிருஷ்ணன் என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கவனிக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹி ஹி ஹி .. வாழ்க தமிழகம்
மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்து கொண்டு, கருணா அவர்கள் தமிழ் நாட்டு வீதிகளில் பந்த் நடத்தி மக்களின் நாடியை பிடித்து பார்த்தார். ஒரு காலத்தில் கருணா நடத்திய போராட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த தமிழ் மக்கள், இந்த பந்த் திற்கு கருணா எதிர் பார்த்த ஆதரவு கொடுக்கவில்லை. இது கருணாவின், அரசியல், கொள்கைகள்,எண்ணங்கள், செயல்பாடுகள் அத்தனைக்கும் கிடைத்த தோல்வி பரிசு என்றுதான் கொள்ளவேண்டும். அதே சமயம் ஈழ தமிழர்களுக்காக, மாணவர்கள் நடத்தும் உண்ணா விரத போராட்டம், கருணா நடத்திய பந்த் ஐ விட, பல மடங்கு அர்த்தம் உள்ளது. ஈழ தமிழர் பிரச்சனை நினைத்த மாத்திரத்தில் தீர்க்க கூடியது அல்ல. அதற்கு பல கட்டங்களை தாண்ட வேண்டும். மாணவ செல்வங்கள், உணர்ச்சி வசப்படாமல், தங்களின் எதிர்காலம் கருதி, தகுந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த டெசோ அமைப்பு,,, பந்த்,,, போராட்டம்,,, சிறை செல்லுதல்,,, இலங்கை தமிழருக்காக இந்த திமுகவினர் வடிக்கும் நீலி கண்ணீர் எல்லாம் இலங்கை தமிழர்களின் சமாதியில் வைக்கப்படும் பூக்கள் போல தான். இதனால் அந்த இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இருக்காது. இலங்கை தமிழர்கள் உயிரோடு இருக்கும்போதும் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போதும் இவர்கள் தான் ஆட்சியிலும் இருந்தார்கள்,, எதையாவது செய்ய முடியும் என்ற நிலை இருந்தும் ஒன்றுமே செய்யாமல் பணம் மற்றும் பதவிக்காக நாக்கை தொங்கபோட்டு கொண்டு டில்லிக்கும் சென்னைக்கும் பறந்தார்கள். தற்போது ஆட்சியில் இல்லை அதனால் எந்த வித RESPONSIBILITY இவர்களுக்கு இல்லை. மக்கள் அவதி பட்டால் அது அரசு பிரச்சினை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அது அரசு பிரச்சினை என்று இவர்கள் நினைத்து கொண்டு தற்போது முழு வீச்சில் இதை போன்ற தேவை இல்லாத போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இல்லாத இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று கூறி கொண்டு இங்கே இருக்கும் தமிழக தமிழர்களை வாட்டுகிறார்கள். ALMOST எல்லா இலங்கை தமிழர்களும் இறந்த பிறகு டெசோ அமைப்பு மாநாடு நடத்தினார்கள் இதோ அவர்களுக்காக பந்த் நடத்தி அதை வெற்றி என்று வேறு பறைசாற்றுகிறார்கள். இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை என்பது CONFIRM NEWS தான். ஆனால் மனசாட்சி கூடவா இருக்காது?? இந்த மாதிரி TEMPORARY ஆக சிறை சென்று வருவது என்ன வித போராட்டமோ?? ஒரு வேலை ஏதாவது கணக்கு காண்பிப்பார்களோ? எதிர்காலத்தில் சிறை சென்றவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது சலுகை வழங்கும். அதையும் விட்டு வைக்காமல் வாங்கி கொள்ளலாம் என்ற நினைப்பில் இப்படி செய்கிறார்களோ? யார் கண்டது. யாராவது எடுத்து கூறுங்களே, அப்படி ஏதாவது அரசாங்கம் சலுகை வழங்குமானால் அது நல்ல விஷயங்களுக்கு சிறை சென்றவர்களுக்கு தான் இருக்கும். இதை போல ரௌடித்தனம் செய்து சிறை சென்றவர்களுக்கு சலுகை கிடைக்காது என்று முற்றும் கற்று தெளிந்த திமுக அபிமானிகள் இவர்களுக்கு எடுத்து கூறுங்களேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.